10,11, 12 ஆம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு மீண்டும் வாய்ப்பு..அரசுத் தேர்வுத்துறை இயக்ககம் அறிவிப்பு
10,11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் தனித்தேர்வர்கள் இன்று முதல் 16 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
சென்னை: 10,11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் தனித்தேர்வர்கள் இன்று முதல் 16 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் கொடுக்கப்பட்ட கடைசி தேதிக்குள் விண்ணப்பிக்க தவறிய தனித்தேர்வர்கள் தட்கல் முறையில் கூடுதல் கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம் என்றும் தமிழக தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
10,11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தேதிகள் அண்மையில் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் 10,11, 12 ஆம் வகுப்பு தேர்வுகள் எழுதும் தனித்தேர்வர்கள் எப்போது விண்ணப்பிக்கலாம் என்பது குறித்து தமிழக அரசு தேர்வுகள் இயக்ககம் தற்போது அறிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு தயாராகி வரும் தனித்தேர்வர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம். இதற்காக அரசுத் தேர்வுத் துறை சேவை மையங்களுக்கு நேரில் சென்று இணையதளம் வாயிலாக காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமையை தவிர்த்து 16 ஆம் தேதி வரை தனித்தேர்வர்கள் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம்.
கடைசி தேதியான 16 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கத் தவறிய தனித்தேர்வர்கள் மார்ச் 18 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை தட்கல் முறையில் கூடுதல் கட்டணம் செலுத்தி விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். தட்கல் முறையில் விண்ணப்பிக்க 10 ஆம் வகுப்புக்கு ரூ.500, 11 மற்றும் 12 ஆம் வகுப்புக்கு ரூ.1,000 தேர்வுக் கட்டணத்துடன் கூடுதலாக செலுத்த வேண்டும்.
இதை அடுத்து 10,11, 12ஆம் வகுப்பு தேர்வுக்கு விண்ணப்பிக்க இருக்கும் தனித்தேர்வர்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ள தேதிகளை கவனத்தில் கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications