மெகா மாற்றம்! ஸ்டாலின் To விஜய்.. 2021 Vs 2026..விவிஐபி தொகுதிகளில் வாக்கு சதவீதம் எவ்வளவு தெரியுமா?
சென்னை: 2026 சட்டமன்ற தேர்தலில் 85 சதவீத வாக்குகள் பதிவாகி இருப்பது தமிழக முழுவதும் பேசுபொருளாக மாறி இருக்கிறது. குறிப்பாக விவிஐபிகள் போட்டியிட்ட தொகுதிகளில் வாக்கு சதவீதம் கிட்டத்தட்ட பத்து சதவீதத்துக்கு மேல் அதிகரித்து இருக்கிறது. அந்த வகையில் முதலமைச்சர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, தவெகவின் விஜய், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் தொகுதிகளில் கடந்த தேர்தலின் போதும் இந்த தேர்தலின் போதும் பதிவான வாக்குகளை பற்றி பார்க்கலாம்..
தமிழகத்தில் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை தேர்தல் 2026 அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான தேர்தலாக பார்க்கப்படுகிறது. இந்த தேர்தலில் மொத்த வாக்குப்பதிவு 85 எட்டியுள்ளது அரசியல் வட்டாரங்களில் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதிகாரப்பூர்வ இறுதி எண்ணிக்கை தேர்தல் ஆணையத்தின் மூலம் இன்னும் வெளியாகாத நிலையில் கூட, இதுவரை பதிவான வாக்குப்பதிவு எண்ணிக்கையின் படி 85 சதவீதத்தை எட்டியுள்ளது. குறிப்பாக விவிஐபிகள் போட்டியிட்ட தொகுதிகளில் வாக்கு சதவீதம் கிட்டத்தட்ட பத்து சதவீதத்துக்கு மேல் அதிகரித்து இருக்கிறது.
விவிஐபி தொகுதி
இந்த பட்டியலில் முதலமைச்சர் ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, பாஜகவின் நயினார் நாகேந்திரன், நாம் தமிழரின் சீமான், தவெகவின் விஜய், பாஜகவின் எல் முருகன், தேமுதிகவின் பிரேமலதா விஜயகாந்த், காங்கிரசின் செல்வப்பெருந்தகை, பாமகவின் சௌமியா அன்புமணி, பாஜகவின் தமிழிசை சௌந்தரராஜன், திமுகவின் பன்னீர்செல்வம் - உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் உள்ளனர்.
மு.க.ஸ்டாலின்
கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் கொளத்தூரில் திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் போட்டியிட்டார். அப்போது 61.79 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது. 2026 தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் 86.11 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
எடப்பாடி பழனிச்சாமி
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்து எடப்பாடி தொகுதியிலேயே போட்டிருக்கிறார். அந்த தொகுதியில் கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் 87.14 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது. 2026 தேர்தலில் 92.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
நயினார் நாகேந்திரன்
கடந்த முறை நெல்லை தொகுதியில் போட்டியிட்ட பாஜக தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன். இந்த முறை சாத்துர் தொகுதியில் போட்டிருக்கிறார். சாத்தூர் தொகுதியில் கடந்த 2021 ஆம் ஆண்டு 75.78 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்த நிலையில், 2026 சட்டமன்ற தேர்தலில் 85.65% வாக்குகள் பதிவாகியுள்ளது.
சீமான்
இந்த முறை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் காரைக்குடி தொகுதியில் களம் காண்கிறார். கடந்த 2021ல் அந்த தொகுதியில் 67.31% வாக்குகள் பதிவாக நிலையில், 2026ல் 74.33% வாக்குகள் பதிவாகியுள்ளது.
எல்.முருகன்
தமிழக பாஜக முன்னாள் தலைவரும் மத்திய இணை அமைச்சருமான எல்.முருகன் இந்த முறை அவிநாசி தொகுதியில் போட்டியிடுகிறார். கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் அந்த தொகுதியில் 75.91% வாக்குகள் பதிவான நிலையில், 2026 90.57ல் சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது
செல்வப் பெருந்தகை
காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவர் ஆன செல்வப் பெருந்தகை ஸ்ரீ பெரும்புதூர் தொகுதியில் போட்டியிடுகிறார். அந்த தொகுதியில் கடந்த 2021-இல் 76.30 எனவும், 2026ல் 86.12 எனவும் வாக்கு சதவீதம் பதிவாகியுள்ளது.
தமிழிசை சௌந்தர்ராஜன்
மற்றொரு பாஜக தலைவர் ஆன தமிழிசை சௌந்தர்ராஜன் மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட்ட நிலையில், 2021 சட்டமன்றத் தேர்தலில் வெறும் 56.79 சதவீத வாக்குகளே பதிவானது. ஆனால் ஆச்சரியம் அளிக்கும் விதமாக 2026 சட்டமன்ற தேர்தலில் 74.89 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
உதயநிதி ஸ்டாலின்
திமுக இளைஞரணி செயலாளரும் தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஆன உதயநிதி ஸ்டாலின் கடந்த தேர்தலில் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டார். இந்த முறையும் அதே தொகுதியில் களம் காணும் நிலையில் 2021ல் 58.74 சதவீத வாக்குகளும் 2026 இல் 84.34% வாக்குகளும் பதிவாகியுள்ளது.
பிரேமலதா விஜயகாந்த்
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தற்போது விருதாச்சலம் தொகுதியில் போட்டியிட்டிருக்கிறார். 2021 சட்டமன்ற தேர்தலில் அந்த தொகுதியில் 2022ல் 77.94 சதவீத வாக்குகளும், 2026ல் 86.05 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளது.
ஓ.பன்னீர்செல்வம்
மூன்று முறை தமிழக முதலமைச்சராக இருந்த அதிமுக முன்னாள் பொருளாளர் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் இந்த தேர்தலில் திமுகவில் இணைந்து திமுக வேட்பாளராக களம் காண்கிறார். கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் போடி தொகுதியில் 2021ல் 77.18 சதவீத வாக்குகள் பதிவான நிலையில் 202ல் 82.87% வாக்குகள் பதிவாகியுள்ளது.
சௌமியா அன்புமணி
இப்போது இருக்கும் பெரும்பாலான வேட்பாளர்கள் ஏற்கனவே சட்டசபை தேர்தலில் களம் கண்டவர்கள் தான் இந்த முறை முதன்முறையாக சட்டமன்ற தேர்தலில் களம் கண்டார் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸின் மனைவியும், பசுமைத்தாயகம் அமைப்பின் தலைவருமான சௌமியா அன்புமணி. தற்போது அவர் தர்மபுரி தொகுதியில் போட்டியிட்டிருக்கும் நிலையில் அந்த தொகுதியில் 2021 சட்டமன்ற தேர்தலில் 81.07 வாக்குகள் பதிவானது. இந்த தேர்தலில் 89.44 சதவீத வாக்குகள் பதிவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
தவெக விஜய்
தமிழக வெற்றிக் கழகத்தை ஆரம்பித்து முதன்முறையாக சட்டமன்ற தேர்தலை அந்த கட்சி சந்திக்கும் நிலையில் அதன் தலைவரும் நடிகருமான விஜயும் முதன்முறையாக களம் காண்கிறார். அதுவும் இரண்டு சட்டமன்ற தொகுதிகளில்.. பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் விஜய் போட்டியிட்டுருக்கிறார். பெரம்பூர் தொகுதியை பொருத்தவரை 2021 சட்டமன்ற தேர்தலில் 63.55 சதவீத வாக்குகள் பதிவானது. 2026 சட்டமன்ற தேர்தலில் 89.79 சதவீத வாக்குகள் பதிவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல திருச்சி கிழக்கு தொகுதியிலும் விஜய் போட்டியிடும் நிலையில் அந்த தொகுதியில் 2021ல் 67.87 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது. 2026 தேர்தலில் 81.77 வாக்குகள் பதிவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications