ஒரு ஆண்டில் 13 மாதங்கள்.. 2023ன் ஆச்சரிய தகவல்! 19 ஆண்டில் முதல் முறை - இந்து காலண்டரில் சுவாரஸ்யம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2022 ஆம் ஆண்டு நிறைவடைந்து 2023 புத்தாண்டு தொடங்க இன்னும் 13 நாட்களே உள்ள நிலையில், அந்த ஆண்டில் 13 மாதங்கள் இருக்கிறது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? வாருங்கள் விரிவாக காண்போம்.

பொதுவாகவே உலகம் முழுவதும் ஆங்கில காலண்டர் முறையே அனைத்து நாட்டவர்களாலும் பொதுவானதாக பின்பற்றப்பட்டு வருகிறது. இதில் ஒரு ஆண்டுக்கு 12 மாதங்கள் 365 நாட்களும் உள்ளன.

பூமி சுயசுழற்ச்சியின் அடிப்படையில் நாட்களையும் சூரியனை பூமி சுற்றி வருவதை வைத்து இந்த ஆங்கில காலண்டர் பின்பற்றப்படுகிறது. இதில் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் லீப் ஆண்டில் மட்டும் 366 நாட்கள் இருக்கும்.

காலண்டர்கள்

காலண்டர்கள்

ஆங்கில காலண்டர் இல்லாமல், தமிழ், தெலுங்கும், மலையாளம், இந்து அல்லது இந்தியன், அரபு, கீரேக்கம், சீனா என பல நாடுகள், இனத்தவர்கள், மதத்தவர்களுக்கு தனி ஆண்டு, நாள் கணக்குகள் உள்ளன. இதில் இஸ்லாமிய காலண்டர் எனப்படும் அரபு காலண்டரில் நிலவை அடிப்படையாக கொண்டு நாட்களும் மாதங்களும் முடிவு செய்யப்படுவதால் ஆங்கில ஆண்டை விட இதன் நாட்கள் குறைவு.

இந்து அல்லது இந்திய காலண்டர்

இந்து அல்லது இந்திய காலண்டர்

இதேபோல் இந்து அல்லது இந்திய காலண்டரிலும் பின்பற்றப்பட்டு வருகிறது. இதிலும் 12 மாதங்கள் உள்ள நிலையில் வரும் 2023 ஆம் ஆண்டில் மட்டும் இந்து காலண்டரில் 13 மாதங்கள் என ஜோதிடர்கள் தெரிவிக்கின்றார்கள். கைத்ரா, வைசாகா, ஜைஸ்தா, அசதா, ஸ்ரவனா, பத்ரா, ஆஸ்வினா, கார்திகா, அக்ரஹ்யனா, பசா, மகா, பல்குனா என 12 மாதங்கள் இந்திய காலண்டரில் உள்ளது.

13 மாதங்கள்

13 மாதங்கள்

இதில் ஸ்ரவனா என்ற மாதத்தில் பக்தர்கள் சிவனை வழிபடுவார்கள். அந்த மாதத்தை 2 மாதங்களாக கணக்கிட்டுக் கொள்வார்களாம். கூடுதல் நிறை இருப்பதன் காரணமாக இதனை 2 மாதங்களாக கணக்கிடுவதாகவும், 19 ஆம் ஆண்டுகளுக்கு பிறகு இதுபோல் இந்து ஆண்டில் 13 மாதங்கள் வருவதாகவும் ஜோதிடர்கள் கூறுகிறார்கள். இதில் கூடுதல் நிறையை மல்மாஸ் என்றும், கூடுதல் மாதத்தை அதிக்மாஸ் என்றும் அவர்கள் அழைக்கிறார்கள்.

அதிக்மாஸ் எப்போது?

அதிக்மாஸ் எப்போது?

இந்த அதிக்மாஸ் எனப்படுவது வரும் 2023 ஆம் ஆண்டு ஜூலை 18 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்டு 16 ஆம் தேதி வரை தொடர்கிறது. இந்த காலகட்டம் விஸ்ணுவை வழிபடுவதற்கான காலமாகவும் கருதப்படுகிறது. இந்த மாதத்தில்தான் சிவராத்திரி பண்டிகையும் வருகிறது. எனவே சிவ பக்தர்கள் வழிபடுவதற்கு அதிக நேரம் கிடைக்கும் என்கிறார்கள் மதகுருக்கள்.

மல்மாஸ் என்றால் என்ன?

மல்மாஸ் என்றால் என்ன?

அதிக்மாஸ், மல்மாஸ் அல்லது புருசோத்தம் ஆகியவை இந்து வருடத்தில் வரும் கூடுதல் மாதத்தை குறிக்கும் வார்த்தைகளாகும். சூரிய ஆண்டில் 365 நாட்களும் 6 மணி நேரமும் இருக்கும். அதேபோல், நிலவு ஆண்டில் 354 நாட்கள் இருக்கும். இந்த 2 ஆண்டுகளுக்கும் இடையே 11 கூடுதல் நாட்கள் உள்ளன. இந்த 11 நாட்கள் ஏதாவது ஒரு மாதத்துடன் சேர்த்து கணக்கிடப்படும். ஒவ்வொரு மூன்று ஆண்டுக்கும் இடையே வரும் நிலவு மாதத்தை அதிக்மாஸ் என்றும், கால இடைவெளியை நிரப்ப இது பயன்படுவதாகவும் கூறுகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+