சண்டிகர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

என்னதான் பாட்டு பாடினாலும்.. டான்ஸ் ஆடினாலும்.. டிக் டாக் சோனாலியை நிராகரித்த ஆதம்பூர்

டிக் டாக் புகழ் சோனாலி தோல்வியை தழுவி உள்ளார்

Google Oneindia Tamil News

Recommended Video

    Tik Tok Star Sonali Phogat to contest Haryana Election on BJP ticket

    சண்டிகர்: டிக்டாக் பிரபலம் சோனாலி போகத் தோற்றுப் போய் விட்டார்.. இதுவும் இன்று ஹரியானாவில் முக்கியச் செய்திதான்.

    டிக்டாக் செய்தே பிரபலமானவர் சோனாலி. ஹரியானாவில் இவரது டிக்டாக் வீடியோக்களுக்கு அத்தனை மவுசு இருக்கிறது. பலரும் இவரது வீடியோக்களுக்கு பெரும் ரசிகர்கள்.

    ரசிகர்கள் என்றால் சும்மா இருக்க வேண்டியதுதானே.. இவருக்கு பாஜகவில் சீட் கேட்டு ஒரு பிரச்சாரமே நடத்தி விட்டனர். விடுமா பாஜக .. சோனாலியை டக்கென உள்ளே இழுத்துப் போட்டு சீட் கொடுத்து ஆதம்பூர் தொகுதியில் நிறுத்தி விட்டது.

    பஞ்சாப்: 4 தொகுதி இடைத்தேர்தல்களில் பாஜக, அகாலிதளத்தை வீழ்த்தி 3-ல் காங். அமோக வெற்றி!பஞ்சாப்: 4 தொகுதி இடைத்தேர்தல்களில் பாஜக, அகாலிதளத்தை வீழ்த்தி 3-ல் காங். அமோக வெற்றி!

    வீடியோக்கள்

    வீடியோக்கள்

    உற்சாகமான சோனாலி டிக்டாக் மூலமாகவும் தனது பிரச்சாரத்தை முன்னெடுத்து அனைவரையும் அசரடித்தார். "தொகுதி மக்களை கவர டிக் டாக் ஆப் மூலமாகவும் பிரச்சாரம் செய்ய போகிறேன், குறிப்பாக தேச பக்தி சம்பந்தமான வீடியோக்களை வெளியிட போகிறேன்" என்று சொல்லிதான் விறுவிறுப்பாக பிரச்சாரம் செய்தார். இவருக்காக இவரது ரசிகர்களும் இணைந்து பாஜகவினருடன் சேர்ந்து பிரச்சாரம் செய்து அசத்தினர். ஆனால் என்ன ஒரு துரதிர்ஷ்டம் பாருங்க.. சோனாலி தோற்றுப் போய் விட்டார்.

    ஆதம்பூர்

    ஆதம்பூர்

    ஆதம்பூர் தொகுதியில் மூத்த காங்கிரஸ் தலைவர் குல்தீப் பிஷ்னாய் போட்டியிட்டார். 3 முறை எம்எல்ஏவாக இருந்தவர் அவர். அவரை எதிர்த்து தீவிரமாக பிரச்சாரம் செய்தும் சோனாலியால் வெல்ல முடியாமல் போய் விட்டது. கிட்டத்தட்ட 30, 000 வாக்குகள் வித்தியாசத்தில்சோனாலி தோற்றுப் போய்விட்டார்.

    தோல்வி

    தோல்வி

    சோனாலி தோற்றாலும் கூட அதிலும் ஒரு சின்ன சாதனையைச் செய்துள்ளார். அரசியலுக்கு புதுமுகமான அவர் தற்போது ஹரியானாவில் கிங் மேக்கராக உருவெடுத்துள்ள ஜேஜேபி கட்சியின் வேட்பாளரை தனக்குப் பின்னால் தள்ளி அதிர வைத்து வட்டார்.

    ரமேஷ்குமார்

    ரமேஷ்குமார்

    இந்த தேர்தலில் குல்தீப்புக்கு 51.66 சதவீத வாக்குகளும், சோனாலிக்கு 27.8 சதவீத வாக்குகளும், ஜேஜேபி வேட்பாளர் ரமேஷ் குமாருக்கு 12.55 சதவீத வாக்குகளும் கிடைத்தன. இதற்கு முன்பு பாஜக பெண் அரசியல்வாதிகள் நிறைய பேர் டிக் டாக் செய்துள்ளனர். ஆனால், சோனாலி டிக் டாக் செய்துவிட்டு அரசியலுக்குள் வந்துள்ளார்.

    அனுபவம்

    அனுபவம்

    எந்தவித அரசியல் பின்புலம் இல்லாத ஒருவருக்கு, வெறும் டிக்டாக் பாப்புலாரிட்டியை வைத்து பாஜக சீட் தந்தது எந்த அளவுக்கு சரி என தெரியவில்லை. இருந்தாலும், டிக் டாக் செய்த ஒருவர் ஸ்ட்ரைட்டாக அரசியலுக்குள் என்ட்ரி தந்து.. தோல்வியையும் தழுவி உள்ளது, சோனாலிக்கு ஓரளவு அரசியல் அனுபவத்தை பெற்று தரும் என்றே நம்பலாம்!

    English summary
    haryana assembly election results 2019: Tik toc fame Sonali Phogat loses in Adampur
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X