20 சட்ட மசோதாக்கள் நிலுவை..ஆளுநரிடம் கையெழுத்து போட கட்டாயப்படுத்த முடியாது - சட்ட அமைச்சர் ரகுபதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: 20 சட்ட மசோதாக்களுக்கு தமிழக ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் நிலுவையில் உள்ளது என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். ஆளுநரிடம் கையெழுத்து போடுங்கள் என கட்டாயப்படுத்த முடியாது என்றும் அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி முதுநிலை சட்டப்படிப்பு கலந்தாய்வாயை தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு ஆளுநர் தரப்பில் எதுவும் விளக்கம் கேட்கவில்லை. ஆன்லைன் ரம்மி தடை சட்டம் குறித்து விளக்கம் கேட்கும் பட்சத்தில் நிச்சயம் விளக்கம் அளிக்கப்படும் என்று கூறினார்.

20 சட்ட மசோதாக்கள் நிலுவையில் உள்ளது. சில மசோதாக்களுக்கு விளக்கம் கேட்கப்பட்டுள்ளது, விளக்கம் அளித்துள்ளோம். ஆளுநரிடம் கையெழுத்து போடுங்கள் என கட்டாயப்படுத்த முடியாது என்றும் ரகுபதி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு தேவை இல்லை. 10% இட ஒதுக்கீடு தேவையில்லை என்ற மக்கள் கருத்தை திமுக தொடர்ந்து வலியுறுத்தும். 10% இட ஒதுக்கீடு தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டத்தில் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். தமிழக எல்லைக்குள் காவல் நிலையம் அமைத்துள்ளதாக எழும் புகார்கள் குறித்து முதலமைச்சர்தான் முடிவெடுப்பார். சட்ட ரீதியான நடவடிக்கைகள் எதை எடுக்க வேண்டுமோ அதனை நிச்சயமாக எடுப்போம் என்றும் கூறினார்.

 ஆளுநரின் ஒப்புதல் அவசியம்

ஆளுநரின் ஒப்புதல் அவசியம்

தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்படும் மசோதாக்கள் ஆளுநரின் ஒப்புதலுக்குப் பின் சட்டமாக்கப்படும். ஆனால், தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்ட பல்வேறு மசோதாக்கள் ஆளுநரிடம் நிலுவையில் உள்ளதாக தமிழக அரசு குற்றம்சாட்டி வருகிறது. இது தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து, முதல்வர் ஸ்டாலினும் நேரில் வலியுறுத்தி வருகிறார்.

மசோதாக்கள் நிலுவை

மசோதாக்கள் நிலுவை

இந்நிலையில், 2020 முதல் இந்த ஆண்டு மே 30ஆம் தேதி வரை 20 சட்ட மசோதாக்கள் நிலுவையில் இருப்பதாகத் தெரியவந்துள்ளது. அதன்படி, 2020 ஜனவரி 13, 18-ம் தேதிகளில், தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகம் மற்றும் கால்நடைப் பல்கலைக்கழகங்களில் ஆய்வு நடத்தவும், விசாரணை செய்வதற்கும் அரசுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் இரு சட்டத் திருத்த மசோதக்கள் அனுப்பப்பட்டு, நிலுவையில் உள்ளன.

சட்டசபையில் நிறைவேறிய மசோதாக்கள்

சட்டசபையில் நிறைவேறிய மசோதாக்கள்

2022 ஜனவரி 12ஆம் தேதி அனுப்பப்பட்ட, தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் நிர்வாகிகள் பதவிக்காலத்தை 5 ஆண்டுகளில் இருந்து 3 ஆண்டுகளாக குறைப்பது தொடர்பான சட்டத் திருத்த மசோதா நிலுவையில் உள்ளது. ஏப். 28-ல் நிறைவேற்றப்பட்ட, மாநில பல்கலைக்கழகங்கள் மற்றும் சென்னை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை அரசுக்கு வழங்குவது தொடர்பான மசோதா, மே 5ஆம் தேதி நிறைவேற்றப்பட்ட தமிழ்நாடு சித்த மருத்துவப் பல்கலைக்கழகத்தை உருவாக்குவது தொடர்பான மசோதா, மே 12-ல் நிறைவேற்றப்பட்ட மதுரை, கோவை, திருப்பூர், ஒசூர் நகர வளர்ச்சிக் குழுமங்கள் உருவாக்குவது தொடர்பான தமிழ்நாடு நகர ஊரமைப்பு திட்ட மசோதா ஆகியவையும் நிலுவையில் உள்ளன.

என்னென்ன மசோதாக்கள்

என்னென்ன மசோதாக்கள்

மே 16ஆம் தேதியன்று நிறைவேற்றப்பட்ட, தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக துணைவேந்தரை தமிழக அரசே நியமிக்க அதிகாரம் அளிக்கும் மசோதா, தமிழக சட்டப்பேரவையில் ஆங்கிலோ இந்தியன் உறுப்பினரை தேர்வு செய்வதை நிறுத்திவைப்பதற்கான மசோதா, தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் மாற்றுத் திறனாளி உறுப்பினரை தேர்வு செய்வதை தடுக்கும் சட்டத்தை திருத்துதல், தமிழ்நாடு அடுக்குமாடிக் குடியிருப்பு உரிமையாளர் சட்டம் ஆகியவை நிலுவையில் உள்ளன.

துணைவேந்தரை அரசே நியமிக்க அதிகாரம்

துணைவேந்தரை அரசே நியமிக்க அதிகாரம்

இவை தவிர, மே16ஆம் நிறைவேற்றப்பட்ட, எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தரை அரசே நியமிக்க அதிகாரம் அளிக்கும் மசோதா, டாஸ்மாக் நிறுவன விற்று முதலுக்கு வரி விதிப்பது தொடர்பான மசோதா, தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டத் திருத்தம், தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் 3-வது சட்டத்திருத்தம், 4-வது சட்டத் திருத்தம் தொடர்பான மசோதாக்கள், தமிழ்நாடு நகராட்சி சட்டங்கள் மற்றும் சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் சட்டத் திருத்த மசோதா, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தரை அரசே நியமிக்க அதிகாரம் அளிக்கும் மசோதா, பழைய சட்டங்களை நீக்க வழிசெய்யும் மசோதா உள்ளிட்டவை நிலுவையில் உள்ளன.

நிலுவையில் உள்ள 20 மசோதாக்கள்

நிலுவையில் உள்ள 20 மசோதாக்கள்

இதுதவிர, மே 24ஆம் தேதியில் நிறைவேற்றப்பட்ட, போதைப்பொருள், வனம், சைபர் சட்டம், குற்றவாளிகள் தங்கள் உறவினர் இறப்புக்கு செல்ல அனுமதிப்பது தொடர்பான திருத்த மசோதா, தமிழ்நாடு கட்டமைப்பு மேம்பாட்டு வாரியம் சார்பில் தனியார் பங்களிப்பை ஊக்கப்படுத்துவது தொடர்பான மசோதாவும் நிலுவையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+