80s AI போட்டோக்கள் Trend.. மீசை வெச்சதுமே ஹிந்தி ஹீரோவாகும் ஆண்கள்.. பெண்களுக்கு மட்டும் சிக்கல் ஏன்?
சென்னை: "ஆண்களின் மீசை, ஹேர் ஸ்டைல் மட்டும் போதும்.. 80s தோற்றம் அப்படியே வந்துவிடுகிறது. ஆனால் பெண்களுக்கு புடவை, நகைகளைத் தாண்டி retro feel கொடுக்க வேறென்ன இருக்கிறது?" என்று கேட்கும் அளவுக்கு, இணையத்தில் வரும் 80s AI போட்டோக்களை பார்த்து ஒரு சுவாரஸ்யமான ஒப்பீடு எழுந்திருக்கிறது... சோஷியல் மீடியா பக்கம் போனாலே, இந்த 80s AI போட்டோக்கள்தான் நம் கண்களை முழுசாக பறித்து கொள்கின்றன...!!!
நேற்று முதல் இந்த retro போட்டோக்களை தொடர்ந்து பார்த்தவர்களின் கவனத்தையும் இதுபோன்ற விஷயங்கள்தான் ஈர்த்திருக்கின்றன. அதாவது ஒருவரின் இப்போதுள்ள எடுத்துக்கொண்டு, அவர் 1980களில் இருந்திருந்தால் எப்படி இருப்பார்? என்பதை போல மாற்றிக் காட்டுவதுதான் இந்த புதிய 80s AI trend.

முகம், வயது, அடையாளம் போன்றவற்றை முடிந்தவரை அப்படியே வைத்துக்கொண்டு, அந்த காலத்துக்கே உரிய டிரஸ்கள், ஹேர் ஸ்டைல், செருப்பு, ஷூ, பின்னணி, போட்டோவின் கலர் உட்பட மொத்தத்தையும் இது மாற்றுகிறது.
அசத்தும் 80s ஆண்கள் ஏஐ ஸ்டைல்
அதிலும் ஆண்களின் போட்டோக்களில் சில விஷயங்கள் உடனடியாக 80s காலத்தை பளிச்சென நினைவுபடுத்துகின்றன. அடர்த்தியான மீசை, வித்தியாசமான ஹேர் ஸ்டைல், கூலர்ஸ், denim உடைகள், நீளமான காலர் வைத்த சட்டைகள், மோட்டார் பைக்குகள் என ஒவ்வொரு விஷயமும் அந்த காலத்து ஹீரோக்களை நினைவுபடுத்துகிறது. அத்துடன், சினிமா பாணியில் போட்டோவுக்கு போஸ் கொடுத்து, கொஞ்சம் கம்பீரமான தோற்றமும் சேர்ந்துவிட்டால், டிட்டோ பழைய சினிமா காட்சி போலவே மாறிவிடுகிறது.
அதேபோல பெண்களின் போட்டோக்களிலும் புடவை, நகைகள், தலையில் பெரிய கொண்டை, ரெட்டை ஜடை உள்ளிட்ட ஹேர் ஸ்டைல்கள், அப்போதைய கலர்புல் உடைகள் போன்றவை 80s feel-ஐ உருவாக்குகின்றன... இருந்தாலும், இதில் சின்ன விஷயம் மிஸ்ஸானாலும், பழைய காலத்து போட்டோ என்ற உணர்வு குறைந்துவிடுகிறது,.. அதனால் சில பெண்களின் போட்டோக்கள், பழைய காலத்து போட்டோ போலத் தெரிந்தாலும், 80களுக்கே உரிய ஸ்டைலான தோற்றம் இல்லை.
பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்
சோஷியல் மீடியாவில் ஓரிரு ஆண்களின் போட்டோக்களை பார்த்தால், உண்மையிலேயே அந்த காலத்து இந்தி நடிகர்களை போலவே உள்ளது.. குறிப்பாக அந்த மீசையும், தலைமுடி அலங்காரமும் அவர்களுக்கு அப்படியே 80களின் தோற்றத்தைக் கொண்டு வந்துவிட்டது. ஆனால் பெண்களின் போட்டோக்களில் பழைய காலத்து தோற்றம் தெரிந்தாலும், அந்தக் காலத்துக்கே உரிய நவீனமான அழகு எல்லா போட்டோக்களிலும் வரவில்லை..
சுருக்கமாக சொன்னால், பெண்களின் போட்டோக்களைவிட, ஆண்களின் 80கள் போட்டோக்களே டாப் லுக்கிங்கில் உள்ளது. அதனால்தான், "பெண்களே, பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்" என்று ஆண்கள் கமெண்ட்களை பதிவிட்டு கொண்டிருக்கிறார்கள்.
இந்த டிரெண்டு ஏன் வேகமாக பரவுகிறது
இந்த டிரெண்டு ஏன் இவ்வளவு வேகமாக பரவுகிறது தெரியுமா? இதற்கு ஒரு காரணம் இருக்கிறது. 1980களின் சினிமா, ஃபேஷன், கலர்ஃபுல் ஆடைகள், பெரிய ஹேர்ஸ்டைல், ஃபிலிம் கேமராவின் தனித்துவமான நிறங்கள் என அந்த காலத்துக்கென்று ஸ்பெஷல் அடையாளமே இருந்திருக்கிறது.. இப்போது ஒரே போட்டோவை வைத்து, "நான் 80களில் இருந்திருந்தால் எப்படி இருந்திருப்பேன்?" என்ற கேள்விக்கு கற்பனையான பதிலாக, அந்த காலத்து தோற்றம் கண்ணிமைக்கும் நேரத்தில் நம் கண் முன்னே விரிகிறது.
அதனால்தான் நடிகர்கள், நடிகைகள், சோஷியல் மீடியா பிரபலங்கள் மட்டுமல்லாமல், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் உள்ளிட்ட அரசியல்வாதிகளும் இந்த டிரெண்டில் இணைந்து அசத்தி வருகிறார்கள்.
சுவாரஸ்யமான என்டெர்டெயின்மெண்ட்
80s காலத்து லுக்கை மீண்டும் உருவாக்கிய இந்த AI டிரெண்டில், ஆண்களின் மீசையும் ஹேர்ஸ்டைலும் அவர்களை அப்படியே பழைய ஹிந்தி ஹீரோக்கள் போல காட்டிவிடுவதும், பெண்களின் போட்டோக்களில் மட்டும் AI-யின் கற்பனை வேறு பாதையில் சென்றுவிடுவதும்தான், நெட்டிசன்களின் கவனத்தை தற்போது ஈர்த்து கொண்டிருக்கிறது.. மொத்தத்தில் இந்த 80's டிரெண்டிங், சோஷியல் மீடியாவில் சுவாரஸ்யமாகவே நகர்ந்து கொண்டிருக்கிறது..!!


Click it and Unblock the Notifications
