தேனியில் வங்கி மேலாளரிடமே ஒரே நிமிடத்தில் 1.75 லட்சம் சம்பாத்தியம்.. கிரெடிட் கார்டால் ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

தேனி: நீங்கள் எவ்வளவு புத்திசாலி என்றாலும், எளிதாக உங்களை யாரால் வேண்டுமானாலும் ஏமாற்ற முடியும். அவர் கூறுவதில் பாதி பொய், பாதி உண்மை இருந்தாலே போதும்.. அது உங்களுக்கு தேவையானதாக இருந்தால் நிச்சயம் ஏமாறுவீர்கள்.. இதுதான் இயற்கை நியதி.. இதனை பயன்படுத்தி தான் பலர் ஏமாற்றுகிறார்கள்.ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருப்பார்கள் என்று கூறுவார்கள். அதுதவறு.. ஏமாற்றுபவர்கள் இருக்கும் வரை ஏமாறுபவர்கள இருப்பார்கள் என்பதே சரி. தேனியில் கிரெடிட் கார்டு அதிகாரி பேசுவதாக கூறி வங்கி மேலாளரிடமே ரூ.1.75 லட்சம் 'அபேஸ்' செய்துள்ளார்கள். எப்படி என்பதை பார்ப்போம்

பொதுவாக உங்களின் பெயர், போன் நம்பர், மற்றும் உங்களி வங்கியின் கணக்கு, நீங்கள் வைத்துள்ள கிரெடிட் கார்டு விவரங்களை எந்த காரணம் கொண்டும் பொதுவெளியில் லீக் ஆகாமல் பார்த்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு வரும் ஸ்பேம் கால்களை அலர்ட் செய்தாவது வைத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் எப்படியாவது உங்களின் விவரங்களை வைத்து உங்களுக்கு ஏதாவது ஒரு கும்பல் வலை விரிக்கவே செய்யும்.

A gang in Theni swindled 1 75 lakh from a bank manager in just one minute

உங்களை அழைத்து கிரெடிட் கார்டு கஸ்டமர் கேரில் இருந்து பேசுவதாக கூறுவார்கள். உங்கள் காரடில் ரூ.8,000 கட்டணம் விதிக்கப்பட உள்ளதாக கூறி உங்களை பயமுறுத்துவார்கள். அதை உண்மை என்று நம்பி அவர்கள் சொல்வதை மட்டும் செய்தால், உங்களிம் பணம் அவ்வளவு தான். தேனி வங்கி மேலாளருக்கும் அப்படித்தான் நடந்துள்ளது.

தேனி அல்லிநகரத்தை சேர்ந்த 32 வயதாகும் அன்சார், ஒரு பிரபல தனியார் வங்கியில் மேலாளராக உள்ளார். இவர் மற்றொரு வங்கியில் கிரெடிட் கார்டுகள் வாங்கி பயன்படுத்தி வருகிறார். கடந்த 22-ந்தேதி அவருடைய செல்போன் எண்ணுக்கு வங்கி அதிகாரி பேசுவதாக ஒருவர் பேசியிருக்கிறார். அவர், 'உங்கள் கிரெடிட் கார்டில் கார்டு பாதுகாப்பு திட்டம் செயல்பாட்டில் உள்ளது. அது பற்றி பேச வேண்டும்' என்று கூறியிருக்கிறார்

மேலும், அது தொடர்ந்து ஆக்டிவ் ஆக இருந்தால் ரூ.8 ஆயிரம் பிடித்தம் செய்யப்படும் என்றும், விருப்பம் இல்லை என்றால் டிஆக்டிவேட் செய்யுங்கள் என்றும் கூறினார். பின்னர், அந்த நபர் கூறியபடி, ஒரு இணையதள இணைப்புக்கு சென்ற போது, அதில் ஒரு ஆப் டவுன்லோடு ஆகி உள்ளது. அந்த ஆப்பில் தனது விவரங்களை அவர் பதிவிட்டார்.

இந்நிலையில், அன்சாரின் கிரெடிட் கார்டுகள் மற்றும் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.1 லட்சத்து 76 ஆயிரத்து 900 மோசடி நபர்களால் அடுத்த சில நிமிடங்களில் செய்யப்பட்டது. பணத்தை இழந்ததை அறிந்த அவர் உடனடியாக 1930 என்ற சைபர் கிரைம் உதவி எண்ணுக்கு தொடர்பு கொண்டு விவரங்களை கூறியுள்ளார். இதுகுறித்து அவர் தேனி சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயபாண்டி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். எந்த சூழலிலும் ஒடிபி மற்றும் கார்டு விவரங்களை யாருக்குமே கூறாதீர்கள்.. அப்படி கூறினால் உங்கள் பணத்தை அவர்களால் எளிதாக திருடிவிட முடியும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+