கன்னத்தை கிள்ளிய பெண்.. வெட்க சிரிப்பில் ஸ்டாலின்.. கனிமொழியை கையை பிடித்த பாட்டி.. பாச மழையப்பா!

கிருஷ்ணகிரி பிரச்சாரத்தில் ஸ்டாலின் கன்னத்தை பெண் ஒருவர் கிள்ளினார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: மறைந்த கருணாநிதியின் பிள்ளைகளை தமிழக மக்கள் அளவளாவி கொஞ்சி மகிழ்ந்து வருகிறார்கள்.

திமுக தரப்பில் பிரச்சாரம் படுசூடாக நடந்து வருகிறது. திமுக தலைவர் முக ஸ்டாலின், எம்பி கனிமொழி என ஆளுக்கொரு பக்கம் ஓட்டு வேட்டையில் இறங்கி உள்ளனர்.

இதில் கனிமொழி தூத்துக்குடி மக்களிடம் கடந்த 3 வருடங்களாக நெருங்கி தொடர்பில் இருந்து வந்தார் அவர்களின் பிரச்சனைகளில் கலந்துகொண்டு தனக்கான ஆதரவை தவறாமல் தெரிவித்து வந்தார்.

பாச மழை

பாச மழை

இந்நிலையில் வேட்பாளராக அதே தொகுதியில் அறிவிக்கப்படவும், கனிமொழிக்கான சாதகம் மேலும் அதிகமாகிவிட்டது! இதனால் செல்லும் இடமெல்லாம் மக்கள் பாசத்தை கனிமொழி மீது பொழிந்து வருகிறார்கள். ஒரு கூட்டத்தில் கனிமொழியின் சேலை முந்தானையை ஒரு குழந்தை ஆசையாக இழுத்து வாஞ்சையை வெளிப்படுத்தியது.

ஒற்றி கொள்கிறார்

ஒற்றி கொள்கிறார்

இப்போது ஒரு பாட்டி, கனிமொழியின் இரு கைகளையும் இறுக்கமாக பிடித்து கொள்கிறார். கைகளை பற்றும்போதே உணர்ச்சிவசப்படுகிறார் பாட்டி. பிறகு கனிமொழியின் கைகளை அப்படியே கொண்டு சென்று தனது கண்களில் ஒற்றிக் கொள்கிறார். இதனால் பாட்டி மட்டுமல்ல.. கனிமொழியும் சேர்ந்தே உணர்ச்சிவசப்படுகிறார்.

வாக்கிங்-டாக்கிங்

வாக்கிங்-டாக்கிங்

இதைவிட டீ-ஷர்ட்டுடன் கலக்கல் பிரச்சாரம் செய்து வரும் ஸ்டாலினுக்கு செல்லும் இடங்களில் ஏகப்பட்ட மவுசு. சாலைகளில், கடைத்தெருக்களில், ஸ்டாலின் வாக்கிங் செல்லும்போது, மக்களால் இவரை அணுகி பேச முடிவதால் அதிக சந்தோஷப்படுகிறார்கள். மதுரை பிரச்சாரத்தில் ஸ்டாலின் மேடையில் இருக்க, ஒரு பாட்டி கூட்டத்திலிருந்து முண்டியடித்து, "உன்னை தொட்டு பார்த்தா போதும் ராசா" என்று சொல்லி அவரது கையை கெட்டியாக பிடித்து கொண்டது.

டீ கிளாஸ்

டீ கிளாஸ்

இப்படித்தான் கிருஷ்ணகிரி தொகுதி வாக்கிங் - டாக்கிங்கின்போது, ஒரு கடையில் ஸ்டாலின் டீ சாப்பிட பெஞ்சில் வந்து அமர்கிறார். கையில் சூடாக டீகிளாஸ் தரப்படுகிறது. இரு பக்கமும் குட்டி குழந்தைகள் 2 பேர் ஸ்டாலினை நெருக்கியபடி உட்கார்ந்திருக்கிறார்கள். அப்போது அவர் அருகே ஒரு பெண்மணி வந்து நின்றார்.

கன்னத்தை கிள்ளினார்

கன்னத்தை கிள்ளினார்

சுற்றி நிறைய பேர் இருக்கிறார்களே, தலைவர் ஒரு டீயை சூடா குடிச்சு முடிக்கட்டும் என்றெல்லாம் நினைக்கவில்லை. உரிமையாக வந்து ஸ்டாலின் கன்னத்தை பிடித்து செல்லமாக கிள்ளுகிறார் அந்த பெண்மணி. ஸ்டாலினும் வெட்கப்பட்டு அதை சிரித்தபடியே ஏற்று கொள்கிறார்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+