100 எம்பிபிஎஸ் ஸ்பீடுனு சொல்லி 40 எம்பிபிஎஸ்... தாம்பரத்தில் ஏர்டெல்லை தெறிக்க விட்ட நபர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: 100 எம்பிபிஎஸ் ஸ்பீடு என்று சொல்லி எனக்கு 40 எம்பிபிஎஸ் ஸ்பீடு தான் வருகிறது. இதை யாருமே செக் பண்றது இல்லை என்பதால் மறைமுகமாக மக்களை ஏமாற்றுகிறார்கள் என்று கூறி ஒருவர் தாம்பரம் ஏர்டெல் ஷோரூம் நுழைவாயில் முன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டிருக்கிறார். இந்த போராட்டம் தான் தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக விவாதிக்கப்படுகிறது. ஏனெனில் ஏர்டெல், ஜியோ என்று எந்த நெட்வொர்க்கிலும் பணத்திற்கு ஏற்ற சேவை மற்றும் தரம் இருப்பது இல்லை என்ற விமர்சனங்கள் வலுத்து வருகிறது.

தாம்பரத்தைச் சேர்ந்த ஒருவர் ஏர்டெல் ஷோரூம் முன்பு அளித்த பேட்டியில் கூறுகையில், ஏர்டெல் வைபை டிடிஹெச் கனக்சனுடன் 1199க்கு வாங்கினேன். ஜூலை மாதத்தில் இருந்து வாங்கினேன். ஆனால் எனக்கு 100 எம்பிபிஎஸ் ஸ்பீடில் வாங்கினேன். ஆனால் வெறும் 40 எம்பிபிஎஸ் ஸ்பீடு தான் எனக்கு வருகிறது.

100 Mbps speed promised but only 40 Mbps delivered A fitting lesson for Airtel in Tambaram

இதுபற்றி கஸ்டமர் கேரில் புகார் அளித்தாலும் எந்த ரெஸ்பான்சும் இல்லை.. ஷோரூமுக்கு 3 நாட்களாக வந்து செல்கிறேன். அவர்கள் கடையில் உள்ள சிசிடிவிகேமராவில் பார்த்தால் கூட நான் வந்து போனது தெரியும். ஆனால் எந்த பலனும் இல்லை.. ஒரு ஆளுக்கு 400 ரூபாய் ஏமாற்றினால் இந்தியா முழுக்க கோடிக்கணக்கான கஸ்டமர்களிடம் எவ்வளவு பணம் போகும். இந்த பிரச்சனை தொடர்பாக பல முறை கஸ்டமர்கேரில் பேசியும் எந்த பயனுமில்லை.அதனால் போராடினேன்" என்று கூறினார்.

இந்த போராட்டம் குறித்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் பலர் விவாதித்து வருகிறார்கள். நெட்டிசன் ஒருவர் இதுபற்றி கூறுகையில், "ஏர்டெல், ஜியோ என்று மட்டுமில்லை, நம்ம நாட்டுல எந்த துறையில எடுத்துக்கிட்டாலும் வாங்குற காசுக்கு ஏத்த படியான சர்வீஸயோ, குவாலிட்டியோ குடுக்குறதே இல்லை. காரணம், நீதிமன்றத்திற்கே போனாலும் அதுக்கு ஆகுற அலைச்சல், செலவு, மன உளைச்சல், உடல் உபாதைகள்ன்னு ஒரு பக்கம், நீதி கிடைக்க ஆகுற காலதாமதம் ஒரு பக்கம், இது எல்லாமே கார்ப்பரேட்க்குதான் சாதகமாக இருக்கிறது. இதெல்லாம் நம்மளோட சாபம்" இவ்வாறு கூறியுள்ளார்.

இன்னொரு நெட்டிசன் கூறுகையில், இதே நிலைமை தான் எங்களுக்கும் நடக்கிறது,கடந்த 7 வருஷமாக மாதம் 199/- க்கு 10 Mpbs Speed-க்கு 0.5 Mpbs தான் வந்தது,Landline-ல் 198-க்கு கம்பளைன்ட் பன்னுனா திரும்ப திரும்ப ஒரே வாய் மெசேஜ் தமிழுக்கு 1 அமுத்தவும் அப்படின்னே சொல்லிட்டு இருந்தது 1 அமுத்துன்னா மாதம் 799/- பிளானை மாற்றியதற்கு நன்றி-ன்னு கட்டாயிருச்சு,

நான் என்னடா புது வித டெக்னிக்கா இருக்கேன்னு திரும்பவும் கஸ்டமர் கேருக்கு கூப்பிட்டா திரும்பவும் முதல்ல இருந்து தமிழுக்கு 1 அமுத்தவும் அப்படின்னு திரும்ப திரும்ப சொல்லிகிட்டே இருந்துச்சு ஏற்கனவே 1 அமுத்துனதுக்கே 799/- பிளான் மாறிருச்சு.. திரும்பவும் 1 அமுத்துனா 1499/- பிளானை மாத்துனாலும் மாத்திருவாங்கன்னு 1 மேல கைய வச்சா மெத டெட்பாடி நீதான்னு மனசுல நினைச்சுகிட்டு போனை கட் பண்ணிட்டேன்,

ஒரு வழியா மொபைல் மூலம் நடந்த விவரத்தை கஸ்டமர் கேருக்கு கால் பன்னி திரும்பவும் முதல் இருந்து இந்த மாதிரி இந்த மாதிரியே நடந்துச்சுன்னு அவுங்க சாவுகாசமா.. திரும்பவும் முதல்ல இருந்து என்ன நடந்துச்சுன்னு சொல்லுங்க அப்படின்னாங்க.. திரும்ப பேசுற நீ திரும்ப பேசுற நீ-ன்னு மனசுக்குள்ள நினைச்சுகிட்டு முடியலைடா ஆளை உட்டுறுன்னு போனை கட் பன்னிட்டேன்.. வேண்டும் இல்லைனா கனெக்ஷன் வேண்டாமுன்னு சொல்லிட்டேன்,அடுத்த நாள் கஸ்டமர் கேரில் இருந்து போன் வந்தது இப்ப 499/- பிளான் இருக்குது மாறிக்கிறிங்களா அப்படின்னு கேக்குறாங்க,GST சேர்த்துனா மாதம் 580/- வரும்,பழைய பிளான் 199/- GST சேர்த்தால் மாதம் 238/- தான் வந்தது இப்ப மாதம் 300/- சேர்த்து கட்டுகிறேன் என்று குமுறுகிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+