நடிகர் விஜய்க்கு ஒரு நியாயம்.. சென்னை மேயருக்கு ஒரு நியாயமா? ராஜேஸ்வரி ப்ரியா ஆதங்கம்!
சென்னை: போக்குவரத்து விதிகளை மீறி கான்வாயில் தொங்கிக் கொண்டு சென்றதற்காக சென்னை மேயர் ப்ரியா ராஜனுக்கு காவல்துறை அபராதம் விதிக்குமா என சமூக ஆர்வலரும், அனைத்து மக்கள் அரசியல் கட்சித் தலைவருமான ராஜேஸ்வரி பிரியா வினவியுள்ளார்.
நடிகர் விஜய்க்கு ஒரு நியாயம் சென்னை மேயருக்கு ஒரு நியாயமா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில் கூறியிருப்பதாவது;

பெண்கள் அரசியலுக்கு
பெண்கள் அரசியலுக்கு வருவது என்பதும் ஒரு பதவியில் அமர்வது என்பதும் இன்றளவும் சாதாரணம் இல்லை.சட்ட மன்றத்தில் வெறும் 5 சதவீத பெண்களே உள்ளனர் . இப்படி படிகட்டில் தொங்க வேண்டும் என்றால் எந்த பெண்ணும் அரசியலுக்கு வருவதை விரும்பமாட்டாள். மேயர் பிரியா சிறிய வயதில் தனக்கு கிடைத்த பதவியை புரிந்து கொள்ளாமல் கட்சிக்கு கொத்தடிமையாக இருப்பதையே பெருமையாக நினைக்கிறார் என்பது மன வேதனை.

குடை பிடிப்பது
குடை பிடிப்பது, அமைச்சர் ஒருவரால் கதை விடு கதை விடு என்று ஏளனப்படுத்தபடுவது,உதயநிதி அவர்களின் படத்தை அரசு அலுவலகத்தில் நாற்காலியின் பின்புறம் வைத்துகொண்டு அதற்கு விளக்கம் கொடுப்பதெல்லாம் சுய மரியாதை மண்ணோடு மண்ணாக போய்விட்டதா என்று கேட்க தோன்றுகிறது.

திராவிட மாடலுக்கே சொந்தம்
மக்களால் கவுன்சிலராக மட்டும் தேர்ந்தெடுக்கபட்டு பிறகு கட்சியால் மேயராக தேர்ந்தெடுக்கபட்ட தாங்கள் சென்னைக்கு மேயர் என்பதை மறந்து கட்சிக்கு விசுவாசி என்பதை மட்டுமே மனதில் வைத்து செயல்படுவது மக்களுக்கு ஏமாற்றத்தினை உருவாக்கியுள்ளது.அது மட்டுமா சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி அவர்களையும் கான்வாய் காரில் தொங்கவிட்ட பெருமை திராவிட மாடலுக்கே சொந்தம்.எந்த பதவியாக இருந்தாலும் எங்கள் குடும்பத்திற்கு அடிமைகள்தான் என்பதனை தெளிவுபடுத்தியுள்ளனர்.

நடிகர் விஜய் காருக்கு
போக்குவரத்து விதிமுறைகள் குறித்து பேசுவதற்கும் மாணவர்களை படிகட்டில் தொங்க வேண்டாம் என்று நடவடிக்கை எடுப்பதற்கும் என்ன தகுதி இருக்கிறது ஆட்சியாளர்களுக்கு? நடிகர் விஜய் காருக்கு ஸ்டிக்கர் ஒட்டியதற்கு அபராதம் விதித்து நாங்கள் சரியாக செயல்படுகிறோம் என்று விளம்பரபடுத்தி கொள்ளும் காவல்துறை, அதிகாரத்தில் உள்ளவர்கள் கான்வாயில் தொங்குவதற்கு அபராதம் விதிக்க முன் வருமா?
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications