சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

85 வயதிலும் தள்ளாடியபடியே திமுக கொடி பிடித்த நாராயணப்பா.. ஸ்டாலினுக்காக உயிரையும் கொடுக்க தயாராம்!

Google Oneindia Tamil News

சென்னை: 85 வயதிலும் தள்ளாடியபடியே திமுக கொடி பிடித்துக் கொண்டு இன்று சென்னையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுள்ளார் முதியவர் நாராயணப்பா.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை கண்டித்து நாடு முழுவதும் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. இந்த நிலையில் குடியுரிமை சட்டத்தை கண்டித்தும், அதற்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் வாக்களித்த அதிமுகவை கண்டித்தும் திமுக சார்பில் இன்று தோழமை கட்சிகளுடன் பேரணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இதையடுத்து ஸ்டாலின், கனிமொழிவைகோ, ப சிதம்பரம், திருமாவளவன், கீ வீரமணி உள்ளிட்டோர் இந்த பேரணியில் கலந்து கொண்டனர். இந்த பேரணியில் 85 வயதில் முதியவர் ஒருவர் கலந்து கொண்டுள்ளார். அவரது பெயர் நாராயணப்பா.

பிரிக்காதே பிரிக்காதே மண்ணின் மக்களை பிரிக்காதே... திமுக பேரணியில் தலைவர்கள் முழக்கம்பிரிக்காதே பிரிக்காதே மண்ணின் மக்களை பிரிக்காதே... திமுக பேரணியில் தலைவர்கள் முழக்கம்

ரயிலில்

ரயிலில்

இதுகுறித்து அவர் கூறுகையில் நான் ஒசூர் சமத்துவபுரத்திலிருந்து வருகிறேன். எனக்கு 85 வயதாகிறது. நான் பரம்பரை பரம்பரையாக திமுகவில் இருக்கிறேன். ஒசூரிலிருந்து சென்னைக்கு காலை ரயிலில் வந்தேன்.

ஸ்டாலின்

கருணாநிதிக்காக எனது உயிரையும் தியாகம் செய்ய தயாராக உள்ளேன். கருணாநிதி இல்லாவிட்டால் என்ன தளபதி ஸ்டாலின் இருக்கிறாரே. இருவரும் ஒருவர்தான் எனக்கு.

போராட்டங்கள்

போராட்டங்கள்

ஈழத்தமிழர்கள், சிறுபான்மையினருக்கு நீதி கிடைக்கவில்லை என கூறி இந்த போராட்டம் நடைபெறுகிறது. நான் எல்லா போராட்டங்களிலும் கலந்து கொள்கிறேன் என தெரிவித்தார்.

நாராயணப்பா

நாராயணப்பா

இந்த பெரியவர் கடந்த 2018-ஆம் ஆண்டு சென்னை வந்த நரேந்திர மோடிக்கு எதிராக கருப்புக் கொடியை காட்டினார். தள்ளாத வயதிலும் ஒசூரிலிருந்து சென்னைக்கு வந்த நாராயணப்பாவை கட்சியினர் மெய்சிலிர்க்கின்றனர்.

English summary
Narayanappa 85 years old DMK cadre who participates in DMK rally from Hosur to Chennai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X