பஞ்சாபில் அபார வெற்றி பெற்ற ஆம் ஆத்மி 42% வாக்குகள் அள்ளியது - காங் 23% சிரோன்மணி 18% பாஜக 6%
பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி அபார வெற்றி பெற்றுள்ளது. 42 சதவிகித வாக்குகளை அள்ளியுள்ளது.
சண்டிகர்:
Recommended Video
பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றும் சூழல் உள்ளது. ஆளும் காங்கிரஸ் அதிக பெரும் தோல்வியை சந்தித்துள்ளது. 42 சதவிகித வாக்குகளை அள்ளியுள்ளது ஆம் ஆத்மி கட்சி, ஆளும் காங்கிரஸ் கட்சி வெறும் 23% வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது. சிரோன்மணி அகாலிதளம் 18% வாக்குகளை பெற்றுள்ள நிலையில் பாஜக வெறும் 6% வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது.
பஞ்சாபில் 117 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. காங்கிரஸ், ஆம் ஆத்மி, பாஜக, சிரோன்மணி அகாலிதளம் இடையே கடும் போட்டி நிலவியது. அங்கு ஒரே கட்டமாக தேர்தல் நடந்து முடிந்தது. விவசாய சட்டங்களுக்கு எதிரான போராட்டம், 3 விவசாய சட்டங்கள் நீக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களை பஞ்சாப் தேர்தல் அதிக முக்கியத்துவம் பெறுகிறது.

காங்கிரஸ் ஆளும் கட்சியாக இருக்கும் நிலையில், முக்கிய எதிர்க்கட்சியாக ஆம் ஆத்மியும் தீவிரமாக தேர்தல் களத்தில் பணியாற்றி இருந்தது. தற்போது தேர்தலுக்குப் பிந்தைய கருத்துகணிப்பு முடிவுகள் பலவும் ஆம் ஆத்மிக்கு சாதமாக வந்தன. அதன்படி, தனிப்பெரும்பான்மையுடன் ஆம் ஆத்மி பஞ்சாப்பில் ஆட்சியை பிடிக்கும் என பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் தெரிவித்தன.
https://results.eci.gov.in/ResultAcGenMar2022/partywiseresult-S19.htm?st=S19
கருத்துக்கணிப்புகள் சொன்னது பலித்துள்ளது. 117 தொகுதிகளின் முடிவுகளை தேர்தல் ஆணையம் தனது இணைய தளத்தில் பதிவேற்றியுள்ளது. ஆம் ஆத்மி கட்சி மொத்தம் 42% வாக்குகளை அள்ளியுள்ளது. ஆம் ஆத்மி கட்சியின் துடைப்பம் மொத்தத்தில் அனைத்து கட்சிகளையும் துடைத்து தூசி தட்டி தூரத்தள்ளியுள்ளது. ஆளுங்கட்சியான காங்கிரஸ் கட்சி 23% வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது. சிரோன்மணி அகாலிதளம் கட்சி 18% வாக்குகளை மட்டுமே பெற்றது. பாஜக வெறும் 6% சதவிகித வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி மிகப்பெரிய வெற்றியை பெறுவதற்குக் காரணம் மாற்றத்திற்காக கூக்குரல்தான். காங்கிரஸ் கட்சிக்கு மாற்றாக ஆம் ஆத்மி கட்சியை மக்கள் தேர்வு செய்துள்ளனர். டெல்லி மாடல், இளைஞர்கள் மற்றும் பெண்களின் சாய்ஸ் ஆம் ஆத்மி கட்சியாக இருந்தது. முதல்வர் முகமாக பகவான் மான் அறிவிக்கப்பட்டதும் வெற்றிக்கான காரணமாக கருதப்படுகிறது. டெல்லியை அடுத்து பஞ்சாப்பிலும் வெற்றிக்கொடி நாட்டியுள்ளது ஆம் ஆத்மி கட்சி
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications