EMI சுமையை குறைப்பது எப்படி! ஈஸியான 4 வழிகள். டென்ஷன் இல்லாத வாழ்க்கைக்கு என்ன செய்யலாம்!
சென்னை: நம்மில் பலரும் தெரியாமல் கடன் வாங்கிவிட்டு அந்த சுழலில் சிக்கிக் கொள்வோம். ஒரு முறை இஎம்ஐ சிக்கலில் மாட்டிக் கொண்டால் அதில் இருந்து மீண்டு வருவதே மிகக் கடினம். அதுபோல சிக்கிக் கொள்ளும் பலரையும் நாம் பார்த்து இருப்போம். அப்படி லோன் இஎம்ஐ பிரச்சினையில் மாட்டிக் கொள்வோர் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
கடன் வாங்காமல் வாழ்க்கையை நடத்துவதே சிறந்த விஷயம். ஆனால், இந்த காலத்தில் பெரும்பாலான மக்களால் அப்படி இருக்க முடிவதில்லை. சிறு சிறு செலவுகளுக்கு எல்லாம் கடன் வாங்கிவிடுகிறார்கள். இது எல்லாம் சேர்ந்து மாதம் பட்ஜெட்டில் பெரிய தொகையாக இஎம்ஐ வடிவில் வந்துவிடுகிறது. இப்போது இளைஞர்கள் பலரும் இஎம்ஐ சுழலில் தான் சிக்கித் தவிக்கிறார்கள்.

இஎம்ஐ சுழல்
அதிலும் குறிப்பாகத் தனிநபர் கடன் வாங்கியவர்கள் இந்த இஎம்ஐ பஞ்சாயத்தில் மாட்டிக் கொண்டு விழிக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும். இதுபோல பர்சனல் ஹோன் இஎம்ஐ சிக்கலில் மாட்டியவர்கள் என்ன செய்யலாம்.. அதில் இருந்து தப்பிக்க என்ன வழி இருக்கிறது என்பது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
அதற்கு முன்பு தனிநபர் கடன் இஎம்ஐ என்றால் என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம். நீங்கள் மாத சம்பளதாரராக இருந்தால் உங்களுக்கு எளிதாக இந்த பர்சனல் லோன் கொடுப்பார்கள். அதிலும் உங்கள் சிபில் ஸ்கோர் சிறப்பாக இருந்தால் அவர்களாகவே அடிக்கடி கூட போன் செய்து பர்சனல் லோன் வேண்டுமா எனக் கேட்டுக் கொண்டே இருப்பார்கள்.
வட்டி அதிகம்
இதில் விஷயம் என்னவென்றால் மற்ற வகையான கடன்களை காட்டிலும் இந்த ஹோம் லோனுக்கு வட்டி அதிகம். ஏனென்றால் நகை, வீட்டுக் கடன்களுக்கு நாம் செக்யூரிட்டியாக நகை, பத்திரங்களைக் கொடுப்போம், ஆனால், பர்சனல் லோனில் அப்படி எதுவும் தேவைப்படாது. இதன் காரணமாகவே பர்சனல் லோனுக்கு வட்டி அதிகமாக இருக்கும். இதனால் அதிக இஎம்ஐ செலுத்தும் சூழல் ஏற்படும்போது, அது மாத பட்ஜெட்டை பாதிக்கும். இதை எப்படிச் சமாளிக்கலாம் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
நான்கு வழிகள்
- உங்கள் வங்கியில் அதிக வட்டி இருந்து, வேறு வங்கிகள் குறைந்த வட்டியைக் கொடுப்பதாகச் சொன்னால் உங்கள் கடனை வேறு வங்கிக்கு மாற்றலாம். பலருக்கும் இப்படியொரு ஆப்ஷன் இருப்பது தெரியாது. ஆனால், பெரிய தொகை கடனாக வாங்கியவர்களுக்கு இது நிச்சயம் உதவும். இதன் மூலம் உங்கள் இஎம்ஐ தொகை கணிசமாகக் குறையும்.
- அடுத்து அசலை முன்கூட்டியே செலுத்துவது. பல்வேறு வல்லுநர்களும் இந்த திட்டத்தைத் தான் சொல்கிறார்கள். அதாவது உங்களுக்கு போனஸ் உட்பட கூடுதலாக எதாவது தொகை கிடைத்தால் அதை அப்படியே கடனுக்குச் செலுத்தி விடுங்கள். அதேபோல ஊதிய உயர்வு வந்தாலும் கூட அதைக் கருத்தில் கொள்ளாமல் கடனை செலுத்துங்கள். இதன் மூலம் உங்கள் கடனை சீக்கிரமே முடித்து இஎம்ஐ சுழலில் இருந்து நிரந்தரமாகவே விடுபட முடியும். அதேநேரம் இதற்கு வங்கிகளில் சில கட்டுப்பாடுகளும் இருக்கும். எனவே, அதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
- அடுத்து கடனை செலுத்தும் முறை. உங்களுக்கு ஒருவேளை 3, 4 வங்கிகளில் கடன் இருந்தால்.. முதலில் எந்த வங்கியில் குறைந்த கடன் இருக்கிறதோ.. அதைச் செலுத்தி க்ளோஸ் செய்யுங்கள். இது பெரும்பாலும் உளவியல் சார்ந்தது. ஒரு கடனை வெற்றிகரமாக முடித்தால் தான் உங்களுக்கே கடனை கட்டிவிட முடியும் என்ற நம்பிக்கை வரும்.
- அடுத்து இது கொஞ்சம் பிரபலமாகாது முறை. அதாவது கடன்களை ஒருங்கிணைப்பது. உங்களுக்குப் பல சிறிய கடன்கள் இருந்தால் அவற்றை ஒருங்கிணைத்து ஒரே கடனாக மாற்றலாம். இதற்குக் குறைந்த வட்டி கிடைக்கும். நீண்ட காலம் திரும்பச் செலுத்தும் வகையில் இஎம்ஐ குறையும். ஆனால், இப்படி மாற்றும்போது இஎம்ஐ குறைஞ்சிடுச்சேனு பலரும் புதிய கடன்களை வாங்கிவிடுவார்கள். எனவே, இதில் கவனம் தேவை.
கவனிக்க வேண்டியவை
- ஒரு விஷயத்தை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். குறைந்த இஎம்ஐ என்றால் அதிக வட்டி போகும். எனவே, குறைந்த இஎம்ஐ கண்டு ஏமாற வேண்டாம்.
- கடனை முன்கூட்டியே செலுத்தும் போது, வங்கிகள் சில கட்டணங்களை விதிக்கும். அதைச் சரிபார்க்கவும்.
- கடன் காலத்தை முடிந்தவரை நீட்டிக்க வேண்டாம். மாதாந்திர தவணைகளை சரியாக செலுத்துங்கள்.. முடிந்தவரைச் சீக்கிரம் கடனை முடியுங்கள்.
எல்லாவற்றையும் விட இது முக்கியம்
இவை அனைத்தும் சின்ன சின்ன விஷயங்கள் போலத் தோன்றினாலும் அவை இஎம்ஐ சுழலில் இருந்து விடுபட நமக்கு உதவும். இவை அனைத்தையும் விட முக்கியமான விஷயம் ஒன்று இருக்கிறது.. அதாவது தேவையில்லாமல் கடனே வாங்க வேண்டாம்.! சிறந்த டென்ஷன் இல்லாத வாழ்க்கைக்கு அதுவே தீர்வு
இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீட்டு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications