சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

போச்சு மாட்டிக்கிட்டாங்களே! இந்திய அணிக்கு மெகா நெருக்கடி தந்த "பண்ட்" கார் விபத்து.. 3 ஆப்ஷன் தானா?

Google Oneindia Tamil News

சென்னை: இந்திய அணியின் இளம் கீப்பர் ரிஷப் பண்ட் விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வருவதால் ஆஸ்திரேலியாவிற்கு பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் இந்திய அணியில் ஆட போகும் கீப்பர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

உத்தரகாண்டில் வேகமாக காரில் சென்ற ரிஷப் பண்ட் கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை விபத்திற்கு உள்ளானார்.முகத்தில் காயம்.. தலையில் ரத்த கட்டு.. முதுகு முழுக்க மோசமான காயங்கள் என்று ரிஷப் பண்ட் படுக்கையில் கிடக்கும் காட்சிகள் இணையத்தை உலுக்கி உள்ளன.

ரிஷப் பண்ட் உத்தரகாண்டில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சென்று இருக்கிறார். வங்கதேசம் தொடர் முடிந்து டெல்லிக்கு இவர் வந்துள்ளார். அதன்பின் உத்தரகாண்டில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

சபரிமலைக்கு விமான நிலையம்- எருமேலி அருகே எஸ்டேட்டை கையகப்படுத்த கேரளா அரசு ஆர்டர் சபரிமலைக்கு விமான நிலையம்- எருமேலி அருகே எஸ்டேட்டை கையகப்படுத்த கேரளா அரசு ஆர்டர்

விபத்து

விபத்து

இதையடுத்து வெள்ளிக்கிழமை அதிகாலை பண்ட் டெல்லிக்கு வருவதாக திட்டமிடப்பட்டு இருந்தது. டெல்லியில் சனிக்கிழமை சில நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காகவும், அதன்பின் புத்தாண்டு தின கொண்டாட்டத்தில் கலந்து கொள்வதற்காகவும் பண்ட் டெல்லி திரும்பி இருக்கிறார். வீட்டில் சொல்லாமல் இவர் டெல்லி நோக்கி வந்துள்ளார். டெல்லியில் புத்தாண்டு அன்று தனது குடும்பத்திற்கு சர்ப்ரைஸ் கொடுக்க வேண்டும் என்று பண்ட் நினைத்துள்ளார். இந்த நிலையில்தான் டெல்லி வரும் வழியில் அவர் விபத்துக்கு உள்ளானார்.

காயம்

காயம்

பண்டிற்கு தலையில் இரண்டு இடங்களில் வெட்டு ஏற்பட்டுள்ளது. அவருக்கு வலது காலில் சதை கிழிந்துள்ளது. அதேபோல் மணிக்கட்டு, கெண்டை கால், கணுக்காலில் காயங்கள் ஏற்பட்டு உள்ளன. முதுகில் சிராய்ப்பு காயங்கள் ஏற்பட்டுள்ளன, என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது இவர் முழு கண்காணிப்பில் இருக்கிறார். இவர் ஆபத்தில் இருந்து தப்பித்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர். இவரின் உடல்நிலை தேறி உள்ளது. ஆனால் இன்னும் 7 மாதங்களுக்கு இவர் கிரிக்கெட் ஆட முடியாது என்று கூறப்படுகிறது.

பார்டர் கவாஸ்கர் கோப்பை

பார்டர் கவாஸ்கர் கோப்பை

கடந்த வருட பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் இந்திய அணி வெற்றிபெற முக்கிய காரணமாக இருந்தவர் பண்ட்தான். அதிலும் கப்பா தொடரில் இவர் ஆடிய ஆட்டத்தை ஆஸ்திரேலியா அணி மறக்காது. தற்போது உலகக் கோப்பை டெஸ்ட் தொடர் நடந்து வரும் நிலையில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் இந்திய அணி சிறப்பாக ஆட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 2 போட்டியிலாவது வெற்றிபெற வேண்டிய கட்டாயம் இந்திய அணிக்கு உள்ளது.

ரோஹித் சர்மா

ரோஹித் சர்மா

இந்த தொடரில் இந்திய அணிக்கு ரோஹித் சர்மா திரும்பும் பட்சத்தில் டாப் ஆர்டரில் ரோஹித், கில், கோலி, ஷ்ரேயாஸ் ஆகியோர் ஆடுவார்கள். அதன்பின் அஸ்வின், ஜடேஜா (அல்லது அக்சர்) களமிறங்கும் முன் இந்திய அணியில் இன்னொரு மிடில் ஆர்டர் வீரர் இறங்க வேண்டும். அந்த இடத்தில் இத்தனை நாட்கள் பண்ட் ஆடிக்கொண்டு இருந்தார். இப்போது பண்ட் விபத்து காரணமாக அவதிப்பட்டு வருவதால் அங்கே இறங்க போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. ரிஷப் பண்ட் இருக்கும் நேரங்களில் கே. எஸ் பரத் மாற்று வீரராக இறங்கி வந்தார்.

ரஞ்சி சீசன்

ரஞ்சி சீசன்

ஆனால் கடந்த ரஞ்சி சீசனில் இவர் சரியாக ஆடவில்லை. அதேபோல் பண்ட் அளவிற்கு சர்வதேச போட்டிகளில் இவர் நன்றாக ஆடுவாரா என்பதும் சந்தேகமாக உள்ளது. ஆனால் இன்னொரு பக்கம் இஷான் கிஷன், சஞ்சு சாம்சன் ஆகியோர் இருக்கிறார்கள். இவர்கள் டெஸ்ட் போட்டிகளில் பெரிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் சர்வதேச போட்டிகளில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி உள்ளனர். முக்கியமாக இரண்டு பேருமே ரஞ்சி போட்டிகளில் நன்றாக ஆடி உள்ளனர்.

கீப்பிங்

கீப்பிங்

ஆனால் இரண்டு பேருமே ரஞ்சி போட்டிகளில் கீப்பிங் செய்தது இல்லை. அதனால் இவர்களை கீப்பர்களாக இந்திய அணி களமிறக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இந்தியாவில் நடக்க உள்ள பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடர் மிகவும் முக்கியமான தொடர் ஆகும். இந்த தொடரில் இந்திய அணி வெற்றிபெற வேண்டிய கட்டாயம் இருக்கிறது. இந்த நிலையில்தான் பண்டின் இடத்தை நிரப்ப போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த 3 வீரர்களில் பிசிசிஐ யாரை தேர்வு செய்ய போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.

English summary
3 Wicket keeping options for team India duei to unavailability of Rishabh Pant after the accident.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X