பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.02 குறைப்பு: டீசல் விலை ரூ.1.47 உயர்வு!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.02 குறைக்கப்பட்டுள்ளன. டீசல் விலை லிட்டருக்கு ரூ.1.47 உயர்ந்துள்ளன. இந்த புதிய விலை மாற்றங்கள் இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருவதாக பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

Petrol, diesel new price; Is effective from today midnight

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரம் மற்றும் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை பொறுத்து இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் ஆகிய எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை 15 நாட்களுக்கு ஒருமுறை நிர்ணயம் செய்வர். ஒவ்வொரு மாதமும் 1-ம் தேதி மற்றும் 15 ஆம் தேதிகளில் இந்த விலை மாற்றம் செய்யப்படுகிறது.

அந்த வகையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.02 குறைக்கப்பட்டுள்ளன. டீசல் விலை லிட்டருக்கு ரூ.1.47 காசுகளை உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இந்த புதிய விலை மாற்றங்கள் இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருவதாக பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

அதன்படி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் வரிகள் உள்பட ரூ.56.08 ஆகவும் டீசல் விலை லிட்டருக்கு ரூ.47.13 ஆகவும் இருக்கும். அதேபோல் டெல்லியில் 1லிட்டர் பெட்ரோல் ரூ.56.61 எனவும், டீசல் விலை லிட்டர் ஒன்று ரூ.46.13 ஆகவும் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+