சென்னையில் ஃபிரிட்ஜ் வெடித்து மூவர் பலி.. துக்க நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தவர்களுக்கு நேர்ந்த துயரம்
சென்னை: சென்னை அடுத்த ஊரப்பாக்கத்தில் மின்கசிவு காரணமாக ஃபிரிட்ஜ் வெடித்து 3 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அடுத்த ஊரப்பாக்கத்தில் ஃபிரிட்ஜ் வெடித்து விபத்து ஏற்பட்டதில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த விபத்தில் கிரிஜா (63) ராதா (55), ராஜ்குமார் (48) ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.
ஊரப்பாக்கம் பகுதியில் கோதண்டராமன் நகரில் வெங்கட்ராமன் என்பவர் உயிரிழந்து ஓராண்டு கடந்த நிலையில், அவரது துக்க நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக நேற்று முன் தினம் கிரிஜா, அவரது தங்கை ராதா, உறவினர் ராஜ்குமார் ஆகியோர் 3 பேரும் துபாயில் இருந்து சென்னை வந்துள்ளனர்.

திடீரென வெளிவந்த புகை
இவர்கள் மூவரும் நேற்றிரவு ஒரே அறையில் தூங்கிய நிலையில் அறையில் இருந்து புகையாக வந்துள்ளது. இதனால் பக்கத்து அறையில் தூங்கிய பார்கவி என்பவர் சந்தேகமடைந்து எழுந்து 3 பேரும் தூங்கிய அறையை திறக்க முயன்றுள்ளார். ஆனால் கதவை அப்போது திறக்க முடியவில்லை. இதனைத் தொடர்ந்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

ஃபிரிட்ஜ் வெடித்து விபத்து
பின்னர் தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கதவை உடைத்து பார்த்தபோது 3 பேரும் இறந்து கிடந்தனர். அப்போது அந்த அறையில் இருந்த ஃபிரிட்ஜ் வெடித்து விபத்து ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ரெப்ரிஜிரேட்டர் கம்ப்ரஸர் வெடித்து கேஸ் கசிவு ஏற்பட்டு 3 பேரும் தீயில் கருகி இறந்தது தெரிய வந்துள்ளது.

2 பேர் பலத்த காயம்
இதுமட்டுமல்லாமல் இந்த விபத்தில் பலத்த காயமடைந்த பாரதி, குழந்தை ஆராதயா ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். ஃபிரிட்ஜ் வெடித்து 3 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

துயரம்
அதுமட்டுமல்லாமல் உயிரிழந்த வெங்கட்ராமனின் வீடு கடந்த ஒரு ஆண்டாக பூட்டிய நிலையில் இருந்துள்ளது. இதனால் ஒரு ஆண்டுக்கு பின் ஃபிரிட்ஜ் உள்ளிட்டவை பயன்படுத்தியதால், எதிர்பாராதவிதமாக விபத்து நிகழ்ந்துள்ளது. துக்க நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக வந்த உறவினர்கள், ஃபிரிட்ஜ் வெடித்து உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினர் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications