நடிகர் அக்ஷய்குமார் திரைப்படத்துக்கு விவசாயிகள் எதிர்ப்பு.. போஸ்டர்கள் கிழிப்பு.. பரபர பின்னணி!
சண்டிகர்: பிரபல ஹிந்தி நடிகர் அக்ஷய்குமார் நடித்துள்ள 'சூர்யவன்ஷி' என்ற திரைப்படம் தீபாவளி அன்று தியேட்டர்களில் வெளியாகி இருக்கிறது. பஞ்சாப் மாநிலத்தில் பல்வேறு தியேட்டர்களில் 'சூர்யவன்ஷி' திரைப்படம் வெளியாகி இருக்கிறது.
இந்த நிலையில் ஹோஷியார்பூரில் உள்ள ஸ்வரன் தியேட்டரில் சூர்யவன்ஷி படம் ஓடிக் கொண்டிருந்தது. பார்தி கிசான் யூனியன் விவசாய சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஸ்வரன் துக்கா தலைமையில் ஏராளமான விவசாயிகள் அங்கு விரைந்து வந்தனர்.

போஸ்டர்களை கிழித்தெறிந்தனர்
நடிகர் அக்ஷய் குமார் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை என்று கூறிய விவசாயிகள் தியேட்டர்களுக்கு வெளியேருந்த சூர்யவன்ஷி படத்தின் போஸ்டர்களை கிழித்தெறிந்தனர். மேலும் தியேட்டர் அலுவலகத்திற்கு சென்ற விவசாயிகள் தியேட்டர் உரிமையாளர்களிடம் சூர்யவன்ஷி படத்தை திரையிடக்கூடாது என்று கூறினார்கள்.

கண்டன ஊர்வலம்
முன்னதாக சூர்யவன்ஷி திரைப்படம் திரையிடப்படுவதை எதிர்த்து உதம் சிங் பூங்காவில் இருந்து ஸ்வரன் திரையரங்கம் வரை ஆர்ப்பாட்டம் மற்றும் கண்டன ஊர்வலத்தை விவசாயிகள் நடத்தினார்கள். வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படும் வரை நடிகர் அக்ஷய் குமார் திரைப்படங்களை திரையிட அனுமதிக்க மாட்டோம் என்று போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் உறுதியுடன் தெரிவித்தனர். ஹோஷியார்பூரில் சூர்யவன்ஷி திரைப்படம் திரையிட்ட 5 தியேட்டர்களுக்கு விவசாயிகள் இதேபோல் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மூன்று வேளாண் சட்டம்
மத்திய அரசு நிறைவேற்றிய மூன்று வேளாண் சட்டங்களை கண்டித்து தலைநகர் டெல்லியில் பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு அவர்களுடன் இதுவரை 11 கட்ட பேச்சுவார்த்தை நடத்தி விட்டது. ஆனால் இதில் எதிலும் முடிவு கிடைக்கவில்லை.

பா.ஜ.க.வுக்கு எதிர்ப்பு
வேளாண் சட்டத்தை முழுமையாக ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் திட்டவட்டமாக உள்ளனர். பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில் இங்கு பா.ஜ.க.வுக்கு எதிராக விவசாயிகள் பிரசாரத்தை தொடங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.
-
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications