நாடு முழுக்க.. கொரோனா தடுப்பூசி செலுத்தும் எண்ணிக்கை பாதியாக சரிவு.. பற்றாக்குறையால் மக்கள் அவதி
சென்னை: இந்தியாவில் தினசரி கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை ஜூன் 21-ம் தேதி அடைந்த உச்சத்துடன் ஒப்பிட்டால், 50 சதவீதத்திற்கும் மேலாக குறைந்துள்ளது.
ஜூன் 21 அன்று ஒரு நாளில் 87 லட்சம் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன்பிறகு தடுப்பூசி எண்ணிக்கை ஏறும் என நினைத்தால் இறங்கத் தொடங்கியுள்ளது.
இப்போது, தினசரி தடுப்பூசி விகிதம் திங்கள்கிழமை நிலவரப்படி வெறும் 40 லட்சத்திற்கு குறைந்துள்ளது.

சாதனை அளவுக்கு பிறகு சரிவு
ஜூன் 21 ஆம் தேதி பதிவுசெய்யப்பட்ட 87 லட்சம் தடுப்பூசிகளில் 40 சதவிகிதத்திற்கும் அதிகமான பங்கு உத்தரபிரதேசம், மத்தியப் பிரதேசம், கர்நாடகா போன்ற அதிக மக்கள் தொகை கொண்ட சில மாநிலங்களில் பதிவானது. சாதனை அளவை காண்பிக்க பாஜக ஆளும் மாநிலங்கள் அன்று ஒரே நாளில் அதிக தடுப்பூசிகளை செலுத்தியதாகவும், அதற்கு மறுநாள் தடுப்பூசி எண்ணிக்கை குறைந்ததாகவும் கூட குற்றச்சாட்டு எழுந்திருந்தது. இப்போது வரும் புள்ளி விவரங்கள் தடுப்பூசி பற்றாக்குறையால் நாடு தத்தளித்து வருவதை காட்டுவதாக அமைந்துள்ளன.

தமிழக அமைச்சர் டெல்லி பயணம்
கடந்த வாரம், திங்களன்று, 52.76 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது, செவ்வாய்க்கிழமை 36.51 லட்சம் பேருக்கு வழங்கப்பட்டது. இது புதன்கிழமை 27.6 லட்சமாக குறைந்தது. தமிழ்நாட்டில் தடுப்பூசிகள் இல்லாத நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் டெல்லிக்கு சென்று தடுப்பூசிகள் வழங்கவேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்திடம், கோரிக்கை விடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தடுப்பூசி இயக்கம்
நாடு தழுவிய கோவிட் -19 தடுப்பூசி இயக்கம் இந்தியாவில் ஜனவரி 16ம் தேதி தொடங்கியது. முதல் கட்டத்தில், சுகாதார ஊழியர்கள் மற்றும் பிற அத்தியாவசிய முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. மார்ச் 1 முதல் தொடங்கப்பட்ட 2 ஆம் கட்டத்தில், 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் 45-59 வயதுக்குட்பட்ட இணை நோயுற்றவர்கள் தடுப்பூசி போட தகுதியுடையவர்களாக மாற்றப்பட்டனர். ஏப்ரல் 1 முதல், 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

மக்கள் ஆர்வம்
மே 1 முதல், கோவிட் -19 தடுப்பூசி கட்டம் 3ஐ அரசு அறிவித்தது. 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி பெற தகுதியுடையவர்களாக மாற்றப்பட்டனர். ஆனால், மக்கள் ஆர்வம் காட்டும் அளவுக்கு ஏற்ப தடுப்பூசி வாங்கப்படவில்லை என்பதுதான் இந்த நிலைக்கு காரணம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications