தூள் தூளா சிதறிடுச்சே.. கடைசிவரை நம்புனாங்களே.. எடப்பாடி டீமுக்கு ஹேப்பி போல.. ஜனவரியில் "க்ளைமாக்ஸ்"
சென்னை: ஓபிஎஸ் தரப்பில் ஒரு முக்கியமான விஷயம் ஓடிக் கொண்டிருக்கிறது.. இது எடப்பாடி தரப்புக்கு நிம்மதியையும், ஓரளவு நம்பிக்கையையும் தந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
அதிமுகவில் பஞ்சாயத்து இன்னும் முடியவில்லை.. எப்படியும் எம்பி தேர்தல் வரை இந்த ஒற்றை தலைமை விவகாரம் ஓடும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
கூட்டணியில் உள்ள பாஜகவும் நேரடியாக தலையிட்டு இவர்களை சமாதானப்படுத்தவில்லை.. ஆனால், மறைமுக அழுத்தங்களை தர துவங்கி உள்ளது.
அதிமுகவில் ஓபிஎஸ்..சேர்த்து கொள்ள தயார்! எடப்பாடி டீம் ’தலை’ க்ரீன் சிக்னல்! ஆனால் ஒரே ஒரு கண்டிஷன்?

கறார் கறார்
எடப்பாடியின் பிடிவாதம் குறையவே இல்லை.. பாஜக சொல்லியும் காதில் வாங்கவில்லை.. ஓபிஎஸ் + தினகரன் + சசிகலா 3 பேரையும் மட்டும் கட்சிக்குள் இணைத்து கொள்ளும்படி நிர்ப்பந்திக்க கூடாது என்றும், தன்னை பொதுச்செயலாளராக அங்கீகரிக்க, அறிவிக்க செய்யும்படியும் மேலிடத்தை கேட்டுக் கொண்டு வருவதாக தெரிகிறது.. பாஜகவை ஒரேடியாக எதிர்க்க முடியாத அளவுக்கு பலவித நெருக்கடிகள் கலந்த சூழல், எடப்பாடிக்கு இருந்தாலும்கூட, தன் முடிவில் உறுதியாக இருந்து வருகிறார்.

நியூ மெம்பர்
நான்தான் கட்சியின் பொதுச்செயலாளர் என்று எடப்பாடி ஒருபக்கம் சொல்லி வந்தால், நான் தான் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்று ஓபிஎஸ்ஸும் சொல்லி வருகிறார்.. அத்துடன், புதிதாக மாவட்ட செயலர்களையும் நியமித்துள்ளார்.. ஒவ்வொரு மாவட்டத்துக்கும், புதிய நிர்வாகிகளையும் நியமித்துள்ளதுடன், பொதுக்குழு உறுப்பினர்களும் புதிதாக நியமிக்கப்பட்டு உள்ளனர்... பெரும்பாலான மாவட்டங்களுக்கு, நிர்வாகிகள் நியமனம் நிறைவடைந்துவிட்டதாகவும், ஓரிரு மாவட்டங்களில் மட்டுமே நிர்வாகிகள் நியமனம் பாக்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது..

டூர்
அந்த மாவட்டங்களிலும் நிர்வாகிகள் நியமனத்தை முடித்துவிட்டு, மாவட்ட செயலர்கள் கூட்டத்தை கூட்ட, ஓபிஎஸ் முடிவு செய்துள்ளதாகவும் சில தினங்களுக்கு முன்பு செய்திகள் வெளியாகின.. கடந்த வாரம் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஓபிஎஸ், "அதிமுக சார்பாக விரைவில், மாவட்ட செயலர்கள் கூட்டம் நடக்க உள்ளது.. உறுதியாக மாவட்ட செயலர்கள் கூட்டம் முடிந்த பிறகு, பொதுக்குழு கூட்டம் நடக்கும். அனைத்து நிர்வாகிகளையும் அறிவித்ததும், அனைத்து மாவட்டங்களுக்கும் சுற்றுப்பயணம் செல்வேன் என்று நம்பிக்கையுடன் கூறியுள்ளார்.

3 ப்ளான்கள்
ஆக, மா.,செ.கூட்டம் + சுற்றுப்பயணம் + பொதுக்குழு என 3 விஷயங்களிலும் ஓபிஎஸ் உறுதியாகவே இருந்து வருவதாக இந்த பேட்டியின்மூலம் தெரியவந்தது.. ஆனால், இப்போது வேறுமாதிரியான தகவல்கள் கசிந்து கொண்டிருக்கிறது.. அதாவது, எடப்பாடி பழனிசாமியின் இடைக்கால பொதுச்செயலாளர் பதவிக்கு தடை கோரி ஓபிஎஸ் தாக்கல் செய்த வழக்கு வருகிற 30-ந்தேதி விசாரணைக்கு வருகிறது.. இந்த கோர்ட் முடிவு எப்படி இருக்க போகிறது என்பது தெரியவில்லை..

இடியாப்ப சிக்கல்
அதனால், அந்த முடிவை பார்த்துவிட்டு, அதற்கு பிறகு பொதுக்குழுவை கூட்டலாம் என யோசிக்கிறார்களாம்.. அநேகமாக ஜனவரி மாதம் நடத்தி கொள்ளலாம் என்று ஓபிஎஸ் தரப்பு முடிவெடுத்து இருப்பதாக தெரிய வந்துள்ளது... ஓபிஎஸ்ஸின் இந்த தயக்கத்துக்கு காரணம், கோர்ட்டு வழக்கில் சிக்கி விசாரணைக்கு ஆஜராக நேரிட்டால், மறுபடியும் சிக்கலுக்குள் சிக்க நேரிடும் என்று நினைக்கிறாராம்.. அதாவது இப்போதுவரை, தன்னை ஒருங்கிணைப்பாளர் என்றும், எடப்பாடியை இணை ஒருங்கிணைப்பாளர் என்றும்தான் ஓபிஎஸ் சொல்லி வருகிறார்..

கேம் சேஞ்ச்
அப்படி இருக்கும்போது, 2 பேரின் கையெழுத்து இருந்தால்தான், பொதுக்குழுவை கூட்ட முடியும்.. அதையும் மீறி பொதுக்குழுவை கூட்டினால், 2 பேரும் கையெழுத்து போடாமல், எப்படி பொதுக்குழுவை கூட்டினீர்கள் என்று கேள்வி எழக்கூடும்.. மேலும், தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெறாமலும் பொதுக்குழுவை கூட்ட முடியாது.. தவிர, கட்சியின் கிளை கழகம் முதல் மாவட்ட பொறுப்பு வரை தேர்தல் நடைபெற்றதா? அந்த தேர்தல் செல்லுமா? என்ற அடுத்தடுத்த கேள்விகளும் எழக்கூடும் என்பதாலேயே, இப்படி ஒரு முடிவை ஓபிஎஸ் தரப்பு எடுத்துள்ளது என்கிறார்கள்.

எக்ஸிபிஷன்
2 நாட்களுக்கு முன்பு, எடப்பாடியின் ஆதரவாளர் ராஜன் செல்லப்பா ஒரு பேட்டி தந்திருந்தார்.. அதில், "ஓபிஎஸ் என்ன புதிய கட்சி ஆரம்பித்து பொதுக்குழுவை கூட்டப்போகிறாரா? புதிதாக கட்சி ஆரம்பித்து அவர் பொதுக்குழுவைக் கூட்டினால் எங்களுக்கு என்ன வேண்டி இருக்கிறது. அவரைப் பொறுத்தவரை எங்களுக்கு அவர் தனிக்கட்சிதான். அவர் அதிமுக இல்லை. அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டுவிட்டவர். அதனால், அவர் என்ன பொதுக்குழு கூட்டினாலும், அது அதிமுக பொதுக்குழு அல்ல.. அது ஓபிஎஸ் கட்சியினுடைய பொதுக்குழு... அந்த பொதுக்குழுவால் எங்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை. எந்தப் பிரச்சனையும் இல்லை. நாங்கள் கவலைப்பட போவதுமில்லை. அவர் கூட்டுகிற பொதுக்குழு வேடிக்கையான பொதுக்குழு.. வினோதமான பொதுக்குழு.. ஒரு பொருட்காட்சி.. எக்ஸிபிஷன்.. அவ்வளவுதான்.'' என்று விமர்சித்திருந்தது இங்கு நினைவுகூரத்தக்கது.