கொடூரம்.. பொதுவெளியில் ஆம்ஆத்மி பெண் எம்எல்ஏவின் கன்னத்தில் ‛பளார்’ விட்ட கணவர்.. பரபரத்த பஞ்சாப்
சண்டிகர்: பஞ்சாப்பில் ஆம்ஆத்மி கட்சியின் பெண் எம்எல்ஏவான பல்ஜிந்தர் கவுரை அவரது கணவர் பொதுவெளியில் பளார் என் தாக்கினார். இதுதொடர்பான வீடியோ வெளியாகி தற்போது விவாதத்துக்கு உள்ளாகி உள்ளது.
இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 2020ம் ஆண்டை ஒப்பிடும்போது 2021ல் அதிகரித்துள்ளது. இதுதொடர்பாக தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்ட விபரங்களின் படி இந்தியாவில் 15 சதவீதம் வரை பெண்களுக்கு எதிராக குற்றங்கள் அதிகரித்துள்ளது.
குறிப்பாக பெண்களுக்கு எதிராக குடும்ப பிரச்சனைகள் தொடர்ந்து அதிகரித்துள்ளன. இந்நிலையில் தான் தற்போது ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

பரவும் வீடியோ
இந்த வீடியோவில் பெண் ஒருவர் தன்னை சுற்றி நிற்பவரிடம் வாக்குவாதம் செய்கிறார். பின்னர் ஒருவர் அவரை கொடூரமாக கன்னத்தில் தாக்குகிறார் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இந்த வீடியோவுக்கு பல்வேறு தரப்பு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் தான் அந்த சம்பவம் எங்கு நடந்தது? வீடியோவில் இருப்பது யார்? என்பது பற்றிய பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆம்ஆத்மி எம்எல்ஏ
அதாவது வீடியோவில் தாக்குதலுக்கு ஆளாகும் நபர் ஆம் ஆத்மி கட்சியின் பஞ்சாப் மாநிலம் தால்வாண்டி சாபோ தொகுதியின் எம்எல்ஏ பல்ஜிந்தர் கவுர் என்பது தெரியவந்தது. மேலும் அவரை அவரது கணவர் சுக்ராஜ் சிங் அடிக்கிறார். குடும்ப பிரச்சனை காரணமாக இந்த சம்பவம் பஞ்சாப்பில் உள்ள அவர்களின் வீட்டின் முன்பு நடந்ததும், சிசிடிவியில் பதிவான காட்சிகள் வீடியோவாக வெளியானதும் தெரியவந்துள்ளது.

மகளிர் ஆணையம் விசாரணை
இதையடுத்து பலர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. நாட்டில் பெண் எம்எல்ஏ ஒருவருக்கே இந்த நிலையா? என கேள்வி எழுப்பியுள்ளனர். இதற்கிடையே சம்பவம் குறித்து பஞ்சாப் மாநில மகளிர் ஆணையத்தின் கவனத்துக்கு சென்றுள்ளது. அந்த ஆணையத்தின் தலைவி மனிஷா குலாட்டி , ‛‛நான் சமூக வலைதளத்தில் பல்ஜிந்தர் கவுரை தாக்கும் வீடியோவை பார்த்தேன். இதுபற்றி தாமாக முன்வந்து விசாரிக்க உள்ளோம். பொதுப்பிரச்சனைகளை தீர்க்க போராடும் பெண் எம்எல்ஏ அவரது வீட்டில் துன்புறுத்தலுக்கு ஆளாவது வருத்தமளிக்கிறது'' என கூறியுள்ளார்.

பஞ்சாப் நிலவரம் என்ன?
மேலும் சமீபத்திய தேசிய குற்ற ஆவண காப்பத்தின் விபரங்கள் படி 2021ல் பஞ்சாப்பில் பெண்களுக்கு எதிரான குற்றம் என்பது 17 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. 2020 இல் 4,838 வழக்குகள் பதிவாகி இருந்த நிலையில் கடந்த ஆண்டு 5,662 வழக்குகள் பதிவாகி உள்ளது. இந்நிலையில் தான் பெண் எம்எல்ஏ மீது அவரது கணவர் தாக்கிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications