ஸ்கெட்ச் ராக்கெட் ராஜாக்கு மட்டுமில்லை! நள்ளிரவில் பரபரத்த போலீஸ்! ஆப்ரேசன் ‘மின்னல் ரவுடி வேட்டை’!
சென்னை : தமிழ்நாடு முழுவதும் போலீசார் நடத்திய மின்னல் ரவுடி வேட்டையில் கடந்த 24மணி நேரத்தில் 133 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த மின்னல் ரவுடி வேட்டையில் பல ஆண்டுகளாக போலீசாரிடம் பிடிபடாமல் இருந்த 13 A+ லிஸ்ட்டில் இருந்த ரவுடிகளும் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழக டிஜிபி சைலேந்திர பாபு கூறியுள்ளார்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ரவுடிகளின் அட்டூழியங்கள் அதிகரித்து வருவதாகவும், கூலிப்படை நடமாட்டம் மற்றும் தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக புகார்கள் எழுந்தன.
இதனையடுத்து ரவுடிகளை பிடிக்கும் முயற்சிகள் போலீசாரால் முன்னெடுக்கப்பட்டன. அந்த வகையில் நெல்லை மட்டுமல்லாது சென்னையில் அட்டகாசத்தை ஆரம்பித்து வந்த ராக்கெட் ராஜா நேற்று கேரளாவில் அதிரடியாகக் கைது செய்யப்பட்டார்.

மின்னல் ரவுடி வேட்டை
இந்நிலையில் ராக்கெட் ராஜா மட்டுமல்லாது நேற்று மட்டும் தமிழ்நாடு முழுவதும் போலீசார் நடத்திய மின்னல் ரவுடி வேட்டையில் கடந்த 24மணி நேரத்தில் 133 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த மின்னல் ரவுடி வேட்டையில் பல ஆண்டுகளாக போலீசாரிடம் பிடிபடாமல் இருந்த 13 A+ லிஸ்ட்டில் இருந்த ரவுடிகளும் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழக டிஜிபி சைலேந்திர பாபு கூறியுள்ளார். இதனால் தமிழகம் முழுவதும் ரவுடிகள் மீண்டும் தலைமறைவாகியுள்ளனர்.

திரைமறைவு கிரைம்
தமிழகத்தில் திரைமறைவு கிரைம்களில் ஈடுபடும் கிரிமினல்கள் அட்டகாசம் அதிகரித்து வருபதாக தொடர்ந்து புகார்கள் வந்தன. இந்நிலையில் தமிழகம் முழுவதும் ரவுடிகளின் அட்டகாசத்தை ஒடுக்க போலீசார் அதிரடி திட்டமிட்டனர். இதற்கு 'மின்னல் ரவுடி வேட்டை' எனவும் பெயர் வைக்கப்பட்டது. இந்த தேடுதல் வேட்டையில், பல ஆண்டுகளாக தேடிக் கொண்டிருந்தும் பிடிபடாமல் இருந்த பிரபல 13, A+ ரவுடிகள் சிக்கியுள்ளனர் என தமிழக காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

போலீஸ் அதிரடி
இது தொடர்பாக தமிழக காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்," கடந்த 24 மணி நேரத்தில் 'மின்னல் ரவுடி வேட்டை' தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டது. இதில், 133 முக்கிய ரவுடிகள் பிடிபட்டனர். கொலை, கொள்ளை வழக்குகளில் பிடியாணை (வாரண்ட்) நிலுவையில் இருந்த 15 பேர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

A+ ரவுடிகளும் சிக்கினர்
அதோடு பல ஆண்டுகளாக தேடிக் கொண்டிருந்தும், பிடிபடாமல் இருந்த பிரபல 13, A+ ரவுடிகளும் சிக்கினர். இவர்கள் மீது பல கொலை, கொள்ளை, நில அபகரிப்பு வழக்குகள் நிலுவையில் உள்ளன. பிடிபட்ட மற்ற 105 பேரிடம் விசாரணை நடந்து வருகிறது. காவல்துறையில் 'மின்னல் ரவுடி வேட்டை' தமிழகம் முழுவதும் தொடர்ந்து நடைபெறுகிறது.' என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் தமிழகத்தில் உள்ள தலைமறைவு ரவுடிகள் கலக்கமடைந்துள்ளனர்.
-
சென்னை நீலாங்கரை காவல் நிலையத்தில் விசாரணை கைதி தப்பி ஓட்டம் -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications