விஜய்க்கு 14% வாக்கு.. முதல்வர் ரேஸில் 3வது இடம்.. அதிமுக வெற்றியைத் தடுக்கிறதா? சத்தியம் டிவி சர்வே
சென்னை: தமிழ்நாட்டில் 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், சத்தியம் டிவி தரப்பில் கருத்துக்கணிப்பு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் ஒரு தொகுதியில் கூட வெற்றிபெறாது என்று கூறி இருப்பது அக்கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஆனாலும் பல்வேறு தொகுதிகளில் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கக் கூடிய சக்தியாக விஜய் இருப்பார் என்று கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்த செய்தியில் விரிவாகப் பார்க்கலாம்.
தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றி கழகம் என்று 4 முனைப்போட்டி உருவாகும் என்று பார்க்கப்படுகிறது. திமுகவைப் பொறுத்தவரைத் தொடர்ந்து 2வது முறையாக ஆட்சியமைக்க தீவிரம் காட்டி வரும் நிலையில், அதிமுக மீண்டும் ஆட்சியைப் பிடிக்க ஆர்வம் காட்டி வருகிறது.

இந்த நிலையில் சத்தியம் டிவி தரப்பில் தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளிலும் கருத்துக்கணிப்பு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி திமுக 105 தொகுதிகளில் முன்னிலையும், அதிமுக 90 தொகுதிகளில் முன்னிலையும் பெற்றுள்ளன. மீதமுள்ள 39 தொகுதிகளில் இழுபறி நீடித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் விஜய் தலைமையிலான தவெகவுக்கு எந்தவொரு தொகுதியிலும் முன்னிலை கொடுக்கப்படவில்லை.
ஆனால் விஜய் குறித்து சத்தியம் டிவி கருத்துக்கணிப்பில் கூறி இருப்பது அக்கட்சியினர் மத்தியில் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. விஜய் யாருடைய வாக்குகளைப் பிரிக்கப் போகிறார் என்பதைப் பொறுத்துத் தேர்தல் முடிவுகள் மாறும் என்பது நிச்சயம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சத்தியம் டிவியின் சர்வேயின்படி, ஆளும் அரசுக்கு எதிரான வாக்குகளை விஜய் பெரியளவில் பிரிக்க உள்ளார்.
அதேபோல் விஜய் அதிமுகவுடன் கைகோர்த்தால், பெரிய அளவில் வெல்வது நிச்சயம் என்றும், இரு தலைவர்களின் ஈகோ அதற்கு இடம் கொடுக்காது என்பது திமுகவிற்கு சாதகமாகப் பார்க்கப்படுகிறது. அதேபோல் இளம் பெண்களின் ஆதரவு திமுகவுக்கு நிகராக தவெகவுக்கும் இருப்பதாக சத்தியம் டிவி கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் விஜய் தலைமையிலான தவெக தனித்துப் போட்டியிட்டால் 14 சதவிகித வாக்குகளைப் பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விஜயின் 2வது மாநில மாநாடு, சுற்றுப்பயணம் உள்ளிட்டவை தவெகவுக்கு கைக் கொடுத்தாலும், பலமான இரண்டாம் கட்ட தலைவர்கள் இல்லாதது அந்தக் கட்சிக்குப் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இதனை விஜய் எப்படி சரி செய்வார் என்பது தேர்தல் வரும் போதுதான் தெரியும்.
-
“விஜய் முதலில் மன்னிப்பு கேட்கணும்”.. பதில் சொல்ல வக்கு இல்லையா? பொன்ராஜ் கொடுத்த ரிப்ளை! -
பெண்கள் குறித்த பொன்ராஜ் பேச்சுக்கு விஜய் கடும் கண்டனம்.. திமுகவையும் காட்டமாக விமர்சித்த விஜய்! -
பெரம்பூரில் விஜய்க்காக அரங்கேறும் திரைமறைவு சதி! பலிகடாவாக்கப்படுகிறதா அதிமுகவின் வெற்றிவாய்ப்பு! -
விஜய் ஒரு பச்சைத் தமிழர் தான்.. ஆனால் தவெக உடன் கூட்டணி அமைக்க வாய்ப்பில்லை.. வேல்முருகன் அறிவிப்பு! -
பெரம்பூரில் விஜய் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. காரணம் என்ன? தவெக பரபர ஆலோசனை! -
தவெக கூட்டத்துக்கு அனுமதி மறுப்பா? நாளை கூட்டம் என இன்று எழுதி தந்தா போதாது.. குமரகுருபரன் விளக்கம் -
விஜய் படங்களை ஹிட்டாக்க செய்த வில்லங்க வேலை.. அம்பலப்படுத்திய பிரபலம்.. கடுப்பில் ரசிகர்கள் -
தவெக வேட்பாளர் அறிமுக கூட்டம் திடீர் ரத்து.. தேர்தல் ஆணைய அனுமதி கிடைக்காததால் ஒத்திவைப்பு! -
வடக்கில் தொடங்கும் விஜய்.. பெரம்பூரில் மாஸ் காட்ட பலே ப்ளான்! 2026ல் கைகொடுக்குமா? திடீர் கோரிக்கை! -
மோசமான ப்ரொபோசல்.. மிஸ் ஆன விஜய் படம்.. தலையெழுத்து படி தான் நடக்கும்.. நடிகர் அப்பாஸ் உருக்கம் -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
ஒரே மேடையில் அறிமுகப்படுத்தப்படும் 234 வேட்பாளர்கள்! ஃபயர் மோடில் விஜய்! தயாரான தவெக!












Click it and Unblock the Notifications