2000 ரூபாய் நோட்டு.. பெட்ரோல் பங்க்குகளில் மாற்ற இன்றே கடைசி.. நாளை முதல் செல்லாது என அறிவிப்பு
சென்னை: பெட்ரோல் பங்க்குகளில் 2000 ரூபாய் நோட்டுக்களை மாற்றிக்கொள்ள இன்றே கடைசி நாள் என்று பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. நாளை முதல் 2000 ரூபாய் நோட்டு செல்லாது எனவும் பொதுமக்கள் வங்கிகளில் கொடுத்து 2000 ரூபாய் நோட்டுக்களை மாற்றிக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது புழக்கத்தில் உள்ள 2,000 ரூபாய் நோட்டுகள், 2016 நவம்பரில் அறிமுகம் செய்யப்பட்டன. கடந்த மே மாதம் 19ஆம் தேதி ரிசர்வ் வங்கி திடீரென 2000 ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெறுவதாக அறிவித்தது. செப்டம்பர் மாதம் 30ம் தேதிக்கு பிறகு தற்போது புழக்கத்தில் உள்ள ரூ.2,000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தது. அந்த நோட்டுக்களை வைத்திருப்பவர்கள் வங்கியில் ஒப்படைக்குமாறும் அறிவிப்பை வெளியிட்டது. அதனைத் தாண்டி காலம் நீட்டிக்கப்படுமா எனத் தெரியவில்லை.

ஒருவேளை காலம் நீட்டிக்கப்படாவிட்டால் உங்களிடம் இருக்கும் 2000 ரூபாய் நோட்டு செல்லாமல் போகும் அபாயம் ஏற்படலாம் என்பதால் விரைவில் பணத்தை மாற்றிக் கொள்ளவும் என அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து பலரும் தங்களிடம் இருந்த 2000 ரூபாய் நோட்டுகளை, வங்கிகளில் கொடுத்து மாற்றி வந்தனர்.
அரசு பேருந்துகளிலும் பெட்ரோல் பங்க்குகளிலும் 2000 ரூபாய் நோட்டுக்களை கொடுத்து மாற்றி பலரும் டிக்கெட் பெற்று வந்தனர். ரிசர்வ் வங்கி கொடுத்த காலக்கெடு, இன்னும் 2 நாட்களில் முடிகிறது. இந்த வாரத்தில் இன்றும் 29, 30 ஆகிய நாட்களில் மட்டுமே வங்கிகள் இயங்கும். 28ஆம் தேதி மிலாது நபிக்காக இன்றைய தினம் வங்கி விடுமுறையாக உள்ளது. எனவே தமிழக அரசு போக்குவரத்துக்கழகம் நடத்துனர்களுக்கு ஒரு அறிக்கையை அனுப்பியுள்ளது.
செப்டம்பர் 28ஆம் தேதிக்கு பிறகு பொதுமக்கள் பேருந்துகளில் 2000 ரூபாய் நோட்டுகளை கொடுத்தால் வாங்க வேண்டாம் என்று நடத்துனர்களுக்கு போக்குவரத்துக் கழகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஆம்னி பேருந்துகளில் இதுவரை 2000 ரூபாய் நோட்டுக்கள் பற்றி எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.
இந்தநிலையில் பெட்ரோல் பங்க்குகளில் இன்று மட்டுமே 2000 ரூபாய் நோட்டுக்களை மாற்றிக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் பெட்ரோல் பங்க்குகளில் 2000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது எனவும் வங்கிகளில் கொடுத்து 2000 ரூபாய் நோட்டுக்களை பொதுமக்கள் மாற்றிக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2000 ரூபாய் நோட்டுக்களை மாற்ற 2 நாட்கள் மட்டுமே காலக்கெடு உள்ளது. இன்றைய தினம் வங்கி விடுமுறை நாளையும் நாளை மறுநாளும் 29, 30ஆம் தேதிகளில் மட்டுமே 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்ற முடியும். எனவே 2000 ரூபாய் நோட்டுக்களை மாற்றுவதற்கான காலக்கெடுவை அரசு நீட்டிக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications