கடைகளில் தங்கத்தை வாங்குவதில் உள்ள பிரச்சனை இதுதான்! பெரிய இழப்பு ஏற்படும்! 90% பேர் இதை கவனிக்க மாட்டோம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தங்கம் மற்றும் வெள்ளி விலை தொடர்ந்து அதிகரிப்பதால் அதில் முதலீடு செய்யப் பலரும் ஆர்வம் காட்டுகிறார்கள். இருப்பினும், தங்கத்தை எப்படி வாங்க வேண்டும் என்பது முக்கியம். பிரபலப் பட்டய கணக்காளரான நிதின் கௌஷிக் இது குறித்து எளிமையாக விளக்கியுள்ளார். தங்கத்தில் முதலீடு செய்யும் முன்பு இதைக் கொஞ்சம் படியுங்கள்.. இல்லை என்றால் சிக்கல்தான்!

இந்தியக் குடும்பங்களில் தங்கம் மற்றும் வெள்ளியை எப்போதும் உணர்வுப்பூர்வமான ஒன்றாகவே பார்ப்பார்கள். நகைகள் பரம்பரைச் சொத்துக்கள், நாணயங்கள் என எந்த வடிவத்தில் இருந்தாலும் தங்கம் மற்றும் வெள்ளியைப் பாதுகாப்பாக வைத்திருப்பார்கள். இதுவே கஷ்ட காலங்களில் பல குடும்பத்தினருக்குப் பெரியளவில் உதவியுள்ளது.

Why its better to buy Gold amp amp Silver in digital format over Physical 10-15 Hidden Loss explained

தங்கம், வெள்ளி

இதற்கிடையே தங்கம், வெள்ளி வாங்கும்போது கவனிக்க வேண்டிய சில விஷயங்களைப் பட்டய கணக்காளரான நிதின் கௌஷிக் விளக்கியுள்ளார். மேலும், முதலீட்டாளர்கள் கவனிக்கத் தவறும் மூன்று முக்கிய சவால்களை அவர் எடுத்துரைக்கிறார். இந்தச் சவால்களைத் தாண்டித் தங்கத்தைப் புத்திசாலித்தனமாக எப்படி வாங்கலாம் என்பதையும் அவர் விளக்குகிறார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "தங்கம் மற்றும் வெள்ளியை நேரடியாக நகைக்கடையில் வாங்க நினைக்கிறீர்களா? அதைச் செய்வதற்கு முன் இதைப் படியுங்கள். தங்கம் மற்றும் வெள்ளி பாதுகாப்பானது எனத் தோன்றலாம். அவை செல்வத்தை உருவாக்குவது உண்மை தான். ஆனால், நீங்கள் நேரடியாக நகைக்கடைகளில் வாங்குபோது, பெரும்பாலானோர் கவனிக்கத் தவறும் மூன்று சவால்களைப் பற்றிப் பேசுவோம்.

சவால்கள் என்ன

சவால் நம்பர் 1.. கடைகளில் நேரடியாகத் தங்கம் வாங்கும்போது சில்லறை விலையைச் செலுத்த வேண்டும். இதில் டீலர் லாபம், ஜிஎஸ்டி, நகைகளுக்கான செய்கூலி ஆகியவை அடங்கும். விற்கும்போது அதெல்லாம் நமக்குக் கிடைக்காது. தங்கத்தின் மதிப்பில் மட்டுமே நம்மிடம் இருந்து வாங்குவார்கள். உதாரணமாக, ஒரு கிலோ தங்கம் ₹1.22 லட்சம் கொடுத்து வாங்கினால். அதை விற்கும்போது நமக்கு ₹1.18 லட்சம் மட்டும் கிடைக்கலாம்.. தங்கம் ஒரு ரூபாய் கூட இறங்கவில்லை என்றாலும் கூட ₹4,000 இழப்பு ஏற்படும்.

அதேநேரம் டிஜிட்டல் மூலம் தங்கத்தை வாங்கும்போது நமக்கு லாபம்.. தங்கம் மற்றும் வெள்ளி ஈடிஎஃப்கள் அல்லது டிஜிட்டல் மூலம் வாங்கும்போது ஒரு கிராமுக்கு ₹0.5-₹2 (ஒரு கிலோவுக்கு ₹500-₹2,000) மட்டும் நாம் கூடுதல் தொகையைச் செலுத்துவோம். இதனால் வாங்கி விற்கும்போது நமக்குப் பல ஆயிரம் ரூபாய் சேமிக்கப்படும். ஜிஎஸ்டி மற்றும் சிறிய வருடாந்திரச் சேமிப்பு/ பரிவர்த்தனை கட்டணங்கள் இருந்தாலும், ஒட்டுமொத்தச் செலவு நேரடியாக வாங்குவதை விடக் குறைவாகவே இருக்கும்.

சேமிப்பு

சவால் நம்பர் 2.. சேமிப்பு மற்றும் பாதுகாப்பு.. கடைகளில் நேரடியாகத் தங்கத்தை வாங்கினால் அதைப் பாதுகாக்க லாக்கர்கள், காப்பீடு தேவைப்படும். 10 கிலோ தங்கத்திற்கான வருடாந்திர லாக்கர் கட்டணங்கள் கணிசமாக இருக்கும். மேலும், மன அமைதி கூட தொலைந்துபோகும். அதேநேரம் டிஜிட்டல் முறையில் வாங்கும்போது இந்தச் சிக்கல் இருக்காது.

ஏனென்றால் அவை ஏற்கனவே காப்பீடு செய்யப்பட்டு இருக்கும்.. பாதுகாப்பான லாக்கரில் சேமிக்கப்படுகின்றன. இதனால் மன அழுத்தம் இல்லை. டிஜிட்டல் தங்கம் அல்லது வெள்ளியில் ₹10 லட்சம் கூட நீங்கள் முதலீடு செய்துவிட்டு கவலையே இல்லாமல் இருக்கலாம்.. எப்படிப் பாதுகாப்பாக வைப்பது என்று யோசிக்கத் தேவையில்லை.

தூய்மை

சவால் நம்பர் 3... தூய்மை பற்றிய கவலை.. கடைகளில் தங்கம் மற்றும் வெள்ளி வாங்கும்போது.. குறிப்பாகப் பழக்கம் இல்லாத நகைக்கடைகளில் வாங்கும்போது அது சுத்தமான தங்கம் தானா என்ற கவலை இருக்கும்.. ஹால்மார்க் செய்யப்பட்ட தங்கத்திற்குக் கூட விற்பனை செய்யும்போது சிக்கல் வரலாம்... நகைகளின் செய்கூலி காரணமாக அதன் மதிப்பு இன்னும் குறையும்.

டிஜிட்டல் தங்கம் மற்றும் வெள்ளி (தங்கம் ஈடிஎஃப் அல்லது வெள்ளி ஈடிஎஃப் போன்றவை) செபி மூலம் ஒழுங்குபடுத்தப்பட்டது ஒன்றாக இருக்கிறது. இதில் எந்தவொரு சிக்கலும் இல்லாமல் மார்கெட் விலைக்குத் தங்கத்தை வாங்கலாம்.. விற்கலாம்.. தரத்தை பற்றி எந்தவொரு கவலையும் இருக்காது.

என்ன செய்யலாம்

எளிமையாகச் சொல்ல வேண்டும் என்றால்.. கடைகளில் வாங்கப்படும் தங்கம் உணர்வுப்பூர்வமாக இருக்கலாம். ஆனால், முதலீடாக, அதில் பல சிக்கல்கள் உள்ளன. பெரும்பாலான முதலீட்டாளர்களுக்கு, டிஜிட்டல் முறையில் செலவு குறைந்த.. தொந்தரவு இல்லாத, காப்பீடு செய்யப்பட்ட.. தூய்மையான தங்கம் கிடைக்கிறது. இதை வாங்குவதும் விற்பதும் ரொம்பவே ஈஸி! தங்கம், வெள்ளியை வாங்குவது நல்லது என்றாலும் அதை எப்படி வாங்கி வைப்பது என்பது முக்கியம்" என்று பதிவிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+