நொடியில் மரணம்! ரயில் சக்கரத்தில் சிக்கி சிதைந்த மாணவன்! சாவுக்கு முன்னர் செய்த சாகசத்தை பாருங்க..!
சென்னை : சென்னை அருகே ரயில் சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், உயிரிழந்த மாணவன் ரயில் படிக்கட்டில் நின்றவாறு பல்வேறு சாகசங்களை செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரப்பப்பட்டு வருகிறது.
திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு அடுத்த ஓரத்தூர் பகுதியை சேர்ந்த அடைக்கலம் என்பவரது மகன் நீதிதேவன், சென்னை பிரசிடென்சி கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயின்று வந்தார்.
இந்த நிலையில் கடந்த 26 தேதி வழக்கம் போல் கல்லூரியை முடித்துவிட்டு ரயிலில் நீதிதேவன் வீட்டிற்கு திரும்பினார்.

மாணவன் மரணம்
வேப்பம்பட்டு ரயில் நிலையத்தில் தனது கல்லூரி நண்பரும் நீதிதேவனும் பிளாட்பார்மில் இறங்கியுள்ளனர், பின்னர் இருவரும் ரயிலில் ஏற தனது நண்பன் ரயிலில் ஏறி விட்டாரா என்பதை பார்ப்பதற்காக திரும்பிப் பார்த்தபொழுது நீதிதேவனின் கால் சறுக்கி ரயிலுக்கு அடியில் சிக்கியதில் நீதிதேவன் பலத்த காயமடைந்து திருவள்ளூர் அரசு தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

ரயிலில் சாகசம்
சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்கள் நீதிதேவன் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனால் அவரது பெற்றோர், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்நிலையில் இறந்த கல்லூரி மாணவன் நீதிதேவன் சில தினங்களுக்கு முன் தனது கல்லூரி நண்பர்களுடன் ரயிலில் ஜன்னலில் கால்களை வைத்துக் கொண்டு ரயில் கூரைக்கு நிகராக நின்று கொண்டு சாகசம் செய்துள்ளார்.

தொடரும் நிகழ்வுகள்
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது பரவி வைரலாகி வருகிறது. இதுபோன்று மாணவர்கள் பேருந்து ரயிலில் சாகசம் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் அறிவித்திருந்தும் இது போன்ற சாகசங்களில் மாணவர்கள் ஈடுபட்டு வருவது இது தொடர்கதையாகி உள்ளது.

பெரும் சோகம்
இதுபோன்ற சாகசங்களில் மாணவர்கள் ஈடுபடும் ஒருசில மாணவர்கள் விபத்துக்குள்ளாகி உயிரிழக்க நேரிடுகிறது. தற்போது ரயிலில் கால் இடறி விழுந்து உயிரிழந்த கல்லூரி மாணவனின் சம்பவம் கல்லூரி மாணவர்கள் மற்றும் அவரது பெற்றோர் உறவினர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
நிலத்தை உடனே கைப்பற்ற வேண்டும்.. விஜய் வெளியிட்ட புது உத்தரவு.. 15 திட்டங்கள் 'Waiting'! -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications