பஞ்சாப்: அரசியல் சாதனைகளை சல்லி சல்லியாக உடைத்து எறிந்த ஆம் ஆத்மி! 56 வருடங்களில் இல்லாத மாஸ் வெற்றி
சண்டிகர்: பஞ்சாபில், ஆம் ஆத்மி கட்சி அறுதிப் பெரும்பான்மையைப் பதிவு செய்து ஆட்சியை பிடித்ததோடு பல அரசியல் சாதனைகளை முறியடித்துள்ளது. ஆம்.. பஞ்சாபின் 56 ஆண்டுகால சாதனையை முறியடித்து ஆம் ஆத்மி கட்சி வரலாறு படைத்துள்ளது.
உண்மைதான்.. 2017 சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியால் சிறப்பாக செயல்பட முடியவில்லை, ஆனால் இந்த தேர்தலில் மொத்தமுள்ள 117 சட்டமன்ற தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி 92 இடங்களை கைப்பற்றியுள்ளது.
கடந்த 56 ஆண்டுகளில், பஞ்சாபில் எந்த அரசியல் கட்சியும் இவ்வளவு பெரிய வெற்றியைப் பெற்றதில்லை என்று பஞ்சாப் அரசியல் நிபுணர்கள் கூறுகிறார்கள். பஞ்சாபில், காங்கிரஸ், சிரோமணி அகாலி தளம் மற்றும் பாரதிய ஜனதா கூட்டணி ஆகியவற்றில் எதுவுமே, ஆம் ஆத்மி கட்சி வென்ற தொகுதிகளில் கால் பங்கைக் கூட எட்டவில்லை.

மாநில பிரிவினை
1966 ஆம் ஆண்டு ஹரியானா-பஞ்சாப் பிரிக்கப்பட்டது. இரு மாநிலங்களாக பிரிந்த பிறகு, 1992 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பஞ்சாபில் காங்கிரஸ் 87 இடங்களை வென்று அசத்தியது. இருப்பினும், அந்த நேரத்தில் பயங்கரவாதப் பிரச்சினை உச்சத்தில் இருந்ததால், சிரோமணி அகாலி தளம் தேர்தலைப் புறக்கணித்தது நினைவிருக்கலாம்.

மாநில பிரிவினைக்கு பிறகு பெரிய வெற்றி
இதற்குப் பிறகு, 1997 சட்டமன்றத் தேர்தலில் சிரோமணி அகாலி தளம் மற்றும் பாரதிய ஜனதா கட்சி கூட்டணி 93 இடங்களை ஜெயித்தன. சிரோமணி அகாலி தளம் 75 இடங்களையும், பாரதிய ஜனதா 18 இடங்களையும் பெற்றன. அந்த வகையில் பார்த்தால், தற்போது 117 இடங்களில் 92 இடங்களை கைப்பற்றி ஆம் ஆத்மி கட்சி கடந்த 56 ஆண்டு கால சாதனையை முறியடித்துள்ளது. அதாவது பஞ்சாப்-ஹரியானா தனித்தனியாக பிரிந்த பிறகு கிடைத்த பெரிய வெற்றி இதுதான்.

சட்டசபை தேர்தல்கள்
பஞ்சாபில் நடந்த சட்டசபை தேர்தல் வரலாற்றை பார்த்தால், 1952 தேர்தலில் காங்கிரஸ் 96 இடங்களில் வெற்றி பெற்றது. அந்த நேரத்தில் பஞ்சாபில் மொத்தம் 126 சட்டமன்றத் தொகுதிகள் இருந்தன என்பதை மறக்க கூடாது. அதன் பிறகு 1957 ஆம் ஆண்டு பஞ்சாபில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் 126 சட்டமன்ற இடங்கள் 154 இடங்களாக அதிகரிக்கப்பட்டன. 1957 சட்டமன்றத் தேர்தலின் போது, சிரோமணி அகாலிதளம் தேர்தலைப் புறக்கணித்தது.

காங்கிரஸ் கோட்டை
அப்போது, பஞ்சாபில் மொத்தமிருந்த 154 தொகுதிகளில் 120 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. அதே நேரத்தில், 5 ஆண்டுகளுக்குப் பிறகு, 1962 தேர்தலில், சிரோமணி அகாலிதளம் தேர்தல் காளத்தில் நுழைந்தது, ஆனால் பெரிதாக எதையும் செய்ய முடியவில்லை. 1962 தேர்தலில் சிரோமணி அகாலிதளம் போட்டியிட்ட போதிலும், காங்கிரஸ் 154 இடங்களில் 90 இடங்களில் வெற்றி பெற்றது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி












Click it and Unblock the Notifications