கடலூர் கொடூரம்.. ஆண் நண்பருடன் சென்ற பெண் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கு.. 3 பேர் கைது

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடலூரில் இரவு நேரத்தில் ஆண் நண்பருடன் சென்ற இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

கடலூர் அருகே நெல்லிக்குப்பத்தைச் சேர்ந்தவர் 21 வயது இளம் பெண். இவர் அதே பகுதியில் ஒரு கடையில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் கடந்த 28ஆம் தேதி இரவு வேலை முடிந்து ஆண் நண்பருடன் பைக்கில் சென்றார்.

அப்போது கம்மியம்பேட்டை இணைப்புச் சாலையில் உள்ள ஒரு இடத்தில் நின்று இருவரும் பேசிக் கொண்டிருந்தனர். அந்த இடத்தில் ஆள் நடமாட்டம் இல்லாமல் இருந்தது.

கடலூர்

கடலூர்

அப்போது அவ்வழியாக கடலூர் திருப்பாதிரிபுலியூர் குப்பன்குளம் சிஎம்சி காலனியைச் சேர்ந்த சபரி என்கிற கிஷோர் (19, புதுப்பாளையத்தை சேர்ந்த ஆரிப் (19), குப்பன்குளத்தைச் சேர்ந்த சதீஷ் (19) ஆகியோர் அங்கு வந்து அந்த பெண்ணிடமும் அவருடன் இருந்த ஆண் நண்பரிடமும் தகராறு செய்தனர்.

மிரட்டி வீடியோ

மிரட்டி வீடியோ

அந்த 3 பேரும் "உங்களுக்கு இங்கு என்ன வேலை, எதற்காக இங்கு நின்று பேசிக் கொண்டிருக்கிறீர்கள்" என கேட்டு அவர்கள் இருவரையும் ஆபாச வார்த்தைகளை பயன்படுத்தி திட்டியதாக தெரிகிறது. மேலும் அவர்கள் இருவரையும் மிரட்டி இவர்கள் வீடியோ எடுத்ததாகவும் கூறப்படுகிறது.

கூட்டு வன்கொடுமை

கூட்டு வன்கொடுமை

பின்னர் அந்த பெண்ணை 3 பேரும் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பியதாக தெரிகிறது. இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை நள்ளிரவில் ரோந்து பணிக்கு சென்ற போலீஸார் கடலூர் செம்மண்டலம் பேருந்து நிறுத்தத்தில் இருந்து மீட்டனர்.

 3 பேர் கைது

3 பேர் கைது

பின்னர் அவரை கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து கடலூர் திருப்பாதிரிபுலியூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் அந்த இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து சதீஷ், ஆரிப், சபரி ஆகிய 3 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+