எதுவுமே செய்யாத மத்திய அரசு.. கோல்போஸ்டை மட்டுமே மாத்துகிறது!ஆனந்த் ஸ்ரீனிவாசன் ஆக்ரோஷம்! பின்னணி
சென்னை: ‛‛எதுவுமே செய்யலேன்னா கூட ஒருநாள் 5 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக மாறுவோம்.. இப்படி goal post ஐ மாற்றி கொண்டே இருந்தால் 5 டிரில்லியன் அமெரிக்க டாலர் இலக்கை எட்டவே முடியாது'' என மத்திய பாஜக அரசை காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பொருளாதார நிபுணரான ஆனந்த் ஸ்ரீனிவாசன் விமர்சனம் செய்துள்ளார்.
இந்தியாவில் உள்நாட்டு உற்பத்தியை அதிகப்படுத்தவும், சுயசார்பு இந்தியாவை உருவாக்கும் வகையிலும் மத்திய அரசு திட்டங்களை தீட்டி வருகிறது.
மேலும் இந்தியா 5 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரத்தை விரைவில் எட்டும் எனக்கூறி பிரதமர் நரேந்திர மோடி, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்பட பிற அமைச்சர்கள் கூறி வருகின்றனர்.

5 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரம்
சமீபத்தில் கூட இந்திய தலைமை பொருளாதார ஆலோசகர் ஆனந்த நாகேஸ்வரன் மத்திய நிதியமைச்சகத்தின் 'ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்' நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார். அப்போது அவர் ‛‛2026-27ம் ஆண்டுக்குள் இந்திய பொருளாதாரம் 5 டிரில்லியன் டாலர்களை தாண்டும் என்று சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது. மேலும், ஒவ்வொரு 7 ஆண்டுக்கும் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி இரட்டிப்பாகும் பட்சத்தில் 2040ம் ஆண்டில் தனிநபர் வருமானம் 15 ஆயிரம் டாலர் அளவிலும், மொத்த உள்நாட்டு உற்பத்தி 20 டிரில்லியன் டாலராகவும் இருக்கும். எனவும் அவர் கூறினார். தற்போதைய சவால்களை எதிர்கொள்வதில் பிற நாடுகளை விட இந்தியா சிறந்த நிலையில் உள்ளது''என்றார்.

எதிர்க்கட்சிகள் விமர்சனம்
இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சனம் செய்தனர். இந்தியாவின் 5 டிரில்லியன் பொருளாதாரம் என்பது 2023-2024 காலக்கட்டத்தில் எட்டிவிடும் என முதலில் கூறிய பாஜகவினர் தற்போது 2026-27 என கூறுவதாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் உள்ளிட்டவர்கள் குற்றம்சாட்டினர். மேலும் பாஜக தங்களுக்கு ஏற்ப கோல்போஸ்டை மாற்றுவதாகவும் விமர்சனம் செய்தனர். அதோடு மட்டுமின்றி இந்தியாவின் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது என கூறி வருகின்றனர்.

இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி
இதற்கு வலு சேர்க்கும் வகையில் தான் அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்தியா ரூபாயின் மதிப்பு வரலாற்றில் இல்லாத வகையில் வீழ்ச்சியடைந்துள்ளது. தற்போதைய சூழலில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்தியா ரூபாயின் மதிப்பு ரூ.82யை தாண்டியுள்ளது. இதனை தடுக்கும் வகையில் மத்திய அரசு எந்த செயலையும் செய்யாமல் 5 டிரில்லியன் அமெரிக்க டாலரை இந்தியா எட்டும் என கூறி வருவதாக எதிர்க்கட்சியினர் கடுமையாக தாக்கி பேசி வருகின்றனர்.

ஆனந்த் ஸ்ரீனிவாசன் விமர்சனம்
இந்நிலையில் தான் மத்திய அரசின் 5 டிரில்லியன் பொருளாதார இலக்கை காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பொருளாதார நிபுணரான ஆனந்த் ஸ்ரீனிவாசன் விமர்சனம் செய்துள்ளார். இதுபற்றி அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‛‛எதுவுமே செய்யலேன்னா கூட ஒருநாள் 5 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக மாறுவோம்.. இப்படி goal post ஐ மாற்றி கொண்டே இருந்தால் 5 டிரில்லியன் அமெரிக்க டாலர் இலக்கை எட்டவே முடியாது'' என விமர்சனம் செய்துள்ளார்.
-
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான்












Click it and Unblock the Notifications