TCS: கீபோர்டு டைப் செய்வது போல் தொடுவாங்க.. என் உடலை அசிங்கமா கிண்டல் செய்வாங்க! அதிரவைக்கும் பெண்ணின் புகார்
நாசிக் டிசிஎஸ் அலுவலகத்தில் பணியாற்றிய ஒரு பெண் ஊழியர், தனக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லை மற்றும் மத உணர்வுகளை புண்படுத்திய சம்பவங்களை வெளிப்படையாக தெரிவித்துள்ளார். ஜூலை 2024-ல் டிசிஎஸ் நாசிக் அலுவலகத்தில் அசோசியேட் பதவியில் இணைந்த இந்த பெண், செப்டம்பர் 2024 முதல் பிப்ரவரி 2026 வரை தொடர்ந்த பாலியல் தொல்லையால் பயந்து பயந்து வாழ்ந்ததாகக் கூறியுள்ளார்.
பாலியல் தொல்லை மற்றும் உடல் அவமானம்
ஒரு நாள் தற்போது கைது செய்யப்பட்ட ஷாபி ஷேக் எனது அருகில் அமர்ந்து அவருடைய கால்களால் என் கால்களை உரசினார். பின்னர் கீபோர்டை பயன்படுத்துவதாக சொல்லி என்னுடைய அந்தரங்க உறுப்புகளைத் தொட்டார். அதிர்ச்சியடைந்த நான் எழுந்து விலகினேன். இந்த சம்பவத்திற்கு பின்பு ஷாபி ஷேக் சிரித்துக்கொண்ட என்னைவிட்டு விலகி சென்றார் என தெரிவித்தார் அந்த பெண்.

இதேபோல் பணியில் சேர்ந்த புதியதில் செப்டம்பர் 2024 காலக்கட்டத்தில் ஒரு நாள் பயிற்சி வகுப்பின்போது அசிப் அன்சாரி அவரது மார்பைப் பார்த்து பாலியல் ரீதியான கமெண்ட் செய்தார் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் அசிப் அன்சாரி, தவுசிப் அட்டார் உடன் சேர்ந்து அவரது உடல் அமைப்பைப் பற்றி தவறாக பேசினார்கள். இந்த சம்பவங்கள் அவருக்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்தின என இப்பெண் தெரிவித்தார்.
இந்த பெண் தற்போது புகார் அளித்த 10க்கும் அதிகமான பெண்களில் இவரும் ஒருவர் ஆவார்.
மத உணர்வுகளை புண்படுத்திய கருத்துகள்
பிப்ரவரி 2026-ல் தவுசிப் அட்டார் ராமாயணம், மகாபாரதம் படித்ததாகச் சொல்லி, "கடவுளுக்கு எத்தனை மனைவிகள் இருக்க முடியும்? தன் குழந்தையைப் பற்றி கடவுளுக்கு தெரியாதா?" என்று அசிங்கப்படுத்தும் வகையில் கேள்விஎழுப்பினார். இப்படி அவரது கடவுள்கள் மற்றும் தெய்வங்களைப் பற்றி அவதூறாக பேசினார்கள் எனவும் அப்பெண் புகார் அளித்துள்ளார்.
இவர்களால் டிசிஎஸ் நாசிக் அலுவலகம் பயங்கரமான இடமாக மாறியதாக அந்தப் பெண் கூறினார். குற்றம் சாட்டப்பட்ட ஊழியர்கள் எவ்விதமான பயமும் இல்லாமல் செயல்பட்டனர். ஆப்ரேஷன்ஸ் பிரிவின் உதவி பொது மேலாளர் உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் கூட பாலியல் தொடர்பான புகார்களை உயர்மட்டத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டாம் என்று தடுத்தனர் என்றும் இப்பெண் தெரிவித்துள்ளார். இதனால் நிர்வாகமும் குற்றவாளிகளுக்கு பல வகையில் பாதுகாப்பு அளித்தது என தெரிவித்தார்.
டிசிஎஸ் விவகாரம் தொடர்பாக இதுவரை ஒன்பது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 8 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் ஒரு பெண் உதவி மேலாளர் அஷ்வினி சைனானியும் அடங்குவார். ஒன்பதாவது குற்றவாளி நிதா கான் மும்பையில் இருக்கிறார். அவர் முன் ஜாமீன் கோரிய மனு நிராகரிக்கப்பட்டது.
டிசிஎஸ் நிறுவனம் 2022 முதல் 2026 வரை எந்த புகாரும் தங்கள் POSH அமைப்புக்கு வரவில்லை என்று தெரிவித்துள்ளது. ஆனால் விசாரணை அதிகாரிகள் பல புகார்கள் இருந்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளனர். மேலும் தற்போது குற்றம்சாட்டப்பட்டவர்கள் அனைவரும் 2022 முதல் 2026 வரையிலான காலத்தில் தான் குற்றங்கள் நடந்துள்ளதாக தெரிவித்துள்ளனர் என்றும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
bmw, பென்ஸ் காரில் போறாங்க.. டாக்டர்களுக்கு 5 லட்சம் சம்பளம்.. ஐடி ஊழியருக்கு 30k தான் என குமுறல் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications