தமிழகத்தில் 14வது மெகா தடுப்பூசி முகாம் - தயார் நிலையில் 50 ஆயிரம் மையங்கள்
தமிழகத்தில் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு அதன் மூலம் லட்சக்கணக்கானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. நாளைய தினம் 14வது தடுப்பூசி முகாம் நடைபெறும் என அமைச்சர் அறிவித்துள்ளார்.
சென்னை: தமிழகம் முழுவதும் சனிக்கிழமையன்று 14வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. சுமார் 50 ஆயிரம் மையங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தடுப்பூசிகள் செலுத்தப்பட உள்ளன. தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் மையங்களில் இந்த முகாம்கள் நடத்த சுகாதாரத்துறை ஏற்பாடு செய்துள்ளது. இந்த பணியில் 2 லட்சம் பணியாளர்கள் ஈடுபடுகிறார்கள்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் பொருட்டு 18 வயதுக்கு மேற்பட்டோர் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதற்காக தொடர்ந்து மெகா சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன.
தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் கையாளாப்படுகின்றன. அதில் கொரோனா தடுப்பூசி பெரும்பங்காற்றுகிறது.
பெரும்பாலானோர் தடுப்பூசி செலுத்திக்கொள்வதில் ஆர்வம் காட்டாமல் இருந்து வருகின்றனர். தற்போது ஓமிக்ரான் அச்சுறுத்தல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்த வைரஸ் பாதிப்பிலிருந்து தற்காத்துக்கொள்ள, நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

அந்தவகையில் தமிழகத்தில் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு அதன் மூலம் லட்சக்கணக்கானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதுவரை 13 மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. நேற்றுவரை 7 கோடியே 24 லட்சத்து 30 ஆயிரம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
இன்னும் ஒரு கோடி பேர் முதல் தவணை தடுப்பூடியே போடாமல் இருக்கின்றனர். மேலும் 80 லட்சம் பேர் 2வது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை என்று தெரியவந்துள்ளது. இந்த நிலையில் 14வது மெகா தடுப்பூசி முகாம் நாளை சனிக்கிழமை நடைபெறுகிறது.
தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் மையங்களில் இந்த முகாம்கள் நடத்த சுகாதாரத்துறை ஏற்பாடு செய்துள்ளது. இந்த பணியில் 2 லட்சம் பணியாளர்கள் ஈடுபடுகிறார்கள்.
கடந்த வாரம் நடைபெற்ற 13வது மெகா தடுப்பூசி முகாமில் 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. அதே அளவிற்கு நாளை நடைபெறும் மெகா முகாம்களிலும் தடுப்பூசி செலுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் சுகாதாரத்துறை மேற்கொண்டுள்ளது.
சென்னை மாநகராட்சியை பொறுத்தவரை 15 மண்டலங்களில் 1,600 இடங்களில் இந்த மெகா தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த முகாம்களில் 2 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications