சண்டிகர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆக்ஸிஜன் லாரியை டெல்லி அரசு கொள்ளை அடித்துவிட்டது... ஹரியானா மந்திரி அனில் விஜ் திடுக் புகார்..!

Google Oneindia Tamil News

சண்டிகர்: ஃபரீதாபாத்துக்கு சென்று கொண்டிருந்த தங்கள் மாநிலத்துக்கு சொந்தமான ஆக்ஸிஜன் டேங்கர் லாரியை டெல்லி அரசு கொள்ளை அடித்துவிட்டதாக கூறியிருக்கிறார் ஹரியானா சுகாதாரத்துறை அமைச்சர் அனில் விஜ்.

இதனால் ஹரியானா மாநிலத்தில் உள்ள அனைத்து டேங்கர் லாரிகளுக்கும் போலீஸ் பாதுகாப்பு அளிக்க தாம் உத்தரவிட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டால் மருத்துவ உலகமே தடுமாறி வரும் சூழலில் அனில் விஜ் முன்வைத்துள்ள இந்தக் குற்றச்சாட்டு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஆக்சிஜன் பற்றாக்குறை: மகாராஷ்டிராவுக்கு விரைந்த'ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ்’ ரயில்.. தட்டுப்பாடு தீருமா? ஆக்சிஜன் பற்றாக்குறை: மகாராஷ்டிராவுக்கு விரைந்த'ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ்’ ரயில்.. தட்டுப்பாடு தீருமா?

வேகமாக பரவல்

வேகமாக பரவல்

கொரோனாவின் 2-வது அலை காற்றை விட வேகமாக இந்தியாவில் பரவி வருகிறது. இதனால் மத்திய மாநில அரசுகள் மக்களை காப்பதற்கான அனைத்து முயற்சிகளிலும் தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளன. இந்நிலையில் உத்தரப்பிரதேசம், டெல்லி, மஹாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் கொரோனாவின் தீவிரம் மிக அதிகமாக இருப்பதால் அங்கு மருத்துவமனைகளுக்கு செல்லும் நோயாளிகள் அதிகமாகி வருகின்றனர்.

ஆக்சிஜன் தட்டுப்பாடு

ஆக்சிஜன் தட்டுப்பாடு

அவ்வாறு மருத்துவமனைகளை நோக்கி கொரோனா நோயாளிகள் குவிந்து வருவதால் அவர்களுக்கு உயிர் காக்கும் சிகிச்சைகள் அளிப்பதில் சில நடைமுறைச் சிக்கல்களும் எழுந்துள்ளன. போதிய இட வசதியின்மை, மருத்துவர்கள் பற்றாக்குறை, ஆக்ஸிஜன் தட்டுப்பாடு, என பட்டியல் நீள்கிறது. இதில் ஆக்சிஜன் தட்டுப்பாடு என்பது சுகாதார அமைப்பையே திணற வைத்திருக்கிறது.

ஆக்சிஜன் டேங்கர்

ஆக்சிஜன் டேங்கர்

இந்தச் சூழலில் ஹரியானா மாநிலத்துக்கு சொந்தமான ஆக்ஸிஜன் டேங்கர் லாரியை டெல்லி அரசு கொள்ளை அடித்துவிட்டதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் அனில் விஜ் திடுக்கிடும் புகார் ஒன்றை வெளியிட்டுள்ளார். தங்கள் மாநிலத்தின் தேவைக்கு போகவே மீதமுள்ள ஆக்ஸிஜனை மற்ற மாநிலங்களுக்கு வழங்க முடியும் என்பதையும் அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

உற்பத்தி மையங்கள்

உற்பத்தி மையங்கள்

இதனிடையே ஹரியானா மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் ஆக்சிஜன் உற்பத்தி மையங்களிலும் சுகாதாரத்துறை அதிகாரிகளை பணியமர்த்த உத்தரவிட்டுள்ள அனில் விஜ், அங்கு பாதுகாப்பு பணிகளையும் பலப்படுத்த ஆணையிட்டுள்ளார். ஹரியானாவில் மனோகர் லால் கட்டார் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெறுவதும் டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடைபெறுவதும் குறிப்பிடத்தக்கது.

English summary
Anil vij says, Delhi govt stealed haryana oxygen tanker lorry
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X