சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

குணமடைந்த 14 பேர்! சென்னையை சுற்றி ஒரு நாளில் நடந்த நல்ல மாற்றங்கள்

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 5 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதேபோல் செங்கல்பட்டு பகுதியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிசிச்சை பெற்று வந்தவர்களில் 9 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

Recommended Video

    குணமடைந்த 14 பேர்... ஒரே நாளில் நடந்த நல்ல மாற்றங்கள்

    தமிழகத்திலேயே சென்னையில் தான் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளது. சென்னையில் இதுவரை கொரோனாவால் 217 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னை அருகில் உள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் இது வரை 50 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல் திருவள்ளூர் மாவட்டத்தில் 41 பேரும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 8பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    14 corona patients discharged from hospital after recovery from disease

    அதாவது சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறப்பகுதிகளில் மட்டும் கொரோனாவால் 316 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளிகள் ஐந்து பேர் நேற்று குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதில் 4 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். ஒருவர் காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர். மருத்துவனையில் இருந்து வீடு திரும்பிய ஐந்து பேரையம் மருத்துவமனை ஊழியர்கள் உற்சாகமாக கைதட்டி வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். அவர்களை 14 நாட்கள் வீட்டில் தனிமையில் இருக்குமாறு அறிவுறுத்தி உள்ளனர்.'

    55 நாடுகளுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் தரும் இந்தியா.. ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் தர சம்மதம்55 நாடுகளுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் தரும் இந்தியா.. ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் தர சம்மதம்

    இதற்கிடையே சென்னைக்கு அருகில் உள்ள செங்கல்பட்டு மருத்துவமனையில் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 9 பேர் குணம் அடைந்து நேற்று வீடு திரும்பினர். அவர்களை மருத்துவர்கள் 14 நாட்கள் தனிமையில் இருக்குமாறு அறிவுறுத்தி உள்ளனர்.

    English summary
    14 coronavirus patients discharged from hospital after recovery from disease in chennai and chengalpattu
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X