ஆகஸ்டு மாத சில்லறை பணவீக்க விகிதம் 3.36% ஆக அதிகரிப்பு
ஆகஸ்டு மாதத்தில் சில்லறை பணவீக்க விகிமானது கடந்த ஐந்து மாதங்களில் இல்லாத அளவான 3.36 சதவிகிதமாக அதிகரித்து உள்ளது.
டெல்லி: காய்கறிகளின் வரத்து குறைந்ததால் விலை அதிகரித்து ஆகஸ்டு மாதத்தில் சில்லறை பணவீக்க விகிமானது கடந்த ஐந்து மாதங்களில் இல்லாத அளவான 3.36 சதவிகித்தை எட்டி உள்ளது.
ஜூலை மாதத்தில் நாட்டின் சில்லறை விற்பனை விலைப் பணவீக்கம் 2.36 சதவிகிதமாக இருந்தது. அது, ஆகஸ்ட் மாதத்தில் 3.36 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.

இது கடந்த ஐந்து மாதங்களில் காணப்படும் அதிகபட்ச பணவீக்க விகிதமாகும். இது கடந்த மார்ச் மாதத்திற்குப் பிறகு அதிக பட்ச பணவீக்க விகிதமாகும். மார்ச் மாதம் பணவீக்க விகிதம் 3.89 சதவிகிதமாக இருந்தது.
பொருளாதாரத்தில் பயன்படுத்தப்படும் முக்கிய வார்த்தை பணவீக்கம். அதுவும் சமீபத்தில் இந்திய பொருளாதாரத்தை ஆட்டிப் படைப்பதும் இப்பணவீக்கம். இது குறித்து மத்திய புள்ளியல் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
காய்கறிகள் மற்றும் பழங்கள், எரிபொருள் ஆகியவற்றின் விலை உயர்வால் சில்லரை பணவீக்க விகிதம் அதிகரித்துள்ளது. பழங்கள் காய்கறிகள் பணவீக்கம் முறையே 5.29% மற்றும் 6.16% ஆக உயர்ந்துள்ளது. இவை ஜூலையில் முறையே 2.83% மற்றும் மைனஸ் 3.57% என்ற அளவில் இருந்தன.
உடனடி உணவுகள், நொறுக்குத்தீனிகள், இனிப்பு வகைகள், ஆகியவற்றின் பணவீக்கம் 0.43%மாக இருந்து 1.96% இருந்தது. உணவு தானியங்கள், சமையல் எண்ணெய், மாமிசம் மற்றும் மீன் ஆகிய மூன்று பிரிவுகளின் பணவீக்கம் முறையே 3.87% 1.03% மற்றும் 2.94% ஆக குறைந்துள்ளன.
-
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications