ரீல்ஸ் வெறி முத்திப்போச்சு.. சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் பிணங்கள் அறையில் இப்படியா?
சென்னை: சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையின் பிரேதப் பரிசோதனை அறைக்குள்ளே நேற்று காலை சட்டவிரோதமாக நுழைந்து, அங்கிருந்த உடல்களைச் சமூக வலைதளங்களில் பதிவிடுவதற்காகப் புகைப்படம் எடுத்ததாக இரு மருத்துவமனை ஊழியர்கள் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர், அவர்கள் நீதிபதி முன்பு ஆஜர்படுத்திய போலீசார், சொந்த ஜாமினில் விடுவித்தனர்.
சென்னை , எர்ணாவூரைச் சேர்ந்த 'பல்லு' ஆனந்த் என்ற ரவுடி அண்மையில் உயிரிழந்தார். . அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து அவரது நண்பர்களான வியாசர்பாடியை சேர்ந்த சதீஷ்குமார் (25) மற்றும் தவெகவைச் சேர்ந்த தீனா என்ற தினேஷ்குமார்(30) ஆகியோர் மருத்துவமனை வந்தார்கள். அவர்கள் ரவுடியின் சடலத்தை பார்ப்பதற்காக நேற்று அதிகாலை ஐந்து மணிக்ககு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு சென்றனர்.

அவர்கள் இருவரும் மருத்துவமனை சவக்கிடங்கு பகுதிக்கு வியாசர்பாடியை சேர்ந்த சங்கருடன் சென்றுள்ளார்கள். அப்போது, பிரேதப் பரிசோதனை கூடத்தில் பணியில் இருந்த சீனிவாசனிடம் ஜிபே மூலம் ரூ.200 கொடுத்து பிணவறையின் சாவியை பெற்று பிணவறை உள்ளே சென்றுள்ளனர் 2 பேரும், அங்கு வைக்கப்பட்டிருந்த சடலங்களை செல்போனில் ரீல்ஸ் வெளியிடும் நோக்கில் வீடியோ எடுத்திருக்கிறார்கள்.
இதைக் கண்ட மருத்துவமனை ஊழியர்கள், மருத்துவ அதிகாரியான (RMO) வனிதா மலருக்குத் தகவல் தெரிவித்தனர். மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் ஸ்டான்லி அரசு மருத்துவமனைவளாக போலீஸாரிடம் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது பிணவறையில் வீடியோ எடுத்ததாக கூறப்படும் சதீஷ்குமார், தினேஷ்குமார் சங்கர் ஆகிய 3 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட 3 பேரையும் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அப்போது, சமூக வலைதளத்தில் ரீல்ஸ் போடுவதற்காக பிணவறைக்குள் சென்று அங்கிருந்த சடலங்களை வீடியோ எடுத்ததாக அவர்கள் கூறியிருக்கிறார்கள். இதையடுத்து, சவக்கிடங்குக்குள் அத்துமீறி நுழைந்தது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட 3 பேரையும் இரவோடு இரவாக போலீஸார் ஜார்ஜ் டவுன் நீதிமன்ற நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தினர். அவர்கள் 3 பேரையும் நீதிபதி ஜாமீனில் விடுவித்தார்.
பிணவறையின் சாவியை வெளியாட்களுக்கு வழங்கியதாக கூறப்படும் சவக்கிடங்கு பணியாளர் சீனிவாசன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது. கைது செய்யப்பட்டவர்கள் சதீஷ்குமார் (25), தீனா என்ற தினேஷ்குமார் (30), மருத்துவமனையின் பேட்டரி வாகன ஓட்டுநரான சங்கர் மற்றும் பிரேதப் பரிசோதனை அறையின் தூய்மைப் பணியாளரான சீனிவாசன் என அடையளம் காணப்பட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications
