பஞ்சாப் தேர்தல்.. முதல்வர் வேட்பாளராக விரும்பும் சித்து- கை விரித்துவிட்ட டெல்லி மேலிடம்!
சண்டிகர்: பஞ்சாப் சட்டசபை தேர்தலில் தம்மை காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்த வேண்டும் என்று அம்மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர் நவ்ஜோத்சிங் சித்து விரும்புகிறார். ஆனால் பஞ்சாப் தேர்தலில் முதல்வர் வேட்பாளர் என யாரையும் அறிவிக்கப் போவது இல்லை நோஸ்கட் கொடுத்திருக்கிறது காங்கிரஸ் மேலிடம்.
பஞ்சாப் மாநில சட்டசபை தேர்தல் தேதி எந்த நேரத்திலும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பஞ்சாப்பில் இப்போதுதான் ஓமிக்ரான் பரவல் தொடங்கி இருக்கிறது.
ஆனால் தலைமை தேர்தல் ஆணையமோ, பஞ்சாப், உ.பி. உள்ளிட்ட 5 மாநில சட்டசபைத் தேர்தல்களை திட்டமிட்டபடி நடத்துவதில் தீவிரமாக இருக்கிறது. இது தொடர்பான பல்வேறு கட்ட ஆலோசனைகளையும் மேற்கொண்டுள்ளது.

பஞ்சாப் காங். மோதல்
பஞ்சாப் மாநிலத்தைப் பொறுத்தவரையில் ஆளும் காங்கிரஸ் கட்சி, ஏதோ ஒரு நம்பிக்கையில் ஆட்சியை தக்க வைக்க முடியும் என கனவு காண்கிறது. ஆனால் கள யதார்த்தத்தில் பஞ்சாப் காங்கிரஸ் கட்சியில் நிலவும் உட்கட்சி மோதல்கள், அக்கட்சிக்கான வெற்றியை ஆழக் குழி தோண்டிப் புதைத்து வருகின்றன என்பதுதான். ஒவ்வொரு தலைவர்களும் தமக்கு போட்டியான தலைவர்களை கவிழ்ப்பது எப்படி என்பதில் கங்கணம் கட்டிக் கொண்டுதான் வலம் வருகின்றனர்.

அமரீந்தர்சிங்- சித்து
ஏற்கனவே முதல்வராக இருந்த அமரீந்தர்சிங்கை இப்படித்தான் பதவியில் இறக்கினார் நவ்ஜோத்சிங் சித்து. இதனால் வெறுத்துப் போன அமரீந்தர்சிங் காங்கிரஸ் கட்சியே வேண்டாம் என வெளியேறிப் போனார். இப்போது தனிக் கட்சி தொடங்கி பாஜகவுடன் கூட்டணியும் அமைத்துவிட்டார்.

முதல்வர் வேட்பாளர்
ஆனாலும் நவ்ஜோத் சிங் சித்துவின் பதவி வேட்கை ஓயவில்லை. தற்போதைய முதல்வர் சரண்ஜித்சிங் பதவி ஏற்ற நாள் முதலே மல்லுக்கட்டிக் கொண்டும் குடைச்சல் கொடுத்துக் கொண்டும்தான் இருக்கிறார். சட்டசபைத் தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில் காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளராக தம்மை முன்னிறுத்த விரும்புகிறார் சித்து.

சித்துவுக்கு எதிர்ப்பு
சித்துவின் இந்த சேட்டையை முதல்வர் சரண்ஜித்சிங் சன்னி உள்ளிட்ட பல தலைவர்களும் விரும்பவில்லை. இது தொடர்பாக கருத்து தெரிவித்த பஞ்சாப் முன்னாள் காங்கிரஸ் தலைவர் சுனில் ஜாகர், 2017-ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலைத் தவிர இதர தேர்தல்களில் முதல்வர் வேட்பாளரை காங்கிரஸ் அறிவித்தது இல்லை. அப்படி ஒரு நடைமுறை காங்கிரஸ் கட்சிக்கு கிடையாது. அதனால் முதல்வர் வேட்பாளர் என யாரையும் அறிவிக்கப் போவது இல்லை என்றார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications