₹5,000 கோடி மோசடி.. விஜய் - பிரேம்குமார் தொடர்பு என்ன? அமலாக்கத்துறை வளையத்தில் சிக்கிய பின்னணி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாரத் லஜ்னா மல்டி-ஸ்டேட் ஹவுசிங் கோ-ஆபரேட்டிவ் சொசைட்டியின் (BLM) நிறுவனர் மற்றும் தனியார் செய்தி தொலைக்காட்சியின் இயக்குநரான ஆர். பிரேம்குமார், சுமார் ₹5,000 கோடி நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள விவகாரம் தற்போது தமிழக அரசியலில் புயலைக் கிளப்பியுள்ளது.

கோழிக்கோடு குற்றப்பிரிவு போலீசார் அவரைச் சென்னையில் கைது செய்ததைத் தொடர்ந்து, முறைகேடான பணப் பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறையும் வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்த நிலையில், கைதான பிரேம்குமாருக்கும் ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்திற்கும் இடையே என்ன தொடர்பு என்று திமுக சரமாரியான கேள்விகளை எழுப்பி போர்க்கொடி தூக்கியுள்ளது.

DMK Attacks TVK

திமுக எழுப்பியுள்ள காரசாரமான கேள்விகள்

மக்கள் பணத்தைச் சுருட்டிய மாஃபியா கும்பலுக்கும், தமிழக வெற்றிக் கழகத்தின் 'தூய சக்தி' பிம்பத்திற்கும் என்ன தொடர்பு என்று திமுக பகிரங்கமாகக் கேள்வி எழுப்பியுள்ளது. திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள முக்கிய குற்றச்சாட்டுகள்:

சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்ற போது எம்.எல்.ஏ-க்களை அழைத்து வந்தது முதல், கரூர் துயர நிகழ்வு வரை கட்சியின் அனைத்து முக்கிய நிகழ்வுகளுக்கும் பிரேம்குமாரின் நிறுவன சொகுசுப் பேருந்துகளே பயன்படுத்தப்பட்டது வெறும் தற்செயலானதா?

எம்.எல்.ஏ-க்களுக்குச் சொகுசு வசதிகள் செய்து கொடுத்து உபசரித்ததன் பின்னணியில் இயங்கியது இந்த நிதி மோசடி கும்பல்தானா?

பல்லாயிரக்கணக்கான பாமர மக்களின் சேமிப்புப் பணத்தைச் சுருட்டிய இந்தக் கும்பல்தான், தவெகவின் அன்றாட அரசியல் செலவுகளுக்கும் குதிரைப் பேரங்களுக்கும் பணத்தை வாரி இறைத்ததா?

தலைமைச் செயலகத்தில் முதல்வருடன் பிரேம்குமார் சந்தித்து பொன்னாடை போர்த்திய புகைப்படங்கள் இணையத்தில் பரவிய நிலையில், அது தொடர்பான பதிவுகளை அவசர அவசரமாக சமூக வலைதளப் பக்கங்களிலிருந்து நீக்கியது ஏன்?

அமலாக்கத்துறை களமிறங்கியது ஏன்?

2006-ல் சென்னையில் ஆரம்பிக்கப்பட்ட பாரத் லஜ்னா கூட்டுறவு சங்கம், முதியவர்கள் மற்றும் எளிய மக்களிடம் அதிக வட்டி தருவதாக ஆசை காட்டி முதலீடுகளைப் பெற்றது. ஆனால், முதிர்வுக் காலம் முடிந்த பின்னரும் மக்களுக்குப் பணத்தைத் தராமல் ஏமாற்றியதாகப் புகார்கள் குவிந்தன. மக்களிடம் திரட்டப்பட்ட சுமார் ₹5,000 கோடி நிதியை, கூட்டுறவு சங்க விதிகளுக்கு விரோதமாகச் சொந்த கணக்குகளுக்கும், குடும்பத்தினர் பெயர்களுக்கும் மாற்றி மோசடி செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இந்த நிதியைக் கொண்டு சென்னை, மூணார், திருவனந்தபுரம் உள்ளிட்ட இடங்களில் ஆடம்பர சொகுசு விடுதிகள், திரையரங்குகள், நிலங்கள் மற்றும் பேருந்து போக்குவரத்து போன்ற பல்வேறு தொழில்களில் முதலீடு செய்திருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஹவாலா மற்றும் முறைகேடான பணப் பரிமாற்றங்கள் நடந்துள்ளதால், அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளது.

அரசியல் சதுரங்கத்தில் புதிய திருப்பம்

கைதான பிரேம்குமார் மீதான விசாரணை தீவிரமடைந்து வரும் வேளையில், ஆளுங்கட்சிக்கும் அவருக்கும் இடையே உள்ள நிதித் தொடர்புகள் மற்றும் போக்குவரத்துப் பயன்பாடுகள் குறித்து சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை உள்ளிட்ட மத்திய விசாரணை அமைப்புகள் முழுமையாக விசாரிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

அரசியல் களத்தில் 'ஊழலற்ற தூய சக்தி' என்ற முழக்கத்தோடு களமிறங்கிய கட்சி மீது, மக்கள் பணத்தைச் சுருட்டிய நபரின் நிழல் படிந்திருப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு உரிய பதிலை அளிக்காமல் அரசு மௌனம் காப்பது சந்தேகத்தை மேலும் அதிகரிப்பதாக அரசியல் நோக்கர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். அமலாக்கத்துறையின் வளையம் விரிவடைந்து வரும் நிலையில், இந்த வழக்கு அடுத்தடுத்து எந்தெந்த முக்கியப் புள்ளிகளை நோக்கிப் பாயப்போகிறது என்பது தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+