சொத்து வரி செலுத்துவோருக்கு ஆப்பு.. இரவோடு இரவாக வெளியான அறிவிப்பு! இனி எவ்வளவு கட்டணும் தெரியுமா?
சென்னை: நகராட்சி, மாநகராட்சி உள்ளிட்ட நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் தமிழ்நாடு அரசின் உத்தரவின் அடிப்படையில் சொத்து வரி ஆறு சதவீதம் வரை உயர்த்தப்பட்டிருக்கிறது. ஆனால் இது குறித்த அறிவிப்பு பொதுமக்களுக்கும் வரி செலுத்துவோருக்கும் தெரிவிக்கப்படவில்லை எனவும் குற்றம் சாட்டப்படும் நிலையில் அந்த வரி உயர்வு அமலுக்கு வந்துள்ளதாக கூறுகின்றனர் அதிகாரிகள்.
தமிழ்நாடு அரசின் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ் மாநகராட்சி, நகராட்சிகளில் சொத்துவரி, தொழில்வரி உள்ளிட்டவை வசூல் செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஜூன் மாதம் சென்னை மாநகராட்சியில் சொத்து வரி 35 சதவீதம் வரை உயர்த்த தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் டிசம்பர் 31ஆம் தேதி அந்த வரி உயர்வு அமலுக்கு வந்தது.
இதே போல தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் நகராட்சிகள், மாநகராட்சிகளில் சொத்து வரி உயர்த்தப்பட்டது. இதை அடுத்து அதிமுக பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டன.

இந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு முக்கிய ஆதாரமே சொத்து வரி வசூல் தான். ஆனால், சென்னை தவிர்த்த பிற மாநகராட்சி பகுதிகளில் பல ஆண்டுகளாக சொத்து வரி உயர்த்தப்படாமல் இருந்த நிலையில் 2022ல் சீரமைப்பு செய்யப்பட்டது. வீடுகளின் பரப்பளவு கடைகளின் பரப்பளவு ஆகியவற்றின் மூலம் 25% முதல் 100 சதவீதம் வரை சொத்து வரி உயர்த்தப்பட்டது. தொடர்ந்து 2023 ஆம் ஆண்டில் ஆண்டுக்கு 6 சதவீதம் வரை உள்ளாட்சி அமைப்புகள் சொத்து வரியை உயர்த்திக் கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு அனுமதி அளித்தது. இந்த நிலையில் கடந்தாண்டு சொத்து வரியை ஆறு சதவீதம் அளவுக்கு மாநகராட்சி, நகராட்சி உள்ளிட்ட நகர்ப்புற உள்ளாட்சிகள் உயர்த்தின.
இந்த நிலையில் 2026 20215 நிதியாண்டுக்கான சொத்து வரி வசூல் நடைபெற்று வரும் நிலையில் வெளிப்படையான அறிவிப்பு இல்லாமல் தற்போது ஆறு சதவீதம் வரை சொத்து வரியை உயர்த்தி இருப்பதாக கூறுகின்றனர் பொதுமக்கள். இந்த ஆண்டுகளுக்கு ஒரு முறை சொத்து வரியை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை இருந்த நிலையில் ஒவ்வொரு ஆண்டும் உயர்த்திக் கொள்ளலாம் என்ற தமிழ்நாடு அரசின் உத்தரவும் பொது மக்களிடம் அறிவிப்பே செய்யாமல் மாநகராட்சி, நகராட்சி உள்ளிட்ட நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சொத்து வரியை உயர்த்தியுள்ளன.
ஐந்து ஆண்டுகளில் சொத்து வரி 30 சதவீதத்திற்கு மேல் உயர்ந்தால் பத்து ஆண்டுகளில் அது பல மடங்காக பெருகிவிடும். இதனால் வரி செலுத்துவோர் மிக கடுமையாக பாதிக்கப்படுவார்கள். ஏற்கனவே கூடுதல் வரி சுமை காரணமாக மக்கள் வரி செலுத்த தயங்கி வரும் நிலையில் பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஆண்டுக்கு ஆண்டு 6 சதவீத வரி உயர்வு என்பது மக்களை பாதிப்புக்கு உள்ளாக்கும் எனவும், தற்போது வரி உயர்வு குறித்து வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்கின்றனர் பொதுமக்கள்.
சென்னையை பொருத்தவரை தற்போது உயர்த்தப்பட்டுள்ள சொத்து வரி உயர்வு படி 600 சதுரடிக்கு குறைவான கட்டிடங்களுக்கு 50%, 2011ஆம் ஆண்டு சென்னையோடு இணைக்கப்பட்ட பகுதியாக இருந்தால் 25% வசூலிக்கப்படும். 600 முதல் 1200 சதுர அடி பரப்பளவு உள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கு 75%, 1201 முதல் 1800 வரை 100%, 1800 சதுர அடிக்கு மேல் 150 சதவீதம் வரி உயர்த்தப்பட்டது. உயர்த்தப்பட்ட இந்த சொத்து வரி சொத்துக்களின் அளவு மற்றும் மண்டலங்களை பொறுத்து வேறுபட்டது. இந்த நிலையில் 2025 - 2026 ஆம் நிதி ஆண்டில் ஏற்கனவே உயர்த்தப்பட்ட சொத்து வரியிலிருந்து ஆறு சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
கங்கணம் கட்டிக்கொண்டு வேலை.. மொத்த தமிழக பாஜகவும் ஸ்டன் ஆகி நிற்குதே.. யாருங்க இந்த த பா ஜி? -
வேல்முருகனின் மெகா பிளான் இதுவா? வன்னியர் சமூக வாக்குகளை வளைக்க பார்க்கிறாரா? -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
கண் சிவந்த ஸ்டாலின்.. அறிவாலயத்தில் இருந்து பறந்த உத்தரவு.. அதிர்ச்சியில் திமுக நிர்வாகிகள் -
ஆமா.. தமிழக சட்டசபை தொகுதிகள் 234 தான் என நிர்ணயிக்கப்பட்டது எப்படி? ஏன் 300 இல்லை? சுவாரசியம் -
Election Exclusive: வேடசந்தூரில் வென்றால் கோட்டையில் கொடி! மீண்டும் களத்தில் திமுக சிட்டிங் சீனியர்! ஜூனியர்கள் பாவம்! -
சிபிஎம் கட்சிக்கு 5 தொகுதிகள்தான்! கட் அன்ட் ரைட்டாக சொன்ன ஸ்டாலின்! பெ.சண்முகம் வைத்த டிமாண்ட்












Click it and Unblock the Notifications