Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

9 நாட்கள்.. இரவு பகல் பாராமல்.. "சைக்கோ" நண்பன் செய்த கொடூரம்.. சினிமா ஸ்டைலில் தப்பிய இளம்பெண்!

Subscribe to Oneindia Tamil

சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் 26 வயதுடைய இளம் பெண் ஒருவர் கடத்தப்பட்டு 9 நாட்கள் அடைத்து வைக்கப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து அப்பெண் அங்கிருந்து எப்படியோ தப்பித்து வந்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் குற்றம்சாட்டப்பட்ட நபரை தேடி வருகின்றனர்.

கடத்தல்

கடத்தல்

ஆட்கள் கடத்தல் என்பது இந்தியா போன்ற அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் சர்வ சாதாரணம். இவ்வாறு இருக்கையில் பணம் கேட்டு மிரட்டி கடத்தப்படுபவர்களை காட்டிலும், தேவைகளுக்காக கடத்தப்படுபவர்களே அதிகம் என்கிறது புள்ளிவிவரங்கள். இதில் பெண் குழந்தைகள்தான் அதிக அளவில் கடத்தப்படுகின்றனர். இவர்கள் அண்டை நாடுகளில் பாலியல் தேவைக்காக விற்பனை செய்யப்படுகின்றனர். இந்த பிரச்னை இந்தியாவுக்கு மிகப்பெரிய சவாலாக நீடித்து வருகிறது.

நண்பன்

நண்பன்

இவ்வாறு இருக்கையில் பஞ்சாப் மாநிலத்தில் 23 வயது இளம்பெண் ஒருவர் கடத்தப்பட்டு பல முறை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். பின்னர் அங்கிருந்து தப்பி வந்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்து காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது, "பஞ்சாப் மாநிலத்தின் ஹத்துரை சேர்ந்த ஜஸ்பால் சிங் என்பவரும் அதே பகுதியை சேர்ந்த 26 வயது இளம் பெண்ணும் கடந்த 2 ஆண்டுகளாக நண்பர்களாக பழகி வந்துள்ளனர்.

பாலியல் பலாத்காரம்

பாலியல் பலாத்காரம்

இவ்வாறு இருக்கையில், தான் துபாய் செல்வதாகவும் எனவே தனக்கு தேவையான பொருட்களை வாங்க உதவ வேண்டும் எனவும் அப்பெண்ணை ஷாப்பிங் மாலுக்கு அழைத்துள்ளார் ஜஸ்பால் சிங். அங்கு அவரது கூட்டாளிகளின் உதவியுடன் மயக்க மருந்து கொடுத்து அப்பெண்ணை ஜஸ்பால் கடத்தியுள்ளார். பின்னர் கண் விழித்து பார்த்த இளம்பெண் தான் எங்கு இருக்கிறோம் என்றும், என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்றும் தெரியாமல் விழித்துள்ளார்.

9 நாட்கள்

9 நாட்கள்

அப்போதுதான் ஜஸ்பால் தனது குரூர நடத்தையை அப்பெண்ணிடம் கூறியுள்ளார். அதாவது அவர்கள் இப்போது உத்தரப் பிரதேசத்தில் இருக்கிறோம். இது 8வது நாள். நீ மயக்கமாக இருந்தபோது நான் உன்னை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்தேன் என ஜஸ்பால் நடந்ததை சொல்ல, அப்பெண் கதறி அழுதுள்ளார். ஆனாலும் ஜஸ்பால் விடாமல் பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். இவ்வாறு இருக்கையில், அப்பெண் அங்கிருந்து எப்படியோ தப்பித்து வந்துள்ளார்." என காவல்துறை கூறியுள்ளது.

சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், ஜஸ்பால் சிங் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் 342 மற்றும் 376 ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+