75வது சுதந்திர தினம்..போயஸ்கார்டனில் ரஜினிகாந்த் வீட்டு முன் பறக்கும் தேசியக்கொடி
சென்னை: 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு போயஸ்கார்டனில் நடிகர் ரஜினிகாந்த் தனது வீட்டின் முன்பு தேசிய கொடியை வைத்துள்ளார்.
நம் நாடு விடுதலை அடைந்ததை கொண்டாடும் வகையிலும் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், 75ஆவது சுதந்திர தின விழா, நடப்பாண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
இது பவள ஆண்டு என்பதால், கோலாகலமாக கொண்டாட மத்திய, மாநில அரசுகள் பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகின்றன. 'ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்' என்ற பெயரில் மத்திய அரசு இதனை கொண்டாடி வருகிறது.

வீடுகள் தோறும் மூவர்ணக்கொடி
இதையொட்டி மத்திய அரசு 'ஹர் கார் திரங்கா' எனப்படும் வீடுதோறும் மூவர்ணக்கொடி என்ற இயக்கத்தை அறிவித்தது. இதன்படி ஆகஸ்டு 13ஆம் தேதி முதல் 15ஆம்தேதிவரை வீடுகள்தோறும் தேசியக்கொடி ஏற்றுமாறு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் தேசியக்கொடி
நாட்டு மக்கள் அனைவரும் தங்களது இல்லங்களில் தேசியக் கொடியை ஏற்றி வைக்க வேண்டும் என்றும், ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் அப் போன்ற தாங்கள் அன்றாடம் பயன்படுத்தும் சமூக வலைதளங்களில் முகப்புப் படமாக தேசியக் கொடியை வைக்க வேண்டும் என்று, தான் வழக்கமாக பேசும் 'மனதின் குரல்' வானொலி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி வேண்டுகோள் வைத்ததார்.

நடிகர் ரஜினிகாந்த்
அதன் அடிப்படையில் பொது மக்களும் விளையாட்டு மற்றும் நடிகர்களும் தேசிய கொடியை முகப்புகளில் வைத்து வருகின்றனர். 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு சமுக வலைதளங்களில் முகப்புகளில் தேசிய கொடியை வைக்க வேண்டும்மென மோடியின் வேண்டுகோளின் அடிப்படையில் நடிகர் ரஜினிகாந்த் தனது டிவிட்டர் முகப்பில் தேசிய கொடியின் புகைப்படத்தை வைத்துள்ளார்.

கொடி ஏற்றிய ரஜினிகாந்த்
இந்நிலையில் தற்போது நடிகர் ரஜினிகாந்த் தனது வீட்டின் முன்பு தேசிய கொடியை ஏற்றி வைத்துள்ளார். நாடு முழுவதும் வீட்டு முன்பாக 13ஆம் தேதி முதல் தேசியக்கொடியை ஏற்றச்சொன்ன நிலையில் இன்றே தேசியக்கொடியை ஏற்றி வைத்து உள்ளார் நடிகர் ரஜினிகாந்த். ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் 'ஜெயிலர்' படத்தில் நடிக்கிறார். சில தினங்களுக்கு முன்பு ஆளுநரை சந்தித்து அரசியல் பேசியதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார் நடிகர் ரஜினிகாந்த்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications