சேமிப்பை விடுங்க.. மிடில் கிளாஸ் மக்களுக்கு "இது" ரொம்பவே முக்கியம்! இல்லைனா குடும்பத்திற்கே சிக்கல்
சென்னை: இந்த காலத்தில் யாருக்கு எப்போது எந்த சிக்கல் வரும் என்றே யாருக்கும் தெரிவதில்லை. இதனால் நாம் எதிர்காலத்திற்கும் சேர்த்தே இப்போதே ஓட வேண்டி இருக்கிறது. பணத்தையும் சேமிக்க வேண்டி இருக்கிறது. ஆனால், சேமிப்பைத் தாண்டியும் வேறு ஒரு விஷயம் மிடில் கிளாஸ் மக்களுக்கு ரொம்பவே முக்கியம் என்றே பெரும்பாலான பொருளாதார வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள். அது என்ன விஷயம்! சேமிப்பைத் தாண்டி அது ஏன் முக்கியம் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
நவீன டிஜிட்டல் காலம் என்னதான் நமக்குப் பல சவுகரியங்களைக் கொடுத்தாலும், இதில் ஏகப்பட்ட பிரச்சினைகளும் சேர்ந்தே வருகிறது. நமது அப்பா, அம்மா காலத்தைப் போல இப்போது யாருக்கும் வேலை நிரந்தரமாக இருப்பதில்லை.

எதிர்காலத்திற்கும் சேர்ந்து வேலை:
அப்படியே வேலை செய்தாலும் ஓய்வூதியம் எல்லாம் கிடையாது. இப்போது நமது சராசரி வாழ்நாளும் 68ஆக அதிகரித்துள்ளது. மருத்துவத் துறை வளர வளர இது அதிகரிக்கவே செய்யும். ஆனால், 60 வயதிற்கு மேல் நம்மால் வேலை செய்ய முடியாது. இதனால் வேலை செய்யும் போதே நாம் எதிர்காலத்திற்கும் சேர்த்து ஓட வேண்டி இருக்கிறது. எதிர்காலத்திற்கும் சேர்த்து பணம் சேர்க்க வேண்டி உள்ளது.
இந்த காலத்து இளைஞர்கள் பலரும் இதை உணர்ந்தே தொடக்கம் முதலே முதலீடு செய்து வருகிறார்கள். இது ரொம்பவே நல்ல ஒரு விஷயம் என்றாலும் கூட சேமிப்பைத் தாண்டியும் ஒரு விஷயம் முக்கியம் என்கிறார்கள் பொருளாதார வல்லுநர்கள். அதிலும் பெரியளவில் சொத்து எதுவும் இல்லாத மிடில் கிளாஸ் இளைஞர்கள் சேமிப்பை எல்லாம் தொடங்கும் முன்பு இதை வைத்துக்கொள்ள வேண்டும் என்கிறார்கள். அப்படி அவர்கள் சொல்வது என்ன! அது ஏன் முக்கியம் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
ஆயுள் காப்பீடு:
பெரும்பாலான வல்லுநர்கள் டெர்ம் இன்சூரன்ஸ் எனப்படும் ஆயுள் காப்பீடு மிடில் கிளாஸ் மக்களுக்கு முக்கியம் என்பதை வலியுறுத்துகிறார்கள். எதிர்பாராத விபத்து அல்லது நோய்வாய்ப்பட்டு உயிரிழந்தால் குடும்பமே பெரும் சிக்கலை எதிர்கொள்ளும். அதிலும் கடன் எதாவது வாங்கி இருந்தால் அதில் இருந்து குடும்பத்தால் மீளவே முடியாது. இதுபோன்ற சூழல்களில் தான் நமக்கு டெர்ம் இன்சூரன்ஸ் கைகொடுக்கிறது.
டெர்ம் இன்சூரன்ஸ்:
இது தொடர்பாகப் பொருளாதார வல்லுநர் ராஜேன் சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில், "Term Insurance எடுப்பதன் பலன்கள்: 1. உங்களுக்குப் பின்னர், உங்களது வீட்டுக்கடன், டெர்ம் இன்சூரன்ஸ் கிளைம் தொகையினை கொண்டு உங்கள் குடும்பம் வீட்டுக் கடனை அடைத்துவிட்டு வீட்டைச் சொந்தமாக்கிக் கொள்ளலாம். 2. வாகனக் கடன் இருந்தால் அதுவும் மேற்சொன்ன வகையில் கடனை அடைத்து விடலாம்.
3. உங்களது வருமானம் நின்ற பின்னர், கிளைம் தொகையினை முதலீடு செய்து உங்கள் குடும்பம் தங்கள் வாழ்நாள் முழுமைக்கும் வருமானம் பெறலாம். யாரிடமும் கையேந்த வேண்டிய அவசியமில்லை. 4. நமக்குப் பின்னர், நம் குழந்தைகளின் படிப்பு மற்றும் திருமணம் எந்தவொரு தடையுமில்லாமல் நடந்தேறும். Term Insurance செலவல்ல. நமக்குப் பின்னரான நம் குடும்பத்தின் வாழ்வாதாரத்துக்கான முதலீடு அது" என்று பதிவிட்டுள்ளார்.
மறக்கவே கூடாது:
இவர் மட்டுமின்றி பெரும்பாலான பொருளாதார வல்லுநர்கள் சொல்வது இதை தான். இந்த காலத்தில் எப்போது எது நடக்கும் என்றே தெரியாத சூழல் நிலவுகிறது. அப்படியிருக்கும் போது மிடில் கிளாஸ் மக்கள் தங்கள் குடும்பத்தைப் பாதுகாக்க இந்த டெர்ம் இன்சூரன்ஸை தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும் என்கிறார்கள்.
இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீட்டு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு, உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications