Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"முக்கோண அடி".. பாஜகவை மோப்பம் பிடித்த திமுக.. "டபுள் ஷாக்" தந்த ஸ்டாலின்.. திணறும் எடப்பாடி பழனிசாமி

வேலுமணி வீட்டில் ரெய்டு நடக்க என்ன காரணம் என்பது குறித்த 3 யூகங்கள் கிளம்பி உள்ளன

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2 அதிமுக மாஜிக்கள் 2 பேரிடம் நேற்றைய தினம் ரெய்டுகள் நடந்த நிலையில், அது தொடர்பான பரபரப்புகள் இன்னும் அடங்கவில்லை.. அதன் பின்னணி என்ன என்பது குறித்த சில தகவல்கள் வெளியாகி உள்ளன.

கடந்த முறை சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தின்போது, திமுக தலைவர் ஸ்டாலின், வழக்கமாக பிரச்சாரம் செய்யும் இடங்களை விட, 2 மாவட்டங்களில் கூடுதல் நேரம் ஒதுக்கி பேசினார். ஒன்று விருதுநகர்.. மற்றொன்று கோவை.

கடந்த வருட அதிமுக ஆட்சியின்போது, திமுகவை, முக்கியமாக ஸ்டாலினை, ராஜேந்திர பாலாஜி பேசாத பேச்சில்லை.. எவ்வளவு தரக்குறைவாக பேச முடியுமோ, அவ்வளவு கீழிறங்கி பேசினார்..

 மிஸ்டர் வேலுமணி

மிஸ்டர் வேலுமணி

அதுபோலவே, திமுக நிர்வாகிகளை "கொங்குவில்" குறி வைத்து செக் வைத்து கொண்டிருந்தார் வேலுமணி.. இதனாலேயே இந்த் 2 இடங்களிலும் ஸ்டாலின் அதிக நேரம் எடுத்து பேசினார். கோவை பிரச்சாரத்தில், "இது தான்டா திமுக.. மிஸ்டர் வேலுமணி திமுகன்னா இப்போ தெரியுதா? பதவியில் இருப்பதால் இப்போது ஆடலாம். ஆனால் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஆட்டத்தை எல்லாம் அடக்கிவிடுவோம். ஆளுநர் நடவடிக்கை எடுக்கிறாரோ இல்லையோ நானே தலையிட்டு உங்கள சிறைக்குள்ளே தள்ளுவேன்" என்று ஸ்டாலின் பேசியது அனைத்து தரப்புக்குமே புதிதாக தெரிந்தது

 3 டைம் ரெய்டு

3 டைம் ரெய்டு

இப்போது திமுக ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், இதுவரை 3 முறை வேலுமணியிடம், அதிகாரிகள் சோதனை நடத்தி உள்ளனர்.. எடப்பாடி டீம் சொல்வது போல, ஒருவேளை இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையா? என்ற சந்தேகத்தை 3 முறை ரெய்டு நடவடிக்கைகள் ஏற்படுத்துகின்றன.. ஆனால், அரசியல் விமர்சகர்கள் இந்த 3 முறை நடந்த ரெய்டு குறித்து வேறு மாதிரியாக விமர்சிக்கிறார்கள்..

 ஏன் தாமதம்?

ஏன் தாமதம்?

"மேலோட்டமாக இந்த ரெய்டு நடவடிக்கையை பார்த்தால், அரசியல் நடவடிக்கை போலதான் தெரியும்.. ஆனால், ஸ்டாலின் அன்னைக்கு என்ன சொன்னாரு? ஆட்சிக்கு வந்ததுமே ஊழல் புரிந்தவர்கள் மீது நடவடிக்கை என்றாரே? இதுவரை யாரையுமே கைது செய்யவில்லையே ஏன்? ஏற்கனவே 2 முறை சோதனை நடந்த நிலையில், குற்றப்பத்திரிகை தாக்கல் என்ன ஆனது? அது தொடர்பாக என்ன மாதிரியான வழக்கு விசாரணைகளை அரசு செய்துள்ளது என தெரியவில்லை..

 மீறிய உறுதிமொழி

மீறிய உறுதிமொழி

இந்த ஒன்றரை வருட காலத்தில் வெறும் ரெய்டு நடத்தி கொண்டிருப்பது, திமுக அரசின் காலதாமதத்தைதான் குறிக்கிறது.. அரசு துரிதமாக செயல்படவில்லை என்பதை காட்டுகிறது.. இத்தனைக்கும் அதிமுக மாஜிக்கள் மீதான இந்த புகார்கள், குற்றச்சாட்டுகள் எல்லா கடந்த கால ஆட்சி காலத்தில் இருந்தே நடந்து வந்த ஒன்று.. அப்படி இருந்தும் திமுக அரசு தன் பணியை சரியாக செய்யவில்லை, ஸ்டாலினும் தன் வாக்கை இதுவரை நிறைவேற்றவில்லை.. தனிநீதிமன்றம் அமைத்தும் விசாரிக்கவில்லை.. இது அரசின் மீதான நம்பக்கத்தன்மையை குறைத்துவிடும்" என்கின்றனர்.

 மேட்டர் + 1

மேட்டர் + 1

இதெல்லாம் ஒருபக்கம் இருந்தாலும், நேற்றைய தினம் ஏன், 2 மாஜிக்களிடமும் ஒரே நேரத்தில் ரெய்டு நடத்தப்பட்டது? என்ற கேள்வியும் சந்தேகமும் இன்னமும் வட்டமடிக்கிறது.. இது தொடர்பாக 2 விதமான காரணங்கள் கூறப்படுகின்றன.. திமுகவுக்கு எதிராக, மின்கட்டண உயர்வு போராட்டத்தை எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.. இந்த முறை திமுக ஆட்சிக்காலத்தில், அதிக அளவு விமர்சனத்துக்கு உள்ளாகி இருப்பதும், மக்களிடம் அதிருப்தியை பெற்றுவருவதும் மின்கட்டண உயர்வுதான்.. அதிமுகவின் இந்த போராட்டம் மக்களிடம் பேசப்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவே, 2 மாஜிக்களிடம் திடீர் ரெய்டு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

 மேட்டர் 2

மேட்டர் 2

மற்றொரு பக்கம், திமுகவை டேமேஜ் செய்ய தமிழக மற்றும் மத்திய பாஜக ஒரு பிளானை போட்டிருந்ததாம்.. அதாவது, தமிழக வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தியின் மகனின் திருமண நிகழ்வு மிக மிக பிரம்மாண்டமாக மதுரையில் 2 நாட்களுக்குமுன்பு நடந்தது.. இந்த நிகழ்வின் கறிவிருந்து சமூக வலை தளத்திலும் வைரலாக பேசப்படும் அளவுக்கு பிரம்மாண்டம் களைகட்டியது.. இதைதான் தமிழக பாஜக, விவகாரமாக்க முயன்றது..

 சைலண்ட் + ஆக்‌ஷன்

சைலண்ட் + ஆக்‌ஷன்

அமைச்சர் மூர்த்தியின் வருமானம் எவ்வளவு? இந்த அளவுக்கு திருமணத்துக்கு செலவு செய்கிறார்கள் என்றால், அதற்கான பணம் எங்கிருந்து வந்தது? இந்த திருமணத்துக்கு எவ்வளவு செலவு செய்திருப்பார்கள்? போன்ற சைலண்ட் தகவல்களை திரட்டி, அதை மேலிட பாஜகவுக்கு அனுப்பி, அதன்மூலம் திமுகவுக்கு செக் வைக்கவும், மக்கள் மன்றத்திலேயே நியாயம் கேட்கவும் திட்டமிட்டு வந்ததாம்.. இதையும் மோப்பம் பிடித்த திமுக, முந்திக்கொண்டு மாஜிக்கள் மீதான ரெய்டை கட்டவிழ்த்து விட்டதாக கூறப்படுகிறது... சமீபகாலமாக, வேலுமணிக்கு, டெல்லி தரப்பின் லேசான ஆதரவு கிடைத்து வருவதாக தகவல்கள் கசிந்த நிலையில், இந்த ரெய்டு கடுமையான அதிர்ச்சியை இரு தரப்பிலும் ஏற்படுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது..!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+