கின்னஸ் சாதனை.. வேக வைக்காமல், எண்ணெய் சேர்க்காமல்.. 3.5 நிமிடத்தில் 300 வகை உணவுகள்!
சென்னை: சென்னை விமான நிலைய திருமண மண்டபத்தில் ஜியோ இந்தியா ஃபவுண்டேஷன் சார்பில் 3 புள்ளி 5 நிமிடத்தில் 300 வகையான இயற்கை உணவுகள் செய்து உலக சாதனை நிகழ்த்தியுள்ளனர்.
ஜியோ இந்தியா பவுண்டேஷன் சார்பில் செஃப் படையல் சிவக்குமார் முயற்சியில் சென்னை விமானநிலைய திருமண மண்டபத்தில் புதன் அன்று இது நடத்தப்பட்டது.
இந்த கின்னஸ் சாதனை முயற்சியில் கல்லூரி மாணவ, மாணவிகள், விமான நிலைய ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பங்குபெற்றனர்.

தூய மல்லி பொங்கல்
கத்திரிக்காய் மில்க் ஷேக், தூயமல்லி வெண்பொங்கல், பலாப்பழ பொங்கல், பீட்ரூட் ஊறுகாய், எலுமிச்சை தோல் அல்வா, செவ்வாழை பாயாசம், வெற்றிலை ரசம், சிறுதானிய அவல் கட்லட்.

கம்பு அவல் புட்டு
இளநீர் ஜாம், வாழைப்பூ பசும்பொறியல், கம்பு - அவல் புட்டு என 300 வகையான இயற்கை உணவுகள் தயாரிக்கப்பட்டு சாதனை நிகழ்த்தப்பட்டது.

300 வகை
இயற்கை காய்-கறிகள், பழங்கள், உணவுப் பொருட்கள் கொண்டு சுத்தமான ஆரோக்கியமான 300 வகையான உணவுகள் எண்ணெய் இன்றி, நெருப்பு இன்றி தயாரிக்கப்பட்டு இருப்பது உலகில் இதுவே முதல் முறையாகும்.

கின்னஸ் சாதனை முயற்சி
ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை வலியுறுத்தி நடத்தப்பட்ட கின்னஸ் சாதனை முயற்சியை யுனிவர்ஸல் புக் ஆஃப் ரெக்கார்ட், கலாம் புக் ஆஃப் ரெக்கார்ட்டில் பதிவு செய்யப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

சாதனை நிகழ்ச்சி
இயற்கை உணவு சமைக்கும் உலக சாதனை நிகழ்ச்சியில் சென்னை விமானநிலைய இயக்குனர் சந்திரமௌலி, நடிகை அஞ்சனா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

நோய் தவிர்ப்போம்
உலக சாதனை குறித்து செஃப் படையல் சிவக்குமார் கூறும்போது, இயற்கையான உணவுப் பழக்கம் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அடித்தளமாக இருப்பதாகத் தெரிவித்தார். உடலில் கொழுப்பு அதிகம் சேர்வதற்கு காரணமான எண்ணெய்யை தவிர்த்தாலே நோய்கள் வராமல் தடுக்க முடியும் என்று கூறினார்.

எண்ணெய் இல்லாத வாழ்க்கை
நோய்களற்ற ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க எண்ணெய் இல்லா, வேகவைக்காத உணவுப் பழக்கத்துக்கு மாறுவதே சிறந்தவழி என்று கூறிய சிவக்குமார், ஆரோக்கிய வாழ்வியலை வலியுறுத்தும் வகையில் 3 புள்ளி 5 நிமிடத்தில் 300 வகையான உணவுகள் சமைக்கப்பட்டதாகக் கூறினார்.
-
Gold price: மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட் என்ன? -
Gold Price: ஒரே நாளில் 3,040 அதிகரிப்பு.. மீண்டும் உச்சம் தொடும் தங்கம் விலை.. அம்மாடியோவ்! நகை பிரியர்கள் ஷாக் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
இன்று முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு மழை பிச்சு உதறும்..தென் தமிழகத்திற்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
கிளாம்பாக்கம் - மகேந்திரா வேர்ல்ட் சிட்டி.. சென்னையின் மிகப்பெரிய ப்ராஜெக்ட்.. எல்லாமே மாறப்போகுது -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
Bank of Baroda: பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. 140 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்! -
பஞ்சாப் அண்ட் சிந்து வங்கியில் வேலை.. டிகிரி + தமிழ் தெரிஞ்சா ஜாக்பாட்! மாதம் 85 ஆயிரம் சம்பளம்! -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்?












Click it and Unblock the Notifications