Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டிரம்பை விடுங்க.. பெப்சி vs கோகோ கோலா "வர்த்தக" போர் தெரியுமா! யார் பெஸ்ட்னு அடிச்சு காட்டுங்க

Subscribe to Oneindia Tamil

மும்பை: அமெரிக்க அதிபர் டிரம்ப் இப்போது தனது இஷ்டத்திற்கு உலக நாடுகள் மீது தொடர்ச்சியாக வரிகளைப் போட்டு வருகிறார். டிரம்ப் இதன் மூலம் வர்த்தக போரைத் தொடங்கிவிட்டார் என்று பலரும் விமர்சித்து வருகிறார்கள். இது ஒரு பக்கம் இருக்கச் சத்தமே இல்லாமல் அமெரிக்காவில் இரு முன்னணி நிறுவனங்களாக உள்ள பெப்சி மற்றும் கோகோ கோலா இடையே மோதல் பல காலமாக நடக்கிறது. அது குறித்து நாம் பார்க்கலாம்.

அமெரிக்க அதிபரான டிரம்ப் தான் பதவிக்கு வந்தது முதலே சர்ச்சைகளைக் கிளப்பி வருகிறார். அவர் போடும் ஒவ்வொரு உத்தரவுகளும் சர்வதேச அளவில் பரபரப்பைக் கிளப்புவதாகவே இருக்கிறது. குறிப்பாக உலகின் பல்வேறு நாடுகள் மீதும் வரிகளை விதிக்கப் போவதாக அவர் சமீபத்தில் அறிவித்திருந்தார்.

offbeat World

விளம்பர போர்

இது சர்வதேச அளவில் பரபரப்பைக் கிளப்பியது. பலரும் இதை வர்த்தக போர் என்றே குறிப்பிட்டனர். இது ஒரு பக்கம் இருக்க.. அப்படி அமெரிக்காவில் இரு பெரு நிறுவனங்களுக்கும் இடையே நீண்ட காலமாக ஒரு போர் நடந்து வருகிறது. அதுதான் பெப்சி மற்றும் கோக் நிறுவனங்களுக்கு இடையே நடக்கும் போர்.. இதனை வரத்தகப் போர் என்றும் சொல்லலாம்.. விளம்பர போர் என்றும் சொல்லலாம். கடந்த நூற்றாண்டில் தொடங்கிய இந்த விளம்பர போர் இந்த டிஜிட்டல் யுகத்திலும் தொடர்ந்து வருகிறது. இந்தியாவிலும் கூட இரு தரப்பிற்கும் இடையேயான விளம்பர போர் 1990கள் முதலே தொடர்கிறது.

கடந்த 1996ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் நாடுகளில் நடந்தது. இந்திய மார்கெட்டில் நுழைய இது சரியான வாய்ப்பாக இருக்கும் என்றே பெப்சியும் கோகோ கோலாவும் கருதின. இதனால் இரு நிறுவனங்களுமே உலகக் கோப்பையின் அதிகாரப்பூர்வ ஸ்பான்சர் ஆகத் தீவிர முனைப்புக் காட்டியது. இறுதியில் கோகோ கோலாவுக்கே அதிகாரப்பூர்வ ஸ்பான்சர் ஒப்பந்தம் கிடைத்தது.

கிரிக்கெட் ஸ்பான்ஸர்

அதிகாரப்பூர்வ ஸ்பான்சர் ஒப்பந்தம் கிடைத்தாலும் கூட அந்த விளம்பர போரில் வென்றது என்னவோ பெப்சி தான். உலகக் கோப்பையின் அதிகாரப்பூர்வ ஸ்பான்சர் (Official sponsor)என கோகோ கோலா விளம்பரப்படுத்தியது. அதற்குப் பதிலடி கொடுக்க எதுவுமே அதிகாரப்பூர்வமானது இல்லை என குறிப்பிடும் வகையில் (Nothing official about it) என்ற விளம்பரத்தை ஒளிபரப்பியது. அதிலும் சச்சின் டெண்டுல்கர், வினோத் காம்ப்ளி மற்றும் முகமது அசாருதீன் என டாப் நட்சத்திரங்கள் அனைவரையும் கொண்டு விளம்பரத்தை வெளியிட்டு கவனத்தை ஈர்த்தது.

இந்திய மார்கெட்டில் பெப்சிக்கு இது மிகப் பெரிய பூஸ்ட்டை கொடுத்தது. அந்த விளம்பரத்தைக் குறிப்பிட்டு பெப்சி இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில், "Nothing official about it என்பது வெறும் விளம்பரம் இல்லை.. அது ஒரு கலாச்சார தருணம். சில நேரங்களில், அதிக முயற்சி எடுக்காமல் இருப்பதே நமக்கு வெற்றியைத் தரும் என்பதை உணர்த்தும் தருணம் அது" என்று கூறியிருந்தது.

பதிலடி தரப் போய் மொக்கை வாங்கிய தருணம்

அதேநேரம் எல்லா பதிலடி விளம்பரமும் இதுபோல இருக்கும் எனச் சொல்ல முடியாது. சில நேரங்களில் பதிலடி தருகிறோம் என வெளியிடும் விளம்பரங்களும் கூட சொதப்பலாக முடிந்துவிடும். 1980களில் பெப்சி நிறுவனம் தனது பானங்கள் தான் டெஸ்ட்டில் சிறந்தது என்பதை உணர்த்த ஒரு டெஸ்ட் நடத்தியது. அதாவது மக்களை அழைத்து இரண்டு பானங்களையும் தருவார்கள். எது பெப்சி, எது கோகோ கோலா எனச் சொல்லாமல் இரண்டையும் தருவார்கள். அதைக் குடித்த பெரும்பாலான மக்கள் பெப்சி தான் டேஸ்டில் சூப்பராக இருந்தது என கூறியிருக்கிறார்கள்.

அதையே ஒரு விளம்பரமாக எடுத்து பெப்சி வெளியிட்டது. அதற்கு நல்ல வரவேற்பு இருந்த நிலையில், அதற்குப் பதிலடி கொடுக்க நினைத்து கோகோ கோலா 1985ல் நியூ கோக் என்ற புதிய கூல் டிரிக்கை அறிமுகப்படுத்தியது. அதற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைக்கும் என அவர்கள் நினைத்தார்கள். ஆனால், மக்கள் நியூ கோக்கை சுத்தமாக விரும்பவில்லை.

கோக் நிறுவனம்

பழைய கோக் தான் வேண்டும் என்று சொல்லி கோக் வாங்குவதையே நிறுத்தினர். விற்பனை மோசமாகச் சரிந்ததால் வேறு வழியின்றி பழைய கோக்கை கிளாசிக் கோக் என்ற பெயரில் அறிமுகம் செய்தது. பிறகு கொஞ்சக் காலத்திலேயே நியூ கோக்கை சத்தமின்றி நிறுத்திவிட்டது. இப்படி தான் பதிலடி கொடுக்கிறோம் என்று மொக்கை வாங்கிக் கொண்டது.

சம்பவம் செய்த கோக்

இதில் மற்றொரு சம்பவத்தையும் சொல்லலாம். அதாவது கடந்த 2013ம் ஆண்டு ஹாலோவீன் பண்டிகையை முன்னிட்டு பெப்சி முதலில் ஒரு விளம்பரத்தை வெளியிட்டது. ஹாலோவீன் சமயத்தில் மற்றவர்களை அச்சுறுத்தும் வகையில் மேக்அப் போட்டு, வீடுகளையும் அலங்கரிப்பார்கள். பெப்சி கேனுக்கு மேல் கோகோ கோலா இருப்பது போல விளம்பரத்தை வெளியிட்டு பெப்சி ஹாலோவீன் வாழ்த்துக் கூறியிருந்தது.

அதற்குப் பைசா செலவு இல்லாமல் கோகோ கோலா பதிலடி கொடுத்தது. அதாவது அதே விளம்பரத்தை அப்படியே போட்டு மேலே மட்டும் "அனைவரும் ஹீரோவை போலவே தங்களைக் காட்டிக் கொள்ள விரும்புகிறார்கள்" என்ற ஒரு வாக்கியத்தை சேர்த்தது. அதாவது கோகோ கோலா தான் ஹீரோ என்றும் தன்னை பெப்சி ஒரு ஹீரோ போலக் காட்டிக் கொள்ள முயல்கிறது என்பதே அந்த விளம்பரம்.

மீண்டும் போர்

இந்தச் சூழலில் தான் தற்போது சாம்பியன்ஸ் டிராபி நடந்து முடிந்த நிலையில், அதை மையமாக வைத்து மீண்டும் இரு நிறுவனங்களும் மோதிக் கொண்டன. அதாவது சாம்பியன்ஸ் டிராபியின் ஸ்பான்ஸ்ராக இருக்கும் கோகோ கோலா, "Half-time, Coke time" என்ற விளம்பரத்தை வெளியிட்டது. அதாவது போட்டியின் நடுவே கோகோ கோலோவை குடித்து சில் செய்யுங்கள் என்பதே விளம்பரத்தின் சாரம்சம்.


இதற்குப் பதிலடி கொடுத்த "Anytime is Pepsi time" என்று சொல்லி பெப்சி பதிலடி கொடுத்துள்ளது. முதல் டைம், டே டைம், கிளாஸ் டைம், சில் டைம், வின்னர் டைம், டின்னர் டைம் என எந்தவொரு சூழலிலும் பெப்சி குடித்து மகிழலாம் என்று விளம்பரத்தை வெளியிட்டுள்ளது. அந்த விளம்பரம் தான் இப்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.


டிரம்பிற்கு இது பரவாயில்லை

ஒரு பக்கம் என்ன தான் டிரம்ப் உலக நாடுகள் மீது வரிகளை விதித்து வர்த்தக போரை நடத்தி வந்தாலும், இந்த நிறுவனங்களுக்கும் இடையே நடக்கும் விளம்பர போர் பல காலமாகவே சுவாரசியத்திற்குப் பஞ்சமே இல்லாமல் இருக்கிறது. வரும் காலங்களிலும் கூட இரு தரப்புமே விட்டுக்கொள்ளாமல் மோதவே செய்வார்கள் என்பதில் சந்தேகம் இல்லை..!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+