8,000 ரூபாய் கூப்பன்.. என்ன வாங்கலாம்? இப்போது இந்த 'டிஸ்கஷன்'தான் ஓடுகிறது! ஸ்டாலின் சொன்ன மெசேஜ்!
வேலூர்: 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார் திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், இந்த நிலையில் இன்று கே.வி.குப்பம் தொகுதியில் காலையில் பிரச்சாரம் மேற்கொண்ட அவர் கலைஞர் கனவு இல்ல திட்ட பயனாளி ஒருவரின் வீட்டுக்குச் சென்று அவருடன் பேசினார். அப்போது இல்லத்தரசி 8,000 ரூபாய் கூப்பனில் என்ன வாங்க போகிறீர்கள்? என கேட்டறிந்ததாக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வேலூர் கந்தனேரியில் இன்று மாலை நடைபெறும் பிரச்சார பொதுக்கூட்டத்திற்கு வேலூருக்கு வருகை தந்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று காலை கே.வி.குப்பம் சட்டமன்ற தொகுதியில் நடை பயிற்சி மேற்கொண்டார்.
கே.வி குப்பம் தொகுதிக்கு உட்பட்ட, கேவி குப்பம் பஜார் வீதி, அம்பேத்கர் தெரு, கே.வி.குப்பம் பேருந்து நிலையம் கே வி குப்பம் திமுக வேட்பாளர் ராஜேஸ்வரி ஆதரித்து நடைப்பயிற்சி மேற்கொண்டு பெண்களிடம் கை கொடுத்து வாக்கு சேகரித்தார்.

நடை பயிற்சி போது அம்பேத்கர் நகர் பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு அவர் மாலை அணிவித்தார். பின்பு கே.வி.குப்பம் பஸ் நிலையத்தில் உள்ள ஒரு டீக்கடையில் டீ குடித்து அவர் வாக்கு சேகரித்தார். முதல்வர் மு க ஸ்டாலின் பிரச்சாரத்தின் போது பெண்கள் இளைஞர்கள் பொதுமக்கள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். மேலும் இன்று தமிழ் புத்தாண்டு என்பதால் ஸ்டாலின் அவர்கள் பொதுமக்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தனர்.
தொடர்ந்து கலைஞர் கனவு இல்லம் திட்ட பயனாளி ஒருவரின் வீட்டுக்கு சென்ற முதல்வர் ஸ்டாலின், அவருடன் சிறிது நேரம் உரையாடினார். அப்போது வீடு இல்லாத தங்களுக்கு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு வழங்கியதை நினைவுகூர்ந்த அந்த பெண் முதல்வர் ஸ்டாலினுக்கு கண்ணீர் மல்க நன்றி கூறினார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின்," இன்று, கே.வி. குப்பம் தொகுதியில் காலைப் பரப்புரையின்போது, கலைஞர் கனவு இல்லம் திட்டப் பயனாளி ஒருவரின் வீட்டுக்கு, அவரது அன்பான அழைப்பை ஏற்றுச் சென்றேன். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திலும் அந்தச் சகோதரி மாதம் ஆயிரம் ரூபாய் பெற்று வருகிறார். அவரது குழந்தைகளும் பள்ளியில் காலை உணவுத் திட்டத்தில் பயனடைவதாகச் சொல்லி மகிழ்ந்தார்.
"அடுத்து, இல்லத்தரசி 8,000 ரூபாய் கூப்பனில் என்ன வாங்கப் போகிறீர்கள்?" என அவரிடம் கேட்டேன். 2026 தேர்தல் Voting-க்கு முன்பாகவே, இல்லத்தரசி 8,000 ரூபாய் கூப்பனில் வீட்டுக்கு என்ன பொருள் வாங்கலாம்? எந்தக் கடையில் வாங்கலாம்? என்ற Voting தொடங்கியாச்சு. தமிழ்நாடு முழுக்க குடும்பங்களில் இப்போது இந்த 'டிஸ்கஷன்'தான் ஓடுகிறது.
இன்று, கே.வி. குப்பம் தொகுதியில் காலைப் பரப்புரையின்போது, கலைஞர் கனவு இல்லம் திட்டப் பயனாளி ஒருவரின் வீட்டுக்கு, அவரது அன்பான அழைப்பை ஏற்றுச் சென்றேன்.
— M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) April 14, 2026
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திலும் அந்தச் சகோதரி மாதம் ஆயிரம் ரூபாய் பெற்று வருகிறார். அவரது குழந்தைகளும் பள்ளியில் காலை… pic.twitter.com/wTgDRFMGcX
வீட்டுக்குத் தேவையான எந்தப் பொருளையும் நீங்க வாங்கிக்கலாம். ஆனா, அது முழுக்க முழுக்க என் சகோதரிகளின் 'choice'-ஆகத்தான் இருக்கணும். அவர்கள்தான் 'இல்லத்து அரசிகள்', 'குடும்பத்தலைவிகள்'! 2026 Voting-இல் "தமிழ்நாடு அணியா - டெல்லி அணியா?"என்று நான் கேட்கும்போது தமிழ்நாடு அணி என அனைவரும் சொல்வதைப் போல, இல்லத்தரசி டிஸ்கஷனில் வீட்டில் அனைவரும் 'பெண்கள்தான்' எனச் சொல்லணும், பெண்கள்தான் எப்பவுமே வெல்லணும்!" என கூறியுள்ளார்.
-
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்!












Click it and Unblock the Notifications