பஞ்சாப் சட்டசபை தேர்தல்: பாஜகவுடன் கூட்டணி.. அமரீந்தர் சிங் அறிவிப்பு.. வெற்றி உறுதி என உற்சாகம்!
சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. அங்கு சில மாதங்களுக்கு முன்பு வரை முதல்வராக இருந்தவர் கேப்டன் அமரீந்தர் சிங். காங்கிரஸ் மூத்த தலைவரும், முதல்வருமான அமரீந்தர் சிங்குக்கும் காங்கிரஸ் மூத்த தலைவர் நவ்ஜோத் சிங் சித்துக்குவுக்கும் இடையே பனிப்போர் வெடித்தது.
அடுத்த ஆண்டு பஞ்சாப்பில் தேர்தல் நடைபெற உள்ள நேரத்தில் இந்த மோதல் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு பெரும் தலைவலியை உண்டாக்கியது. அவர் இருவரையும் டெல்லிக்கு வரவழைத்து சமாதானம் பேசினார்.

முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங்
ஆனால் இது சுத்தமாக எடுபடவில்லை. அதன்பிறகும் மோதல் முற்றவே காங்கிரஸ் தலைமை நவ்ஜோத் சிங் சித்துக்கு ஆதரவாக செய்லபடுவதாக குற்றம்சாட்டிய அமரீந்தர் சிங் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதன் பின்னர் காங்கிரசில் இருந்தும் விலகினார். இதனால் அவர் பாஜகவில் சேர போகிறார் என்று பேச்சுக்கள் எழுந்தன.

அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு
இதையெல்லாம் தவிடுபொடியாக்கிய கேப்டன் அமரீந்தர் சிங், பஞ்சாப் லோக் காங்கிரஸ் என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கினார். இந்த முறை காங்கிரசை வீழ்த்த அவர் பாஜகவுடன் கூட்டணி அமைப்பார் என்று பலரும் உறுதியாக கூறினார்கள். இதற்கு ஏற்றார்போலவே பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைப்பதாக அமரீந்தர் சிங் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

நிச்சயம் வெற்றி பெறுவோம்
தலைநகர் டெல்லியில் பஞ்சாப் மாநில பாஜக பொறுப்பாளர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்து பேசிய பிறகு அமரீந்தர் சிங் இதனை கூறியுள்ளார். தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை இனிதான் நடைபெறும் என்றும் ஒன்றாக தேர்தலில் போட்டியிடுவோம். நாங்கள் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்றும் கேப்டன் அமரீந்தர் சிங் உற்சாகமாக தெரித்துள்ளார்.

பாஜக உற்சாகம்
அமரீந்தர் சிங்கின் இந்த அறிவிப்பால் பாஜக முகாம் உற்சாகம் அடைந்துள்ளது. கடந்த பஞ்சாப் சட்டமன்ற தேத்தலில் பாஜக, அகாலி தளத்துடன் கூட்டணி அமைத்து எதிர்கொண்டது. ஆனால் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக கூட்டணியில் இருந்து அகாலி தளம் வெளியேறியது. தற்போது பாஜக- அமரீந்தர் சிங் கூட்டணி உறுதியாகி உள்ள நிலையில் காங்கிரசுக்கு கடும் போட்டி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications