15-18 வயது சிறுவர்களுக்கு தடுப்பூசி.. முதல் நாளிலேயே சாதனை படைத்த தமிழகம்.. என்ன தெரியுமா?
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. தலைநகர் சென்னையிலும் கொரோனா பாதிப்பு அதிவேகமாக அதிகரித்து வருகிறது.
தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. வாரம்தோறும் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றன.

15-18 வயது சிறுவர்களுக்கு தடுப்பூசி
நாடு முழுவதுமே ஓமிக்ரான் வைரஸ் அதிகரித்து வருவதால் குழந்தைகளுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளதாக மத்திய அரசு அறிவித்தது. இதனால் திட்டமிட்டபடி இன்று முதல் 15 முதல் 18 வயதுள்ள பிரிவினருக்கு தடுப்பூசி போடும் திட்டம் நாடு முழுவதும் தொடங்கியது.ந்தியாவில் கோவிஷீல்டு,கோவாக்சின் தடுப்பூசிகள் பிரதானமாக செலுத்தப்பட்டாலும் 15 முதல் 18 வயதுள்ள பிரிவினருக்கு கோவாக்சின் தடுப்பூசி மட்டுமே செலுத்தப்படுகிறது

பள்ளிக்கு சென்று தடுப்பூசி
இந்த நிலையில் தமிழகத்திலும் 15-18 வயதுடைய சிறுவர்களுக்கு இன்று முதல் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கியுள்ளன மாணவ-மாணவிகளுக்கு அவர்கள் படிக்கும் பள்ளிக்கே சென்று தடுப்பூசிகள் போடப்படுகின்றன. 2007-ம் ஆண்டு அல்லது அதற்கு முன்னர் பிறந்த சிறுவர்கள் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு தகுதியானவர்கள். சுகாதார மையங்களிலும் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது

2.34 லட்சம் சிறுவர்கள்
தமிழகத்தில் ஒரே நாளில் 2,34,175 சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை கூறியுள்ளது. ஒரே நாளிலேயே இவ்வளவு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது சாதனையாக கருதப்படுகிறது. சென்னையில் 4,601 சிறுவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளன அதிகபட்சமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் 22,310 சிறுவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. குறைந்தபட்சமாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் 1,886 சிறுவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

பெற்றோரும் உடன் இருக்க வேண்டும்
தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தும் மையங்களில் போதிய இட வசதி ஏற்படுத்தித் தருமாறும் 15-18 சிறுவரக்ளுக்கு தடுப்பூசி செலுத்தும்போது, இது தொடர்பாக பெற்றோர்களுக்கு முன் கூட்டியே தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் வேக்சின் செலுத்தும் போது பெற்றோரும் உடன் இருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்த வரும் மருத்துவக் குழுவுடன் ஒருங்கிணைக்க ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு ஆசிரியரை ஒருங்கிணைப்பாளராக நியமிக்குமாறு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications