சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழகத்தில் மோசமாகும் பாதிப்பு.. இன்று 1974 பேருக்கு கொரோனா தொற்று.. 38 பேர் உயிரிழப்பு

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் இன்று ஒரு நாளில் 1974 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 44,661 ஆக உயர்ந்துள்ளது.

Recommended Video

    தமிழகத்தில் அதிர்ச்சி கொடுக்கும் கொரோனா இறப்பு

    தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனாவில் இருந்து 1138 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதன் மூலம் கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 24,547 ஆக உயர்ந்துள்ளது.

    தமிழகத்தில் இன்று 18,782 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக இதுவரை 7,10,599 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் 38 பேர் உயிரிழந்துள்ளனர். 16 பேர் தனியார் மருத்துவமனையிலும், 22 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதுவரை 435 பேர் கொரோனா தொற்றால் தமிழகத்தில் உயிரிழந்துள்ளனர்.

    கொரோனா பரவல்... அரசை நம்பி பிரயோஜனம் இல்லை... நமக்கு தேவை சுய கட்டுப்பாடு -கொங்கு ஈஸ்வரன் கொரோனா பரவல்... அரசை நம்பி பிரயோஜனம் இல்லை... நமக்கு தேவை சுய கட்டுப்பாடு -கொங்கு ஈஸ்வரன்

    எங்கு அதிகமான பாதிப்பு

    எங்கு அதிகமான பாதிப்பு

    சென்னையில் இன்று கொரோனா தொற்றால் 1415 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 31896 ஆக உயர்ந்துள்ளது.
    சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் 178 பேருக்கும், திருவள்ளூரில் 81 பேருக்கும், திருவண்ணாமலையில் 31 பேருக்கும், திருநெல்வேலியில் 19 பேருக்கும், விழுப்புரத்தில் 15 பேருக்கும், மதுரையில் 16 பெருக்கும், ராமநாதபுரத்தில் 23 பேருக்கும், சேலத்தில் 10 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சிவகங்கையில் 14 பேருக்கும், தென்காசியில் 16 பேருக்கும், தேனியில் 8 பேருக்கும், திருச்சி மற்றும் வேலூரில் தலா 9 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    குணம் விவரம்

    குணம் விவரம்

    தமிழகத்தில் இன்று மட்டும் 1138 பேர் கொரோனாவில் இருந்து குணம் அடைந்தனர். இதன் மூலம் ஒட்டுமொத்தமாக ஜூன் 15ம் தேதி (இன்று) நிலவரப்படி தமிழகத்தில் 24,547பேர் பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். தமிழகத்தில் 17,179 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதில் சென்னையில் தான் மிக அதிகமாக 14,667 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    வயது வாரியாக பாதிப்பு

    வயது வாரியாக பாதிப்பு

    தமிழகத்தில் இதுவரை ஒட்டுமொத்தமாக 7,10,599 சாம்பிள்கள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக எத்தனை தனிநபர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது என்ற விவரத்தை சுகாதாரத்துறை வெளியிடவில்லை. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் .13 முதல் 60 வயது வரை உள்ளவர்கள் 37252 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 60 வயதை கடந்த 5139 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 13 வயதுக்கு உட்பட்ட 2270 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    சென்னையில் 31 பேர் பலி

    சென்னையில் 31 பேர் பலி

    கொரோனா வைரஸ் தொற்றால் ஒரே நாளில் 38 பேர் உயிரிழந்ததால் தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 435 ஆக உயர்ந்துள்ளது. கடந்த நான்கு நாட்களில் 100க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இன்று உயிரிழந்த 38 பேரில், 31 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள் ஆவர். சென்னை தவிர செங்கல்பட்டு, திருவள்ளூர், மதுரை, காஞ்சிபுரம், விழுப்புரம், விருதுநகர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர் கொரோனா தொற்றால் இறந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    English summary
    1974 covid-19 positive cases in tamilnadu today, chennai 1415 cases today, 38 dies due to coronavirus in tamilnadu
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X