சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

5 சீட்டா.. அச்சாரம் போட்டாச்சா.. அறிவாலயம் பக்கம் வண்டிய திருப்பும் "கட்சி".. அப்ப அவர்? அவ்ளோதானா

பாமக இந்த முறை திமுகவுடன் கூட்டணி வைக்க நிறையவே வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது

Google Oneindia Tamil News

சென்னை: திமுகவா? அதிமுகவா? தனித்து போட்டியா? என்ற குழப்பத்தில் பாமக உள்ள நிலையில், திமுகவை நோக்கியே தூண்டிலை பெரிதாக விரித்து வைத்து காத்துள்ளதாக தெரிகிறது.

கடந்த சில தினங்களாகவே, திமுக கூட்டணியில் பாமகவின் பெயரும் அடிபட்டு வருகிறது.. பாமகவை பொறுத்தவரை, திமுகவுடன் கூட்டணி வைக்க நிறைய ஆர்வம் காட்டுவதாகவே தெரிகிறது...

ஆனாலும், கூட்டணி தொடர்பாக எதையும் இதுவரை வாய்திறக்காமல் உள்ளார். 2026ல் பாமக தலைமையிலான ஆட்சி அமைப்போம், அதற்கான வியூகத்தை 2024 நாடாளுமன்றத் தேர்தலின்போது செயல்படுத்துவோம் என்று பாமக தலைவர் அன்புமணி சொல்லி வருகிறார் என்பதால், திமுக, அதிமுக கூட்டணியில் பாமக இடம் பெற வாய்ப்பில்லையோ என்ற சந்தேகமும் எழுந்தபடியே உள்ளது.

பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு! திருவாரூர் ராமையா டூ திமுக பொதுச்செயலாளர்! பிளாஷ்பேக்! பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு! திருவாரூர் ராமையா டூ திமுக பொதுச்செயலாளர்! பிளாஷ்பேக்!

 திருமாவளவன்

திருமாவளவன்

தேர்தலுக்கு இன்னும் டைம் இருக்கிறது என்றாலும், திமுக அல்லது அதிமுகவுடன் இணைந்தே தேர்தலை சந்திக்க வேண்டிய கட்டாயம் பாமகவுக்கு உள்ளது.. இதில், திமுகவுடன் கூட்டணி வைக்கவே ஆர்வம் காட்டி வருவதாக தெரிகிறது.. ஆனால், திமுகவிடம் இருந்து எந்தவித சிக்னலும் இதுவரை பாமகவுக்கு கிடைக்கவில்லை.. ஒருவேளை விசிக கூட்டணியில் இருப்பதால், திமுக தயங்குகிறதா? என தெரியவில்லை. ஆனால், கடந்த ஒரு வருடகாலமாகவே, விசிகவை, எந்த ரூபத்திலும் பாமக விமர்சிக்கவில்லை... அவர்களின் பேச்சுக்கே போகவில்லை.. எந்தவித குற்றச்சாட்டையும் முன்வைக்கவில்லை.. இரு தரப்பிலுமே வன்முறை சம்பவங்களோ, புகார்களோ கிளம்பவில்லை..

 விசிக போக்கு

விசிக போக்கு

அன்புமணி தன்னுடைய பேட்டிகளில் திமுக, அதிமுக அரசுகளை குற்றஞ்சாட்டி பேசி வருகிறாரே தவிர, விசிகவை பற்றி பேசியதே கிடையாது.. பாமக தரப்பில் யாரும் விசிகவை சீண்டவேயில்லை.. ஆனால், 10 வருடத்துக்கு முன்பு இதுபோன்ற ஒரு அமைதி நிலைப்பாடு பாமக - விசிகவில் நிலவியதில்லை.. அவதூறுகளும், விமர்சனங்களும், இரு கட்சிகளிலும் மாறி மாறி வீசப்பட்டதை இந்த தமிழகம் அறியும்.. இப்போது பாமகவின் போக்கில் மாற்றம் தென்பட்டுள்ள நிலையில், அவர்கள் திமுகவை மட்டுமல்ல, விசிகவையும் நோக்கியும் நகர்வதாகவே தெரிகிறது.

 5 எம்பிக்கள்

5 எம்பிக்கள்

எனினும், பாஜகவுக்கு எதிராக, தேசிய அளவில் மெகா கூட்டணியை அமைக்க முதல்வர் ஸ்டாலின் வியூகம் வகுத்து வரும் நிலையில், அதற்கு பாமகவின் தயவும் தேவையாக இருக்கக்கூடும் என்றே தெரிகிறது. அதேசமயம், பாமகவின் இந்த கூட்டணி மாற்றத்திற்கு 3விதமான காரணங்கள் சொல்லப்படுகின்றன.. முதலாவதாக, அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிளவாகும்.. இரண்டாவதாக, மத்தியில் பாஜக ஆட்சியே அமைந்தாலும் தமிழகத்தில் பாஜக கூட்டணிக்கு ஆதரவு கிடைக்குமா என்ற சந்தேகமும் பாமகவுக்கு உள்ளதாக தெரிகிறது.. மூன்றாவதாக, 5 எம்பிக்களாவது கட்சிக்கு தேவை என்ற நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது..

 நோ சான்ஸ்

நோ சான்ஸ்

காரணம், 2004 தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியில் பாமக இடம் பெற்றிருந்தது. அப்போது 6 தொகுதியில் பெற்றிபெற்றது. அரங்கவேலு ரெயில்வே அமைச்சராகவும், அன்புமணி சுகாதார அமைச்சராகவும் இருந்தார்கள்.... பிறகு, 2014 தேர்தலில் அன்புமணி மட்டுமே வெற்றி வெற்றிருந்தார். கடந்த தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியில் 7 தொகுதிகளில் போட்டியிட்டும், ஒரே ஒரு தொகுதியில்கூட வெற்றி பெற முடியவில்லை... இப்போது பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் இல்லை... அதனால், வருகிற தேர்தலில் மறுபடியும் 5 எம்பிக்கள் பாராளுமன்றம் செல்ல வேண்டும் என்று பாமக முடிவெடுத்துள்ளதாகவும், அதற்காகவே கூட்டணி மாறும் முடிவுக்கு வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது..

 மணி முத்தான வாழ்த்து

மணி முத்தான வாழ்த்து

இதற்காகவே திமுக பக்கம் வலையை விரித்துள்ளது.. திமுக அரசை புகழ்ந்து வருவது ஒருபக்கம் இருந்தாலும், உதயநிதி பதவி ஏற்பு விழாவிலும் பங்கேற்றது பாமக.. இத்தனைக்கும் அதன் கூட்டணி கட்சிகளான அதிமுகவும், பாஜகவும் அந்த விழாவை புறக்கணித்திருந்தன. அந்தவகையில், பாமகவின் மூத்ததலைவர் ஜிகே மணி, உதயநிதிக்கு வாழ்த்து சொன்னது மிக மிக முக்கியமானதாக பார்க்கப்பட்டு வருகிறது.. கூட்டணியில் பாமக குறித்து திமுக மேலிடம் என்ன முடிவெடுக்கும் என்று தெரியவில்லை என்றாலும், பாமக என்ற பலம்வாய்ந்த கட்சியை திமுக தவிர்க்க முடியாது என்றே தெரிகிறது..

 வேல்முருகன்

வேல்முருகன்

ஏனெனில், 4 சதவீதம் வாக்கு வங்கியை ஸ்ட்ராங்காகவே பாமக இப்போதும் வைத்துள்ளது.. வேல்முருகன் உட்பட பலர் துணையாக இருந்தாலும், பாமகவை தங்கள் பக்கம் வைத்துக்கொள்ளவே திமுகவும் விரும்பும் என்றே தெரிகிறது.. இன்னொன்றையும் இங்கே நாம் சுட்டிக்காட்ட வேண்டி உள்ளது.. பாமக + தேமுதிக இரு கட்சிகளுக்கும் சுமூக சூழல் எப்போதுமே இருந்ததில்லை என்றாலும், அதிமுக கூட்டணியில் இவை ஒன்றாகவே பயணித்து வந்தன.. அதுபோல, விசிக + பாமக முரண்பட்ட சூழல் இருந்தாலும் இரு கட்சிகளையும் அரவணைத்து, ஒரே கூட்டணியில் இடம்பெற ஸ்டாலின் முன்னெடுப்பாரா? தெரியவில்லை.. பார்ப்போம்..!!

English summary
2+5: Is there any chances for PMK to join the DMK alliance, and What is VCK going to do
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X