மர்மமாக கடத்தப்பட்ட 16 வயது சிறுவன்.. கூடவே இருந்து கொன்ற நண்பர்கள்.. பொறி வைத்து பிடித்த போலீஸ்
பஞ்சாப்பில் 16 வயது சிறுவன் அவனது நண்பர்களால் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
Recommended Video

சண்டிகர்: பஞ்சாப்பில் 16 வயது சிறுவன் அவனது நண்பர்களால் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
பஞ்சாப் மாநிலம் பதின்டா பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. கடத்தப்பட்டு கொல்லப்பட்ட அந்த சிறுவன் 9 ம் வகுப்புதான் படித்து வந்துள்ளான்.
இவன் கடந்த மூன்று நாட்களுக்கு முன் பள்ளிவிட்டு பின் திரும்ப வீட்டுக்கு வரவில்லை. இதனால் அவனது பெற்றோர் போலீசாரிடம் காணவில்லை என்று புகார் அளித்துள்ளனர்.

கடத்தினார்கள்
இந்த நிலையில்தான் நேற்று முதல்நாள், அந்த சிறுவனின் அப்பாவிற்கு மர்ம போன் கால் வந்துள்ளது. அதில் பேசிய நபர்கள், உங்கள் பையனை கடத்தி இருக்கிறோம், நீங்கள் மூன்று கோடி கொடுத்தால்தான் விடுவோம் என்று கூறி இருக்கிறார்கள்.

எவ்வளவு
ஆனால் மூன்று கோடி ரூபாய் இல்லை என்று இந்த சிறுவனின் குடும்பத்தில் மறுத்துள்ளனர். பெற்றோர் மறுக்கவே பேரம் பேசி பேசி, கடைசியில் மூன்று லட்சம் கொடுப்பதாக ஒப்புக்கொண்டுள்ளனர். இதையடுத்து பதின்டா ரயில் நிலையத்தில் ரயில்வே டிராக்கில் ஒரு இடத்தை குறிப்பிட்டு அங்கு பண பையை வைக்க சொல்லியுள்ளனர்.

பொறி வைத்து பிடித்தனர்
இதையடுத்து போலீசார் தூரத்தில் பணம் எடுக்கும் நபர்களை ஒளிந்து நோட்டமிட்டு கண்டுபிடித்துள்ளனர். பணம் எடுத்துக் கொண்டு சென்றவனை பின் தொடர்ந்து சென்று, அவனின் கூட்டாளிகளோடு சேர்த்து கையும் களவுமாக கைது செய்தனர். இந்த நிலையில்தான், கைது செய்யப்பட்ட நபர்கள் எல்லோரும் கடத்தப்பட்ட சிறுவனுக்கு முன்பில் இருந்தே நண்பர்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டது.

கொலை செய்தான்
விளையாடுவதற்கு கூப்பிட்டது போல கூப்பிட்டு பின் அந்த சிறுவனுக்கு அவனின் நண்பர்கள் மயக்க மருந்து கொடுத்தது விசாரணையில் தெரிய வந்தது. இந்த நிலையில், போலீஸ் விசாரணையில்தான், அந்த சிறுவனை கொன்றுவிட்டோம் என்று அவனின் நண்பர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர். கடத்திய முதல் நாளே கொலை செய்துவிட்டதாக வாக்குமூலம் அளித்து இருக்கிறார்கள்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications