சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சாமியானா பந்தல், மைக் செட்டுடன் நாளை முதல் சென்னையில் களைகட்டும் டாஸ்மாக் திறப்பு விழா

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் நாளை மதுக்கடைகளை திறக்கும் நிலையில் 14 வழிகாட்டும் நெறிமுறைகள் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்தன. இந்த நிலையில் மத்திய அரசு டாஸ்மாக் கடைகளை திறக்க சில தளர்வுகளை அளித்தவுடன் கடந்த ஜூன் மாதம் முதல் சென்னையை தவிர்த்து தமிழகத்திலும் கடைகள் திறக்கப்பட்டன.

அதே நேரத்தில் சென்னையிலிருந்து மற்ற மாவட்ட எல்லைகளுக்கு செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டது. மற்ற மாவட்டங்களிலிருந்து சென்னைக்கு வருவோரின் உடமைகளும் சோதனை செய்யப்பட்டன.

சந்தேகப்படுறீங்களா.. 10 நாட்கள் வெயிட் பண்ணுங்க.. 'ஸ்பூட்னிக் வி' தடுப்பூசி குறித்து ரஷ்யா அதிரடி!சந்தேகப்படுறீங்களா.. 10 நாட்கள் வெயிட் பண்ணுங்க.. 'ஸ்பூட்னிக் வி' தடுப்பூசி குறித்து ரஷ்யா அதிரடி!

எதிர்க்கட்சிகள்

எதிர்க்கட்சிகள்

இந்த நிலையில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாத நிலையில் டாஸ்மாக்கை திறக்க அவசரம் காட்டுவது ஏன் என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. இந்த நிலையில் சென்னை பெருநகர காவல்நிலையத்திற்குள்பட்ட மதுபான கடைகள் நாளை முதல் திறக்கப்படவுள்ளன. மத்திய சென்னை, தென் சென்னை, வடசென்னை, காஞ்சிபுரம் வடக்கு, தெற்கு, திருவள்ளூர் கிழக்கு, மேற்கு ஆகியவை சென்னை மண்டலத்திற்குள்பட்டவையாகும்.

நெறிமுறைகள்

நெறிமுறைகள்

இதற்கும் கடும் எதிர்ப்பு நிலவியுள்ளது. ஏற்கெனவே காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் சுமார் 200 மதுபான கடைகள் செயல்பட்டு வருகின்றன. சென்னை மண்டலத்தில் உள்ள 720 மதுபானக் கடைகள் நாளை முதல் திறக்கப்படுகின்றன. அதற்கான 14 வழிகாட்டும் நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

மதுக்கடை ஊழியர்

மதுக்கடை ஊழியர்

கடைமுன் 50 வட்டங்கள் வண்ணத்தினால் அல்லது பிளீச்சிங் பவுடரால் அமைக்க ஏற்பாடு செய்யப்பட வேண்டும். கடையின் விற்பனை கவுன்ட்டரை பிளாஸ்டிக் தட்டு கொண்டு அடைக்க வேண்டும். தன்னார்வலர்கள், மதுக் கடை ஊழியர் 5 பேரை கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு பயன்படுத்தலாம். வாடிக்கையாளர்கள் சுமார் 3 அடி இடைவெளி விட்டு நிற்க வேண்டும். மதுபான கடைகளுக்கு வரும் அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும்.

மைக் செட்டு

மைக் செட்டு

சாமியானா பந்தல், மைக் செட்டு அமைக்கப்பட வேண்டும். டாஸ்மாக் வாடிக்கையாளர்களுக்கு நாளொன்றுக்கு 500 டோக்கன்கள் மட்டுமே வழங்கப்பட வேண்டும். அவ்வப்போது தேங்கும் குப்பைகளை உடனே அகற்ற வேண்டும். மால்கள், நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருக்கும் மதுபான கடைகள் இயங்காது. மதுபான கடைகள் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும் என்பன உள்ளிட்ட 14 வழிகாட்டும் நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

English summary
Tasmac shops in Chennai opened from tomorrow with Samiyana and mic set. TN government releases 14 Standard Operating Procedure.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X